ரத்தம் கொதிக்குது?

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் கூட்டாக தேவர் நினைவிடத்தில் மரியாதை. துரோகத்தை வீழ்த்த மூவரும் இணைந்து தேர்தல் பணியாற்ற உள்ளதாக அறிவித்ததால் அதிமுகவில் பரபரப்பு.

துரோகிகளால் 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
செறிவூட்டப்பட்ட அரிசிக்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாக அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு.
நான்காவது முறையாக நிரம்பியது தென்காசி அடவிநயினார் அணை. அனுமன் நதி ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்.
சென்னையில் நாய்களை கண்காணிக்க மாநகராட்சி புதிய திட்டம். தெருநாய்கள், வளர்ப்பு நாய்களுக்கு “மைக்ரோ சிப்” பொருத்த முடிவு.
பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு நெருங்குவதால் தீவிரமடையும் பரப்புரை.. அரசியல் தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை சூறாவளி பிரச்சாரம்.
பீகார் பரப்புரையில் இந்தியா கூட்டணி ட்சிகளை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி. வாக்குகளுக்காக நடனமாடச் சொன்னாலும் பிரதமர் மோடி ஆடுவார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம். வரும் 24-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் குடியரசுத் தலைவர்
சென்னையைச் சேர்ந்த இளம்பரிதி 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை. சாம்பியன் கிரீடத்தில் மற்றொரு ரத்தினம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
பீகாரில்,10 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் நிதி வழங்கிய விவகாரம். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தேஜஸ்வி கேள்வி

ஸ்விக்கி நிறுவனத்திற்கு இரண்டாவது காலாண்டில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. பங்குச் சந்தை மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு. 

 ரஷ்யா, சீனாவுக்கு போட்டியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி. 33 ஆண்டுகளுக்குப் பின் அணு ஆயுத சோதனை நடத்த உத்தரவு.
ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தகுதி மோடிக்கு துளியும் கிடையாது.

தனது ஆட்சிக் குட்பட்ட தமிழ்நாடுக்கு சலுக,நிதி ஒதுக்குவதில் எப்போதும் காழ்ப்புணர்ச்சிதான்.

அதை இங்குள்ள சங்கிகளும் தமிழர்களாக இருந்தாலும் தட்டிக் கேட்கதில்லை.மாறாக முட்டுக் கொடுப்பதையே வழதை,சேவை என செய்கிறார்கள்.அதை அவமானமாக நினைப்பதும் இல்லை.

ஆனால் அதுமட்டுமில்லாமல் மோடியும்,,அமித் சா வும் வடமாநிலங்களில் தேர்தல் நடக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டையும்,தமிழர்களையும் தேவையே இல்லாமல் தாக்கிப்  பரப்புரை செய்கிறார்கள்.ண

ஒடிசா தேர்தலில் பூரி ஜெகனாதர் கோவில் கருவூலச்சாவி தமிழர்கள் திருடி மதுரைக்கு கொண்டுபோய் விட்டார்கள் என பாண்டியன் என்ற தமிழரைத் தாக்கிப்பேச ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்றார்.

தற்போது பீகார் தேர்தல் பரப்புரையில் தமிழ்நாட்டிற்கு பிழைக் வந்த பீகாரிகளை தமிழர்களும்,தி.மு.க,வினரும் கொடுமைப்படுத்தி வருவதாக அருள்வாக்கை மோடி பரப்புரையாக்கிப் பேசிவருகிறார்.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல்.

இங்கு வந்து வெக்கமே இல்லாமல் நாவில் தேனொழுக பேச வருவார்கள்.

அப்போதாவது இங்குள்ள தமிழ் சங்கிகள் வாயைத்திறந்து ஏதேனும் கேட்டார்களா?

ஆளுக்கு பதினைந்து லட்சம் போடுவதுமுதல்  பொய்களைக் கூறி ஆட்சிபிடித்த சாவர்கர் வம்ச சனியன்கள்தானே சௌகிதார் மோடி குடும்பத்தார்.

தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

குமரி முதல் இமயம் வரை விரிந்த இந்த இந்திய நாடு எத்தனையோ பிரதமர்களை பார்த்திருக்கிறது; ஆனால் மத, இன, மொழி, சாதிய அவதூறுகளை தேர்தல் வெற்றிக்காக மேடைகளில் பரப்புவதும், அதனையே முழு நேர தொழிலாக செய்யும் பிரதமரை இப்போது தான் இந்திய நாடு பார்க்கிறது. 

முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார் பிரதமர் மோடி.

பின்னர், ஒடிசா மாநில தேர்தல் பரப்புரையின் போது, பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி, தமிழர்களை திருடர்களாக சித்தரித்தார் பிரதமர் மோடி.

அப்போதே கடுமையான கண்டனங்களை தமிழ்நாடு எழுப்பிய போதும் அவர் திருந்தியதாக தெரியவில்லை. இப்போது மீண்டும் “தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக” தேர்தல் பிரச்சார மேடையிலேயே வெறுப்பு பேச்சை கக்கி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் கல்வி - வேலைவாய்ப்பு - சுகாதார கட்டமைப்பு இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பதால்தான் பீகார் உள்ளிட்ட பல்வேறு வடமாநில தொழிலாளர்களும் இங்கே வருகின்றனர்; தமிழ்நாடு அரசு அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்தையும் கவனித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசையும், மாநிலத்தையும் அவர்கள் பாராட்டிய காணொளிகளும் ஏராளம் உண்டு.

இதனை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல், தேர்தல் பரப்புரையில் பேச கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் எதுவும் இல்லாததால், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் வெற்றி பெறலாம் என மக்களிடையே பகை உணர்வையும் - மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல! தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழ்நாட்டுக்கு வந்தால் திருவள்ளுவரை பிடிக்கும், தமிழை, தமிழர்களை பிடிக்கும் என வேடம் போடுவதும், வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டு மக்களை திருடர்களாக, மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்! இல்லையெனில் தமிழ்நாடு தக்க பாடம் புகட்டும்!

ரத்தம் கொதிக்குது?

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூன்று பேரும் வலியுறுத்தி வந்த நிலையில் மூன்று பேரையுமே இணைத்து வைத்திருக்கிறது பசும்பொன்.அந்நிகழ்வு பழனிசாமி ரத்த அழுத்தத்தை அதிகப் படுத்தியுள்ளது.

இதில் ஒரு பரபரப்பு என்னவென்றால் அதிமுகவில் இருந்துகொண்டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கைகோர்த்திருக்கிறார் செங்கோட்டையன்.  இதில் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்தார் செங்கோட்டையன். பசும்பொன் அருகே நெடுங்குளத்தில் இவர்களுடன் டிடிவி தினகரனும் இணைந்தார்.

தேவர் ஜெயந்தி அதிமுகவின் அரசியல் களமாக மாறி இருக்கிறது. இது பிரிந்தவர்கள் இணைப்புக்கான ஒரு பாலம் என்று கருதுகின்றனர் அதிமுக சீனியர்கள்.  

ஒருங்கிணைப்பை வலியுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார் செங்கோட்டையன்.  அந்த சூழலி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து பேசினர்.  

ஒருங்கிணைப்புக்காக  செங்கோட்டையன் எடுத்து வந்த நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த பழனிசாமி,  கட்சி தலைமைக்கு எதிராக நடந்துகொள்வதாகக் கூறி, செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை பறித்தார்.   

இதையடுத்து அமைதியாக இருந்து வந்த செங்கோட்டையன் இன்று மதுரையில்  ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.  அதன் பின்னர் பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் ஒரே காரில் பசும்பொன் பயணம் சென்றனர்.

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவருடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணித்ததால் அதிமுகவில் இது பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறார் பழனிசாமி? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

பசும்பொன்னில்   ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சசிகலாவை சந்திக்க உள்ளனர் என்றும் தகவல்.

இந்த விவகாரத்தில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பாரா பழனிசாமி? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, கட்சியில் இருந்து வெளியேற்றச் சொல்லி அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இப்படி ஒரு  அதிரடி திட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார் செங்கோட்டையன் என்கிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி.

அதே நேரம் பாஜகவின் ஸ்கெட்ச் இது என்பதால் பழனிசாமியால் இப்படி அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது கமலாலயம் வட்டாரம்.

அதற்கேற்றார் போல், பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் ஒரே காரில் பயணம் குறித்த கேள்விக்கு, ஒரே காரில் வருவதாக எனக்கு இன்னும் தெரியவில்லை. தெரிந்ததும் அது பற்றி சொல்கிறேன் என்று நழுவிச் சென்றார். 

ஒரே காரில் இருவரும் பயணம் செய்தது மொத்த ஊடகங்களிலும் வந்த பின்னரும் பழனிசாமிக்கு தெரியாதா என்ன? உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறார் பழனிசாமி என்பது இதன் மூலம் தெரிகிறது.

பழைய நண்பர்கள் ஒன்றாக காரில் சென்றார்கள் என்று சாதாரணமாக சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். 

 ஆனால் இந்த அரசியல் அதிரடி பாஜக டெல்லி போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் என்கிறார்கள்.  இதன் மூலம் பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கவே பாஜக இப்படி ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது என்கிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை