இருபது தின அதிர்ச்சி?

 இறந்து இருபது நாள் கடக்கவில்லை.

தொலைக்காட்சிகளிலும்,யூடியூப்களில் பார்த்த அவலங்கள் தந்த சோகங்கள் அதைப் பார்த்த நமக்கே அகலவில்லை.

ஆனால் அந்த சோகங்கள் அதை நேரில் அனுபவித்த சிலர் அதை மிக எளிதாகக் கடந்து போவதைக் காண,அவர்கள் இன்னும் தற்குறித்தனமாகப் பேசுவதைக் கேட்க மிக அதிர்ச்சியாக இருக்கிறது.

பணம்.

இந்த மாற்றத்தைச் செய்தது என்பதைப் பார்க்க கேவலமாகப் போய்விட்டது.

மனிதாபிமானம்,அன்பு,பாசம் என எல்லாமே அங்கு. இல்லாமல் போனது.

ரூ20லட்சம் வேண்டுமெனில் நடிகரைத் தாக்கிப் பேசாதே.உனக்கு பணம் கிடைக்காது.பலியான உன் உறவு மீளாது.நாங்கள் தரும் இருபது  லட்சம் கொண்டு என்னவெல்லாம் செய்யயலாம்.

இந்த எண்ணம்தான்.

அவன் போனா என்ன அவர் வெல்லணும்.

எனவும்.

தம்பி அவரைப் பார்க்கப் போய் செத்தான்.நான் இருக்கும் நானும் உயிரைக் கொடுக்கத் தயார்.

எனவும் உறவுகளைப் பேச வைத்துள்ளது.

செத்தவன் என்ன வேதனைகளை அனுபவித்திருப்பான்.இவர்கள் பேசுவதைக் கேட்டால் இன்னும் வேதனை கொண்டிருப்பான்.

41உயிர் பலிகளுக்கு செய்தி கேட்டே துடித்தவர்கள்,வேதனைகொண்டவர்கள அப்போது கொண்ட வேதனையை இந்தப் பணப் பாசக்கார்ர்கள் பேச்சை கேட்டு மிக வேதனையை அடைந்திருப்பார்கள்.

அவர்கள் சோகக் காலத்தில் வாழைக் கட்டி வாகனத்திற்கு பூசை செய்ததில் தவறு கண்டவர்கள் தங்கள் தவறை உணரவேண்டும்.

நடிகப் பிம்பமும்,பணமும்தான் உறவுகள்,நட்புகளை அகாலமாகப் பிரியும் துயரத்தைவிட  வல்லமை மிக்கது.உயர்வானது.

அடுத்த வருகை எப்போது?

அதற்கு களப்பலி உண்டா?எனப் பார்ப்போம்!

இந்த உறவுகளின் பேச்சைக்கேட்டு கோபம் கொள்ளாமல் இருபது லட்சம் அவர்களுக்கு லாபம்.!

நமக்கு இருபது தினங்கள் விறுவிறுப்பாகப் போனதே தெரியவில்லை. 

என அமைதி கொள்வோம்.!

வேறென்ன செய்ய?






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை