படுகொலை செய்த ஊடகங்கள்?

 தாங்கள் நடுநிலை எனக் கூறிய ஊடகவியலாளர்களும் தங்களை நடுநிலைத் தவறாத பத்திரிகைகள் என்று கூறிக் கொண்டிரிந்தவர்களும் இன்றையதினம் அம்பலப் பட்டுப் போயுள்ளார்கள்.

தொடர்ந்து வந்த இக் குற்றசாட்டு தற்போது நடிகர் விஜய்,கரூர் நிகழ்வுக்குப் பின்னர் சமூக வலைதளங்கள் வளர்ச்சியினால் பல ஊடகத்தினர்,நடுநிலை பத்திரிகைகள்,தொலைக்காட்சியினரை பகிரங்கப் பட்டுவிட்டனர்.

குறிப்பாக புதியதலைதுறை,பாலிமர்,தந்தி தொலைகாட்சிகள் அசிங்கப் பட்டுவிட்டன்.

பல ட்ரோன் களைப் பறக்கவிட்டு செய்திகளை விஜய் வீட்டில் புறப்பட்டதிலிருந்து  நேரலை செய்த இத் தொலைகாட்சிகள் விஜய் புகழ் பாடுவதில் நேத்தை வீண்டித்தனரே ஒழிய ட்ரோன்கள் மூலம் மேலிருந்தும்,எல்லா நிலைகளிலும் ஒளிப்பதிவு செய்த இவர்கள் கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்கள்,மூச்சு விமுடியால் உயிருக்குப் போராடியவர்கள் செய்திகளை உடனே தங்கள் ஒளிபரப்பில் காண்பித்திருந்தால்  நடிகர் விஜய்,ரசிகர்கள்,கூட்ட ஏற்பாட்டாளர்கள்,குறிப்பாக காவல் துறையினர்  ஏதாவது நடவடிக்கை எடுக்க முடிந்திருக்கும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

எங்களுக்கு எப்படி தெரியும் எனத் தப்பிக்க முடியாது.பலி விபத்துக்குப் பின் வெளியான

அது தொடர்பான காணொலிக்காட்சிகள் அனைத்தும் அதே ட்ரோன்களால் எடுக்கப் பட்ட காட்சிகள்தான்.

ஆக இத்தனை உயிர்கள்பலியாக தொலைக் காட்சிகளிட் விஜய் காட்சி எடுக்கும் டி.ஆர்.பி.வெறிதான்.

செய்தியை நடுநிலையுடன் தராத பக்கசார்புதான்.

உண்மையை உள்ளபடி தரும் நேர்மை இல்லாத ஊடகவியல்தான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை