மோன்தா தீவிர புயலாக உருவாகி ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 25) கூறியுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தற்போது வேளச்சேரி, கிண்டி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்தசூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பான அடுத்தடுத்த தகவலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 25) வெளியிட்ட அறிவிப்பில், ‘தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 7 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
அந்தமான் & நிகோபார் தீவுகளில் இருந்து சுமார் 440 கி.மீ தொலைவில் மேற்கு-தென்மேற்கிலும்
விசாகப்பட்டினத்தில் (ஆந்திரப் பிரதேசம்) இருந்து 970 கி.மீ தொலைவில் தென்கிழக்கிலும்
சென்னையில் இருந்து 970 கி.மீ தொலைவில் கிழக்கு-தென்கிழக்கிலும்,
காக்கிநாடாவில் (ஆந்திரப் பிரதேசம்) இருந்து 990 கி.மீ தொலைவில் தென்கிழக்கிலும்
கோபால்பூரில் (ஒடிசா) இருந்து 1040 கி.மீ தொலைவில் தென்-தென்கிழக்கிலும் உள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அக்டோபர் 27-ஆம் தேதி காலைக்குள் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும்.
அதன் பிறகு, இது வடமேற்கு திசையிலும், பின்னர் வடக்கு-வடமேற்கு திசையிலும் நகர்ந்து, அக்டோபர் 28-ஆம் தேதி காலைக்குள் தீவிரப் புயலாக (Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும்.
தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28-ஆம் தேதி மாலை/இரவு நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மசூலிப்பட்டினம் (Machilipatnam) மற்றும் கலிங்கப்பட்டினம் (Kalingapatnam) ஆகியவற்றுக்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகில், தீவிரப் புயலாகக் கடக்க அதிக வாய்ப்புள்ளது.
புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், இடைஇடையே 110 கி.மீ வரைக்கும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்று கூறியுள்ளது.
எம்.ஜி.ஆர் பற்றி ‘விடுதலை’ நூலில் ஆண்டன் பாலசிங்கம் எழுதியது
---
எம்.ஜி.ஆர் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். குழந்தை உள்ளம் படைத்தவர். நண்பர்களுக்கு நண்பர். தனக்குப் பிடித்தவர்கள் மீது அளப்பரிய அன்பு காட்டுவார்.
ஒரு தடவை அவரது அன்புத் தொல்லையில் நான் சிக்குப்பட்டு இரு வாரங்கள் வரை ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவஸ்தைப்பட நேர்ந்தது. இதுவொரு சுவாரஸ்யமான சம்பவம்.
ஒரு நாள் காலை எம்.ஜி.ஆர் அவர்கள் என்னையும் பிரபாகரனையும் அவசரமாகத் தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். நாங்கள் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றோம். ஏதோ அதிமுக்கிய விடயமாக இருக்கலாமென எண்ணிக் கொண்டோம். அங்கு சென்றபோது, எம்.ஜி.ஆரின் செயலர் எம்மை வரவேற்றார்.
"எதற்காக எம்மை அழைத்திருக்கிறார்" என்று அவரிடம் கேட்டோம். "அப்படியாக ஒரு முக்கிய விடயமும் இல்லை. உங்களுடன் சேர்ந்து காலை விருந்து உண்ண விரும்புகிறார். தனக்குப் பிடித்தவர்களைக் காலை விருந்துக்கு அவர் அழைப்பது வழக்கம்." என்றார் செயலர்.
சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே முதல்வர் எமக்காகக் காத்திருந்தார். "வாருங்கள், வாருங்கள். உங்களுக்கென்று விசேடமாக காலை உணவு தயாரித்திருக்கிறோம்." என்று கூறிப் பெரியதொரு சாப்பாட்டு மேசையில் எம்மை அமரச் செய்தார்.
முதலில் இட்டலி, அதன் பின் தோசை, பின்பு பூரி, உப்பு மா. தயிர் வடை இப்படியாகச் சுடச் சுட வாழை இலையில் உணவு வகைகள் மாறி மாறிப் பரிமாறப்பட்டன. எம்.ஜி.ஆருக்கு ஈடாகப் பிரபாகரன் சுவைத்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இவர்களுக்கு ஈடுகட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன் நான்.
நீரிழிவு வியாதி இருப்பதால் எனக்கு உணவுக் கட்டுப்பாடு. அவசரத்தில் இன்சுலின் ஊசி ஏற்றாமல் வந்துவிட்டதால் அதிகமாகச் சாப்பிட முடியாத நிலை. சிறிய அளவாகத்தான் சாப்பிட முடிந்தது. எம்.ஜி.ஆரின் கழுகுக் கண்கள் அதனைக் கவனித்து விட்டன.
"எனது வீட்டிற்கு உணவருந்த வருபவர்கள் வயிறு நிறையச் சாப்பிட வேண்டும். தம்பி பிரபாகரன் நன்றாகச் சாப்பிடுகிறார். நீங்கள் சிரமப்படுவதுபோலத் தெரிகிறது. நிறையச் சாப்பிடுங்கள்" என்று கூறிச் சமையற்காரப் பையனிடம் சைகை காட்டினார். அவன் இட்டலி, தோசை, சாம்பாருடன் ஓடி வந்தான்.
"சார், எனக்கு நீரிழிவு வியாதி. இன்சுலின் ஊசியும் ஏற்றவில்லை. உணவுக் கட்டுப்பாடும் இருக்கிறது. அதிகம் சாப்பிட முடியாது" என்றேன்.
"நீரிழிவு வியாதியைக் குணப்படுத்தலாம் அல்லவா? எனக்கும் நீரிழிவு இருந்தது. இப்பொழுது குணமாகிவிட்டது. நீரிழிவு இருந்தால் சாப்பிடக் கூடாது என்று யார் சொன்னார்கள் ? எந்த முட்டாளிடம் வைத்தியம் பார்க்கிறீர்கள்?" என்றார் எம்.ஜி.ஆர்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீணாக வம்புக்குள் மாட்டிவிட்டோம் போலத் தோன்றியது. எனது வாழையிலை மீது இட்டலிகள் குவிந்தபடி இருந்தன.
"நீரிழிவு வியாதியைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி பாவிக்கிறேன். காலையும் இரவும் இரு தடவைகள் ஊசி ஏற்ற வேண்டும். இந்த ஊசியில்தான் உயிரே தங்கியிருக்கிறது. நீரிழிவு நோய் முற்றிவிட்டால் அதனைக் குணப்படுத்த முடியாது என்று லண்டனிலுள்ள மருத்துவ நிபுணர்கள் சொன்னார்கள் என்றேன்.
"நான் சொல்கிறேன் நீரிழிவு வியாதியைக் குணப்படுத்த முடியும். நான் குணப்படுத்திக் காட்டுகிறேன்." என்று சவால் விட்டபடி தனது சொந்த மருத்துவரை உடன் வருமாறு அழைப்பு விடுத்தார். எனது கெட்ட காலம், மருத்துவரும் உடனே அங்கு வந்து சேர்ந்தார்.
"வாருங்கள் டாக்டர். நீங்கள் ஒரு மருத்துவ நிபுணர். நீங்கள்தான் சொல்ல வேண்டும். தனக்கு நீரிழிவு வியாதி இருப்பதாகவும் அந்த வியாதியைக் குணப்படுத்த முடியாது என்றும் பாலசிங்கம் சொல்கிறார். நான் சொல்கிறேன் குணப்படுத்த முடியும் என்று. யார் சொல்வது சரி?" என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
"சார் நீங்கள் சொல்வதுதான் சரி" என்று கூனிக் குறுகியபடி பதிலளித்தார் அந்த வயோதிப மருத்துவர்.
காலம் "நீரிழிவைக் குணப்படுத்த எவ்வளவு பிடிக்கும்? இரண்டு வாரங்கள் போதும் அல்லவா?" என்று முதல்வர் கேட்க, "ஆமா" போட்டார் அந்த டாக்டர். நான் வாயடைத்துப் போனேன்.
"உடனடியாக, இப்பொழுதே இவரை அழைத்துச்சென்று அப்பலோ மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள். எனக்கு மிகவும் வேண்டியவர் என்று சொல்லுங்கள். நன்றாகக் கவனிப்பார்கள்." என்று மருத்துவரிடம் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, “உடனே புறப்படுங்கள்" என்று ஆணையிட்டார்.
நான் பரிதாபமாகப் பிரபாகரனைப் பார்த்தேன். சிரிப்பை அடக்கிக் கொண்டு, 'சீரியஸான' முக பாவனையுடன் "போய் வாருங்கள் அண்ணா" என்றார் பிரபாகரன்.
வீட்டுக்கு வெளியே வந்ததும் மருத்துவரின் காரில் ஏறினேன். "என்ன டாக்டர். வீணாக என்னை மாட்டிவிட்டீர்களே. இன்சுலின் ஏற்றுமளவுக்கு நீரிழிவு நோய் முற்றியிருக்கிறது. அப்படியிருந்தும் நோயைக் குணப்படுத்த முடியும் என்கிறீர்கள். உண்மையாக அப்படிக் கருதுகிறீர்களா?" என்று ஆத்திரத்துடன் கேட்டேன்.
"முதலமைச்சர் சொல்வதற்கு மாற்றுக் கருத்து எப்படிச் சொல்வது. எதற்கு எனக்கு வீண் வம்பு. அப்பலோ மருத்துவமனையில் எல்லா வசதிகளுடனும் ஒரு தனி அறை ஒழுங்கு செய்து தரலாம். ஓய்வு எடுத்தால் உங்களுக்கு நல்லது.
இரண்டு வாரங்கள் தானே. பொழுது போவது தெரியாது." என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். கன்னத்தைப் பொத்தி அறைய வேண்டும் போல இருந்தது.
எம்.ஜி.ஆரின் அன்புத் தொல்லையால் அப்பலோ மருத்துவமனையில் இரண்டு வாரம் சிறை இருந்தேன்.
மூன்று மாதங்கள் கழிந்த பின் ஒரு நாள் என்னையும் பிரபாகரனையும் காலை உணவருந்த அழைத்தார் எம்.ஜி.ஆர். இம்முறை இன்சுலின் மருந்தைக் கூடுதலாக ஏற்றிவிட்டுச் சென்றேன்.
என்னைக் கண்டதுமே, "சிகிச்சை எடுத்தீர்களா? நீரிழிவு நோய் குணமாகிவிட்டதா?" என்று மிகவும் ஆர்வுமாகவும் கருணையுடனும் கேட்டார் முதலமைச்சர். "ஆமா சார். மிகவும் நன்றி" என்றேன்.
இட்டலி, தோசை, வடை, பூரி என்று எனக்குப் படைத்ததை எல்லாம் வயிறு நிறைய விழுங்கினேன். எம்.ஜி.ஆருக்குப் பரம திருப்தி.