நீதியும் வேண்டும்?
கரூர் விவகாரம் முடிவுக்கு வந்தது போல் தெரியவில்லை.பாதிக்கப் பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.நிவாரண நிதி கூட நடிக் விஜய் கொடுத்தது போல் செய்திகள் வரவே இல்லை.
பலியானவர்கள் குடும்பத்திற்கு வருத்தமோ,ஆறுதலோ செய்யாவிட்டாலும் நிதி 20லட்சம் அறிவித்தது என்னவாயிற்று.
அல்லது நிவாரணம் ஆதவ் அரஜூனா மாமா மார்ட்டின் தான் விடுவிக்க மறுக்கிறாரா?
பா.ஜ.கட்சி கூறிய ரூ2 லட்சம்,காங்கிரஸ் அறிவித்த மொத்தம் ஒரு கோடி என்னவானது.என்ன நிலையில் உள்ளது?
எதிர்பாராவிதமாக நேற்று ஆறுதல் கூற வந்த கமல்ஹாசன் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பலியானவர்கள் 41குடும்பத்துக்கும் தலா ஒரு லட்சம் வீதம் ரூ41வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால் பலி கொடுத்தவர்கள்?அறிவிப்பு.எண்ணிக்கொண்டிக்கிறார்கள்.எண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்.
யாரை எதிர்க்கும ,போராடும்?
‘தமிழ்நாடு யாரை எதிர்த்துப் போராடும்?' என்று கேட்கிறார் ஆளுநர் ஆர். என்.ரவி. அவருக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால், “தமிழ்நாடு ஆர்.என்.ரவியை எதிர்த்துப் போராடும்'. ஆர்.என். ரவியை வெல்லும் தமிழ்நாடு.
"ஆளுநர் பதவியில் இருந்து ரவியை மாற்றாதீர்கள். மாற்றி விடாதீர்கள். அவர் இருப்பதுதான் எங்களுக்கு நல்லது. அவர்தான் எங்களது கொள்கைக்கு உரம் சேர்த்து வருகிறார்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதன் உள் அர்த்தம் கூடப் புரியாமல் இந்த நாட்டுக்குள் ரவி உலா வருவதைப் பார்த்து நம்மை நாமே நொந்து கொள்ள வேண்டியதுதான்.
கொஞ்சமாவது சொரணை இருந்தால், முதலமைச்சர் இப்படிச் சொன்ன மறுநாளே ரவி, தனது பதவியை விட்டு விலகி சொந்த ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். எதுவும் இல்லாததால்தான் இன்னமும் கோட் சூட் போட்டு சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
உச்சநீதிமன்றம், ரவியின் உச்சந்தலையில் கொட்டியது நினைவுக்கு இருக்கிறதா? நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு ரவியின் நாக்கைப் புடுங்குவதைப் போல கேள்விகள் கேட்டது.
*சட்டமன்றத்தில் இருமுறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.
*மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.
*ஆளுநர் ஆர் . என் ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.
*பொதுவான விதிப்படியும், மாநில அரசின் ஆலோசனையின் படியும் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும்.
*மாநில அரசுக்கு ஆளுநர் வீண் தடைகளை ஏற்படுத்தக் கூடாது. அது மக்கள் நலன்களை பாதிக்கும் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
*மாநில அரசுக்கு வழிகாட்டுபவராக ஆளுநர் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் எதிரி போல் செயல்பட கூடாது.
*தன் விருப்பம்போல் ஆளுநர் செயல்பட முடியாது.
*தனக்கு சிறப்பு அதிகாரம் இருப்பதாக கருதுவது தவறு.
*ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
*அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.
*ஆளுநர் அரசியல் நோக்கத்துடன் வழிநடத்தப்படாமல், எடுத்துக்கொண்ட அரசமைப்பு உறுதிமொழியால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும். முரணாக அமையும் எந்த நடவடிக்கையும் அரசமைப்புப்படி எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறுவது ஆகும்"என்றும் நீதிபதிகள் எச்சரித்தார்கள்.

இத்தோடு நிறுத்தாமல் 18 மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் ஆர். என்.ரவியின் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது என்றும், இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவருக்கு அவர் மசோதாக்களை அனுப்பி வைத்தது செல்லாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். அரசியல் சாசனப் பிரிவு 142 இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 18 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றும், இந்த மசோ- தாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சொரணை இருந்திருந்தால் அன்றே சென்னையை விட்டு வெளியேறி இருப்பார் ரவி. உடனிருந்து கொல்லும் வியாதியாக அவர் உருமாறி விட்டார்.
ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர், அந்த மாநிலத்துக்கு உதவி செய்ய முடிந்தால் உதவி செய்ய வேண்டும். உதவி செய்ய முடியாவிட்டால் தொல்லை செய்யாமலாவது இருக்க வேண்டும். ரவிக்கு தமிழ்நாட்டின் மீது இருப்பது பொறாமை. அதுதான் வஞ்சகமாக வளர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு இந்தளவு வளர்ந்துள்ளதே, இதனை 'திராவிடம்' செய்து கொடுத்துள்ளதே என்ற வஞ்சகம்தான் ஆர்.என்.ரவியை ஆட்டிப் படைக்கிறது. 'திராவிடத்தால் தங்கள் அதிகாரத்தை, மேட்டிமைத்தனத்தைஇழந்த ஒரு கூட்டம்’ தமிழ்நாட்டில் இருக்கிறது அல்லவா? அந்தக் கும்பல், ஆர்.என்.ரவியைச் சுற்றி வளைத்துக் கொண்டு விட்டது. ‘துக்ளக் படித்து அறிவாளி' ஆன கும்பல் இது. இந்தக் கும்பலில் சிலரின் கைப்பாவையாக ஆளுநர் ரவி ஆனார். திருவள்ளு- வரை சனாதனவாதியாக ஆக்குவதும், வள்ளுவருக்கு காவி வேட்டி கட்டுவதும் அவர்களது ஆரிய நோயின் வெளிப்பாடுகள்தான்.
தமிழ்நாடு வளரவில்லை, தமிழ்நாட்டு மாணவ, மாணவியருக்கு அறிவு இல்லை, இளைஞர்களுக்கு திறமை இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது, தொழில் நிறுவனங்கள் வராதீர்கள்... இது தான் ஆர். என். ரவி தனது ஆளுகை காலத்தில் எடுத்த வார்த்தை வாந்திகள் ஆகும். இப்படி எல்லாம் பேசும் ஒருவரை எந்த மாநிலத்திலும் வைத்திருக்க மாட்டார்கள். நாம் ஏன் விட்டு வைத்திருக்கிறோம் என்றால் காலம் காலமாக தமிழனை உணர்ச்சியோடு வைத்திருப்பது இந்த மாதிரியான ஆட்கள் தான். தமிழர்களுக்கு சொரணை ஊட்டுவதற்காகத்தான் இவர்களை விட்டு வைத்திருக்கிறோம்.
ஆர்.என். ரவி பேசட்டும். அவர் பேசப் பேசத்தான் தமிழ்நாடு உணர்ச்சி பெறும். அவர் பேசப் பேசத்தான் தமிழ்நாடு எழுச்சி பெறும்.
தமிழ்நாடு போராடும்.
தமிழ்நாடு வெல்லும்.