பாசிச சிறையில் பாயாச விஜி!
நியாயமாகப் பார்த்தால் கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பிறகு அரசியலே வேண்டாம் என்று விஜய் ஓடியிருக்க வேண்டும்.
ஆனால், முன்பை விட ஸ்ட்ராங்காக வருவேன் என்று சொல்கிறார் என்றால் எவ்வளவு நெஞ்சழுத்தம்? என்று விமர்சித்திருந்தார் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்.
இப்போது, அவரது நக்கீரன் இதழிலேயே, கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியலை விட்டே ஒதுங்க நினைத்தார் விஜய். ஆனால், ஆதவ் அர்ஜூனாதான் விஜய்யை வீடியோ போட வைத்து, பாஜகவிடமும் லாக் செய்துவிட்டார் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னதாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

அண்மையில் விஜய் மாமாவின் ஷிப்பிங் கம்பெனி போர்டு மீட்டிங் நடந்தது என்றும், அதில் இயக்குநர்களாக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயின் மாமா மகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் என்றும், அப்போது கரூர் சம்பவம் குறித்து பேச்சு எழுந்தபோது, ‘’சேராதவர்களோடு சேர்ந்து கெட்டுப்போகிறான் விஜய். சின்ன வயசுல இப்படின்னா பரவாயில்ல. 50 வயசுல இப்படி வீணாப்போவான்னு நான் நினைக்கல. இப்போ மாட்டிக்கிட்டான்.
கூடா நட்பால இதைவிட ஆபத்து விஜய்க்கு இருக்கு. இதைவிட மோசமான நிலைமையில விஜய கொண்டு போய் மாட்டிவிடப்போறாங்க’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார் சந்திரசேகர்.
அவர் மேலும், ‘’கோவிட் காலகட்டத்த காரணம் காட்டி ரஜினி அரசியல விட்டு வெளியே போனது மாதிரி, ஜனங்கள சாகடிக்க வரலன்னு சொல்லிட்டு அரசியல விட்டு வெளியே போயிருக்கலாம் விஜய்’’ என்றும் வருத்தப்பட்டிருக்கிறார் என்று விவரிக்கிறது அந்த நக்கீரன் இதழ் கட்டுரை.

விஜயை அரசியலுக்கு இழுத்து வந்ததே லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் கேம் பிளான்.
பாஜக தயவில் புதுச்சேரியிலும் தமிழ்நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைத்து, மார்ட்டின் மகன் சார்லஸ் புதுச்சேரியில் முதலமைச்சர், மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர் என்கிற கனவில் செயல்படுகிறார்கள்.
இந்த திட்டத்தில்தான் விஜய் அரசியலுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார் ஆதவ் அர்ஜூனா.

கரூர் சம்பவத்தால் அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என்று புலம்பிக்கொண்டிருந்த விஜயை, கட்சியை அரசியலை விட்டு ஒதுங்கிடலாம், கட்சியை கலைத்துவிடலாம் என்று நினைத்திருந்த விஜயை, முன்பை விட ஸ்ட்ராங்காக வருவேன் என்று வீடியோ போட வைத்ததோடு அல்லாமல், விஜயை பாஜகவிடமும் லாக் செய்துவிட்டார் ஆதவ் என அந்த மீட்டிங்கில் விஜய் குடும்பத்தினர் பேசிக்கொண்டதாக நக்கீரன் இதழின் கட்டுரை அமைந்துள்ளது.