உலகில் உயரமான..உலகிலேயே பெரியது.

 கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ள திபெத்திய மலை plateau-வின் மீது, சீனா உலகின் மிகப்பெரிய தூய்மையான எரிசக்தி திறன் ஆற்றல்.

 இங்கு சூரிய, காற்று மற்றும் நீர்சக்தி ஆகிய மூன்றும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கிங்ஹாய் மாகாணத்தில் அமைந்துள்ள Talatan Solar Park என்பது மட்டும் 162 சதுர மைல் பரப்பளவு என கூறப்படுகிறது. இது மேன்ஹாட்டனின் அளவைவிட ஏழு மடங்கு பெரியது. 

இங்கு 16,930 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியாகிறது. இதுவே ஷிகாகோவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்க போதுமான மின்சாரமாக உள்ளது.

Tibetan plateau கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த பகுதி, இன்று உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் நிலையமாக மாறியுள்ளது. 

கண்கள் போகும் வரை சூரிய பலகைகள் பரந்து விரிந்து, மன்ஹாட்டனைவிட ஏழு மடங்கு பெரிய பரப்பில் ஒளி சிதறவிடாமல் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. 

இங்கு காற்றும் குளிரும் அதிகம், மேலும் காற்று மிகவும் மெல்லியதால், சூரிய ஒளி கடுமையாகப் பளபளக்கும். அதனால் சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் மற்ற இடங்களை விட அதிகமாகிறது.

அதே நேரத்தில், சுற்றியுள்ள மலைத்தொடர்களில் காற்றாலைகள் நீண்ட வரிசையாக நிற்கின்றன. பகலில் சூரிய பலகைகள் மின்சாரம் உற்பத்தி செய்யும் போது, இரவில் வீசும் காற்றை இந்த காற்றாலைகள் பயன்படுத்தி மின்சாரம் உருவாக்குகின்றன. 

இதனால் இரவும் பகலும் மின்சாரம் சீராக கிடைக்கிறது. பீடபூமியின் விளிம்புகளில் பாயும் ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டு நீர்மின் சக்தியும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம் 1,000 மைல் தூரத்திற்கும் மேலாக சீனாவின் பல நகரங்களுக்கும் தொழில்களுக்கும் அனுப்பப்படுகிறது.

China திபெத் பீடபூமியில் மிகப் பெரிய அளவில் சுத்தமான ஆற்றல் உற்பத்தி திட்டங்களை அமைத்துள்ளது.

 இங்கு கிடைக்கும் வெள்ளை சூரிய ஒளி, குளிர்ந்த வானிலை மற்றும் உயரமான நிலப்பரப்பு ஆகியவற்றை பயன்படுத்தி, மிகக்குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கம் கொண்டது.

இதன் மூலம், இந்த பீடபூமி தன்னுடைய மின்சார தேவைகளின் பெரும்பகுதியையும் சூரிய, காற்று, நீர்மின் சக்தியிலிருந்து பெறுகிறது. கூடவே, இங்கு அமைக்கப்பட்டுள்ள தரவுத்தள மையங்கள் (Data Centers)சீனாவின் கணினி நுண்ணறிவு (AI) வளர்ச்சிக்கும் மின் ஆதாரமாகச் செயல்படுகின்றன.

இன்னும் சீனா உலகில் மிக அதிகமாக நிலக்கரி எரிப்பதை தொடர்ந்தாலும், அண்மையில் அதின் அதிபர் ஷி ஜின்பிங் ஐ.நா. மாநாட்டில் ஒரு முக்கிய வாக்குறுதி அளித்தார். 

அவர், “சீனா தனது மொத்த பொருளாதாரத்தில் இருந்து கார்பன் உமிழ்வை குறைக்கும். மேலும் புது ஆற்றல் உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்கும்,” என்றார். இது உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்கா தன் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி விற்பனைக்கு மற்ற நாடுகளை அழுத்தம் கொடுக்கும்போது, சீனா இதற்கே எதிர்மாறாக சூரிய மற்றும் காற்று ஆற்றலுக்குள் முதலீடு செய்து வருகிறது.

 இதன் இலக்கு — எதிர்கால உலகுக்கு தேவையான பசுமை தொழில்நுட்பங்கள், பேட்டரிகள், மின்கார்கள் மற்றும் சூரிய பலகைகள் ஆகியவற்றின் முக்கிய உற்பத்தியாளராக மாறுவதே.

தாலாதன் சூரியத் திட்டம்

சீனாவின் முக்கிய சூரியத் திட்டம் “தாலாதன் சோலார் பார்க்” எனப்படுகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தி மையம்.
கிங்ஹாய் மாகாணத்தில் உள்ள கோங்ஹே கவுண்டியில் அமைந்துள்ள இந்த மையம் 162 சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்துள்ளது — அதாவது ஒரு முழு நகரம் போல். இதன் மின் உற்பத்தி திறன் 16,930 மெகாவாட் – இது முழு சிகாகோ நகரம்பயன்படுத்தும் மின் தேவைக்கு சமமானது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இது மன்ஹாட்டனைவிட 10 மடங்கு பெரியதாக விரிவடைய இருக்கிறது. இதன் அருகில் மேலும் 4,700 மெகாவாட் காற்றாலைத் திட்டங்களும், 7,380 மெகாவாட் நீர்மின் அணைகளும் உள்ளன.

சீனா மட்டும் அல்ல, சுவிட்சர்லாந்து மற்றும் சில மற்ற நாடுகளும் உயரமான இடங்களில் சிறிய அளவில் சூரிய மின் முயற்சிகளை செய்துள்ளன. ஆனால் அவை மிகச் சிறிய அளவில் உள்ளன. 

உதாரணமாக, சுவிட்சர்லாந்தின் ஒரு மலைக்கேபிள் பாதையில் 5,940 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சூரிய மின் நிலையம் வெறும் 0.5 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இதற்கு எதிராக, தாலாதன் சூரியத் திட்டம் ஆயிரமடங்கு அதிக திறன் கொண்டது!

கிங்ஹாய் மாகாணத்தில் சூரிய மற்றும் காற்று மின்சாரம், நிலக்கரியால் உற்பத்தியாகும் மின்சாரத்தைவிட 40% குறைந்த செலவில் கிடைக்கிறது.

 அதனால், இந்த மின் சக்தி சீனாவின் 30,000 மைல் நீளமான அதிவேக ரயில் பாதைகளுக்கும், மின் கார்களுக்கும் இது பெரும் உதவியாக உள்ளது.

மேலும், குறைந்த மின்சாரச் செலவு காரணமாக, சீனா உலகளவில் அதிக அளவில் சூரிய பலகைகள், பேட்டரிகள் மற்றும் ஏ.ஐ தரவுத்தளங்கள் தயாரிக்கும் மையமாக மாறியுள்ளது.

கிங்ஹாய் மாகாணத்தில் பகலிலே அதிக சூரிய மின்சாரம் உற்பத்தி ஆகும். இரவில், காற்றாலைகள் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை சமநிலைப்படுத்துகின்றன. இதற்காக, மஞ்சள் ஆறு (Yellow River) மற்றும் பிற ஆறுகளின் மீது அணைகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், சில இடங்களில் பம்ப் ஸ்டோரேஜ் (Pump Storage) முறையும் பயன்படுத்தப்படுகிறது – அதாவது, பகலில் உற்பத்தியாகும் அதிகமான சூரிய மின்சாரம் மூலம் நீரை மேல் பகுதியில் உள்ள குளங்களுக்கு பம்ப் செய்து, இரவில் அதை கீழே இறக்கி மீண்டும் மின்சாரம் உருவாக்குவது.

இப்போது பல பெரிய டேட்டா சென்டர்கள் (தகவல் மையங்கள்) கிங்ஹாய் மாகாணத்தில் உருவாகி வருகின்றன. இவை7,500 முதல் 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ளன.


இந்த மையங்களில், குளிர்ந்த காற்று காரணமாக 40% மின்சாரச் செலவு குறைகிறது– ஏனெனில் ஏர் கண்டிஷன்கள் தேவையில்லை. மேலும், சர்வர்கள் வெளியிடும் சூடான காற்று அருகிலுள்ள கட்டிடங்களை சூடாக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலக்கரி அடுப்பு தேவையும் குறைகிறது.

கிங்ஹாயில் தற்போது உள்ள தரவுத்தள திறனை, 2030க்குள் ஐமடங்காக அதிகரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

இந்த உயரப்பகுதிகளில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், சில இடங்களில் மக்கள் இடம்பெயர்த்தல், மண்பயன்பாடு போன்ற பிரச்சினைகள் உள்ளன.

 முன்பு சில இடங்களில் மேய்ச்சல் நிலங்களை சூரிய பலகைகள் மறைத்ததால் ஆடுகள் மேய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது பலகைகள் உயரத்தில் பொருத்தப்படுகின்றன.

திபெத் பகுதிகளில் கட்டப்படும் புதிய அணைகள்இந்தியாவிலும் கவலை ஏற்படுத்தியுள்ளன. 

ஏனெனில், இவை அமைந்துள்ள யார்லுங் சாங்க்போ ஆறு, இந்தியாவிற்குள் பிரம்மபுத்திரா என பெயரெடுத்து பாய்கிறது. சீனா இவ்வணைகளை தண்ணீர் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தக்கூடும் என இந்தியா அஞ்சுகிறது.

திபெத் பீடபூமியில் உருவாகி வரும் இந்த பசுமை ஆற்றல் வலைப்பின்னல், உலகின் எதிர்கால மின்சாரத்திற்கான வழிகாட்டியாக மாறியுள்ளது. 

ஒருபுறம் சீனா இன்னும் நிலக்கரியை எரித்தாலும், மறுபுறம் இதுபோன்ற பெரும் திட்டங்கள் அதன் பசுமை மாற்றத்தின் அடித்தளமாக இருக்கின்றன. 

முடிவில், திபெத் பீடபூமி இன்று ஒரு மின்சார உற்பத்தி மையம் மட்டுமல்ல — அது சீனாவின் தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் பசுமை எதிர்காலத்தின் இதயமமாக மாறி வருகிறது


.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை