வாக்குத் திருட்டுப் பட்டியல்?
"தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.
சென்னைக்கு 720 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு 790 கிமீ தெற்கு தென்கிழக்கிலும், காக்கிநாடாவிற்கு 780 கிமீ தென்கிழக்கிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது"
-இந்திய வானிலை ஆய்வு மையம்
நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியலை திருத்தும் செயல்முறை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரிலான இந்த செயல்முறை மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருந்தவர்கள், மரணமடைந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த செயல்முறையில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நடவடிக்கையின் மூலம் தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு துணை போவதாக அவை குற்றம் சாட்டின.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனினும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தடையோ, இடைக்கால தடையோ வழங்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்வதற்கு தடையில்லை என அறிவித்தது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் நாளை (அக். 27) மாலை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிபிஐ குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் முதல்தகவல் அறிக்கையை கடந்த 22-ம் தேதி தாக்கல் செய்தார். அதில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் என குறிப்பிட்டு, விசாரணையைத் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் சிபிஐ தாக்கல் செய்துள்ள எஃப்ஐஆரின் நகலைக் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆரின் நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
