உலகின் பெருங் கல்லறை?

அக்டோபர் 24, 1801.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்.

1801 ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி ஆங்கிலேயர்கள் அவர்களை தூக்கில் போட்டனர். அவர்களது உடல்கள் இரண்டு நாட்களாக
தூக்கிலேயே தொங்கியது.

இதனால் சிவகங்கை சீமையில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று பக்கங்களில் வட இந்தியாவில் நடைபெற்ற போர்களே வீரம் செறிந்த வரலாறுகளாக பெரும்பாலும் காட்டப்பட்டிருக்கும்.

ஆனால் சிப்பாய் கலகத்திற்கு முன்பாகவே வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தெற்கில் இருந்து முதன்முதலில் கூக்குரலிட்டவர் மாமன்னர் பூலித்தேவர்.

அவரை தொடர்ந்து ஆங்கிலேயப் பேரரசை எதிர்த்தவர் மாவீரர் திப்பு சுல்தான். அவர்கள் வழியில் தீரத்தோடு அந்நிய ஆட்சியை அகற்ற போராடியவர்கள் தான் மாமன்னர்கள் மருது சகோதரர்கள்.

 புதுச்சேரி  புதுமை?

புதுச்சேரியில் கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைமையில் பாஜக, அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும், 

காங்கிரஸ் தலைமையில் திமுக, இடசாரிகள் - விசிக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. 

இரு அணிகளிலும் வாய்ப்புக் கிடைக்காத சீனியர்கள் சிலர் சுயேச்சையாக களம் இறங்கினர். அவர்களில் சிலர் வெற்றியும் பெற்றனர்.
இந்த நிலையில், என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணிகளுக்குப் போட்டியாக இம்முறை புதிது புதிதாக இன்னும் சிலரும் களத்துக்கு வந்திருக்கிறார்கள். பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்களும் பாஜக எம்எல்ஏ-க்கள் சிலரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸுடன் கைகோத்து செயல்பட்டு வருகிறார்கள்.

 பாஜக தலைமையில் இருந்து இதற்கு எவ்வித ரியாக்‌ஷனும் காட்டப்படாத தால் இதை, ‘பாஜகவின் பி டீம்’ என்று விமர்சிக்கிறார்கள்.

 அதேசமயம், கூட்டணிக்கு விரோதமாக இவர்கள் இப்படி தனி அணி திரட்டுவது என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தை சீண்டி வருகிறது.

இதேபோல், சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு மற்றும் பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ-வான சாமிநாதன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் சேர்ந்து தனியாக ஒரு அணியை உருவாக்கி வருகின்றனர்.

 இவர்களுக்கு மத்தியில், புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ், கடற்கரையை ஒட்டியுள்ள 5 தொகுதிகளில் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து வேட்பாளர்களை நிறுத்தும் வேலைகளில் இறங்கி இருக்கிறார். இப்படி புதுச்சேரி தேர்தல் களத்தைக் குறிவைத்து இதுவரை 5 அணிகள் களத்துக்கு வந்திருக்கின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மொத்த வாக்களர்கள் எண்ணிக்கையே சுமார் 10.15 லட்சம் தான்.
 அப்படிப் பார்த்தால் பதிவாகும் வாக்குகளை வைத்து கணக்கிட்டால் ஒரு தொகுதிக்கு சராசரியாக சுமார் 30 ஆயிரம் வாக்குகள் விழலாம்.

 இதில், ஒரு தொகுதியில் பலமான வேட்பாளர்கள் 6 பேர் நின்றாலே வாக்குகள் பிரிக்கப்படும். அதனால் இம்முறை, எப்பாடு பட்டாவது சுமார் 6 ஆயிரம் வாக்குகளை பெற்றாலே அடித்துப் பிடித்து எம்எல்ஏ ஆகிவிடலாம் என்ற கணக்கில் பலரும் இப்போது தங்களுக்கு வாகான தொகுதிகளில் வாக்காளர்களை ‘ஸ்கெட்ச்’ போட்டு கவனித்து வருகிறார்கள்.

"சீனப்பெருஞ்சுவர் "
உலகின் மிகப்பெரிய கல்லறை?

சீனப்பெருஞ்சுவர் என்பது நாம் நினைப்பது போல் ஒரு பெருஞ்சுவர் இல்லை. சிறு சிறு சுவர்களாகக் கட்டப்பட்டு பின் ஒன்றிணைக்கப்பட்டது.

இதன் முதல் பகுதி கி.மு 475ஆண்டு கட்டத்துவங்கப்பட்டது. அதற்குப்பின் சீனாவை ஆண்ட ஒவ்வொரு மன்னரும் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் எல்லையைப் பாதுகாக்க அதைப் பெருஞ்சுவராகக் கட்டினர்.
விண்வெளியிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியும் என்று யாரோ கிளப்பிவிட, அதை சீனாவின் பாடப்புத்தகங்களிலெல்லாம் சேர்த்திருந்தார்கள்.

பின்னொரு நாள் சீனாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற அறிஞர் ஒருவர், க்ராவிட்டி படத்தில் வருவதுபோல் விண்வெளியில் மிதந்து, சுவர் தெரியவில்லை என்று கூறியதையடுத்து பாடப்புத்தகங்களெல்லாம் திருத்தியமைக்கப்பட்டன.

சீனப்பெருஞ்சுவரை சீன மொழியில் “Wan-Li Qang-Qeng” என்று அழைக்கின்றனர். அப்படியென்றால் 10,000Li Long Wall என்று அர்த்தமாம். Li என்பது தோராயமாக 1/3 மைல் நீளம். 15 முதல் 30 அடி அகலமும் (சில இடங்களில்)25 அடி உயரமும் கொண்டது.
சீனப்பெருஞ்சுவரில் கடைசியாக 1983ஆம் ஆண்டு ஜப்பானுக்கும் சீனாவிற்கும் சண்டை நடந்தது. அந்தச் சண்டையின் அடையாளமாக துப்பாக்கி குண்டுகளின் தடங்கள் இன்னும் Gubeikou என்ற இடத்தில் இருக்கும் சுவரில் இருக்கின்றன.

இன்னும் 20 ஆண்டுகளில் சீனப்பெருஞ்சுவரின் ஒரு சில பகுதிகள் மறைந்துபோகலாம். மண்ணால் செய்யப்பட்ட இப்பகுதிகள் காற்றிலும் மழையிலும் கரைந்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

சீனப்பெருஞ்சுவரின் மற்றோரு பெயர் உலகின் மிகப்பெரிய கல்லறை..

காரணம் என்னவென்றால், இச்சுவரை கட்டும் பணியில் இறந்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை