யாரை எதிர்த்துப் போராடும்?
ஒன்றிய அரசின் ஆணவத்தை எதிர்த்து தமிழ்நாடு போராடுவதாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி. மொழி திணிப்பு, மதவெறி, அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக போராடுவோம் என சூளுரை.

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் போக்குவரத்து நெரிசல். ஆத்தூர் சுங்கச்சாவடியில் நெரிசலை சமாளிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்பட்ட வாகனங்கள்.


கரூரில் விஜயின் பரப்புரையில் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. ஒரு நபர் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தல்.





சென்னை மெரினா நீச்சல் குளம் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை முதல் மீண்டும் திறப்பு. 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் நிறைவு.






யாரைத்தான் ஆதரிப்பது?
இன்று அதிமுகவை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள ஒரு குழப்பமே.பெருங்குழப்பமே.
அதிமுக யாரை ஆதரிப்பது என்பதுதான்.
தற்போது அவர்மீதும்,அதிமிக முன்னாள்கள் மீதும் உள்ள ஊழல் ,சொத்துக் குவிப்பு முறைகேடுகளில் இருந்து தப்பிக்க பா.ஜ.க வை ஆதரிப்பது தவிர வேறு போக்கிடமே இல்லை.
மறுத்தால் அமுலாக்கத்துறை,சிறை தான் வாழ்விடமாகி விடும் நிலை.
வேறு வழியே இல்லாத எடப்பாடி பாஜகவுடன். குடும்பம் நடத்த வேண்டிய நிலை.
அவருக்கு ஊழல்,கொடநாடு கொலை என பல சுருக்கு வலைகள்.
ஆனால் அதிமுக தொண்டர்களுக்கு ?
பாஜக கூட்டணி 70சதம் உண்மையானத் தொண்டர்களுக்கு மெல்லவிம் முடியா,துப்பவும் முடியாத நிலையில் தான்.
இந்த நிலை நீடிப்பதால் பாஜக.தலைமை அடிக்கடி எடப்பாடியை கூப்பிட்டு ஊழல்,கொடநாடு கொலை என மந்திரம் ஓதி விட்டுக் கொண்டிருக்கிறது.
இப்போது நடிகர் விஜய்க்கு,கரூர் 41பேர் சாவு போன்றவை கடும் சிக்கல்களை அரசியலில் உருவாக்கியுள்ளது.
இதில் தேவையே இல்லாமல் எடப்பாடி கருத்து தெரிவிப்பது.ஆளுங்கட்சி தி.மு.க வையே குற்றம் சாட்டுவது எல்லாம் நடக்கிறது.
இடையில் எடப்பாட மகன் மிதுன் விஜய்க்கு உற்சாகம் தரும் படி பேசி அவர் கட்சியுடன்,அதிமுக கூட்டணி வைப்பது கூட்டணி வைப்பது தொடர்பாக பேசி வருகிறார்.
இதில் மிதுன் தலையிடுவது வாரிசு அரசியல் ஆகாதா என்றெல்லாம் கேட்க கூடாது.
ஏற்கனவே பாஜக ,எடப்பாடி அதிமுக நடிகர் விஜயுடன் முன்பே கூட்டணி தொடர்பாக பேச்சை துவக்கியதால்தான். செங்கோட்டையனை மனம்விட்டு பேசவைத்தது.
அது ஒன்றும் வேலைக்காகவில்லை என்பதால்தான் டெல்லிக்கு வரவைத்து அம்சா மிரட்ட பழனிசாமி முகத்தை துடைத்தபடியே காரில் வெளியே வந்தது.
தற்போது விஜயை கைது செய்தால் அதிமுக தொண்டர்கள் பொங்கி எழுவார்கள் என எடப்பாடி அறிக்கை விட்டது.
இது நடிகர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அஇஅதிமுகவாக இல்லை.
இன்னொரு நடிகரை காப்பாற்றும் இணையற்றப் பணியில் ஈடுபடும் சம்பந்தமற்ற மு.க.வாகப் போய்விட்டது.
மக்கள் மனநிலை என்ன என அறியும் தன்மையே இல்லாத அதிமிக.
தன்மீதான,தான் ஏன் தோற்றோம் என அறியும் தன்மையற்று தி.மு.க வை எதிர்க்கும் நோக்கமற்று தன் பாரம்பரியம்,தொண்டர் பலம் பற்றிய எண்ணமே இல்லாமல் நேற்று ஒரு நடிகர் ஆரம்பித்த கட்சிக்கு தேவையே இல்லாமல
எடுபிடி ஆளாக,அல்லக்கையாக மாறிப் போய் நிற்கிறது.
இது அதிமுகவை வளர்க்கப் போவதில்லை.த.வெ.க வாக மாற்றத்தான் போகிறது.
அரசியல் தற்குறிகளிடமா,காவி அரசியலிடமா அதிமுக கரையப் போகிறது என்பதை காலம் சொல்லும்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
தலைமுறைக கு தலைமுறை சிந்தனை மாற்றம் வருவது வழக்கம்.
சுயநலவாதி தலைவர்களால் ரஷ்யாவில் தோற்றுப் போன கம்யூனிசம் சீனா,கியூபா என ஆள்கிறது.உலகெங்கும் இடதுசாரி கொள்கை இருக்கிறது.
ஏன் தமிழ்நாட்டில் சுயமரியாதை திராவிட சிந்தனை நூறாண்டுகளா ஆர்யத்தை எதிர்த்து நிற்கிறது.
ஆனால் அண்ணா யிசம்,?