பாதுகாப்பாக வெடியுங்கள்!
வெடிப் போடுவது தமிழ்ப் பண்பாட்டில் எப்போதும் இருந்ததல்ல.அது சீனப்பண்பாடு.
உப்பை அள்ளி நெருப்பில் போட்டால் அது சடசடவென வெடிக்கும்.இதுதான் பட்டாசு கண்டுபிடிக்க காரணமாய் அமைந்தது.உப்புக்கு பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட் நெருப்பில் விழ பெரும் தீயாய் எழுந்தது.

இத்துறவி லியுயாங் நகரில் வாழ்ந்தவர்.சீனாவின் லியுயாங் நகரமே இன்று உலக பட்டாசு உற்பத்தியின் தாயகம்.பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது சீனர்களின் பழைய மூட நம்பிக்கை.
சீன நாட்டின் பட்டாசுநாள் ஏப்ரல்18.அந்நாள் வெடி வெடிக்கும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
1922 கல்கத்தாவில் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் முதன்முதலில் தீப்பெட்டி தொழில் செய்யத் தொடங்கினர்.இந்தியாவில் தீப்பெட்டி தொழில் முதன்முதலில் கல்கத்தாவில் தான் தொடங்கப்பட்டது.ஜப்பானின் ஹனாபி என்ற சொல்லுக்கு நெருப்புமலர் என்று பொருள்.
அதுவே பயர் ஒர்க் என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர்.1899 சிவகாசி கலவரமும் அதையொட்டிய மக்களின் வாழ்க்கை நெருக்கடியும் உருவானது. சிவகாசியில் செயல்பட்ட கிறிஸ்தவ மிசினரிகள் மூலமாக சிலர் தீப்பெட்டி தொழிலைக் கற்க கல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர்.
1928 ல் சிவகாசியில் முதல் தீப்பெட்டி தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.அதன் பிறகு 1963 முதல் பட்டாசு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.
சிவகாசியில் முதலில் ஒற்றை வெடி தான் தயாரிக்கப்பட்டது. இதை பிஜிலி என்பார்கள். பிஜிலிக்கு தான் சீன வெடி என்ற பெயர். தற்போது அது சீனி வெடியாக மாறிவிட்டது.1899 நடைபெற்ற சிவகாசி கலவரம் குறித்த ஆய்வுகளை கற்றால்
இத் தொழில் இங்கு அமைந்த காரணத்தையும் நீங்கள் அறியலாம்.
சீனர்கள்,ஜப்பானியர்கள்
ஐரோப்பியர்கள்,அரேபியர்கள்
என்ற வகையில் வரிசையாக வெடித்து முடித்த பிறகு இங்கு வந்ததே சிவகாசி வெடி.
தீபாவளி என்பது பார்ப்பனியத்தின் பரம எதிரியான சமணத்தின் மகாவீரர் இறந்த நாள் தான். அதை பார்ப்பனியம் புராண புரட்டுகளை உருவாக்கி தனதாக்கியது.
நாமும் நாம் உணராமலே மகாவீரர் இறந்த தினத்தை பார்ப்பண புரட்டு மூலம் நரகாசுரன் கதை உருட்டு மூலம் பகுத்தறிவை புறம்தள்ளி கொண்டாடுகிறோம்
கூடிக் களிப்பதும், கூடிக் கொண்டாடுவதும் மானுட இயற்கை.மதமும் கடவுளும் உருவாக்கப்படும் முன்பே பல்வேறு கொண்டாட்டங்களைப் பல்வேறு இனக்குழுக்கள் தங்களின் தனித்தப் பண்பாடாய் வரித்துக் கொண்டன.
“கொண்டாட்டம்”என்பது “கும்பிடுவது"என்றாகிவிட்டது . ஆடிப்பாடி உண்டு களித்து மகிழ்ந்திருப்பது என்பதற்கு பதிலாக,வழிபாடாகவும்,தன் கவுரவத்தை,பெருமையைக் காட்டுவதாகவும் கொண்டாட்டங்கள் சிதைந்து பண்டிகைகளாகி விட்டன.பெரும் சுமையாகிவிட்டன.
பண்டமாற்றிலிருந்து பணப்பரிவர்த்தனை தொடங்கிய போது,சந்தைகள் பொருள் விற்பனையின் மையமானபோது, பண்டிகைகள் சந்தையோடு பிணைக்கப்பட்டன.
என எதை சந்தைப் படுத்தவேண்டுமோ அதற்கு ஏற்ப பண்டிகைகள், திருவிழாக்கள் வடிவம் பெறலாயின. அதற்கேற்ப கதைகள், மூடநம்பிக்கைகள் சேர்க்கப்பட்டு அது வேர்விட்டது.
ஆட்சியாளர் தங்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழாமல் இருக்க மத நம்பிக்கைகளைக் கெட்டிப் படுத்த,மக்களை மேலும் மேலும் மூடச்சகதியில் புதைத்து வைக்க பண்டிகைகளை ஆயுதங்களாய் கூர்மைப்படுத்தின.மதபீடமும், தத்துவ ஆசான்களும் விதவிதமாய் வியாக்கியானங்கள் செய்யலாயினர்.
.உலகெங்கும் எல்லா மதம் சார்ந்த எல்லா பண்டிகைகளுக்கும் இது பொருந்தும்.ஒன்றுக்கொன்று சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம். அவ்வளவுதான்.
மூலத்தை தேடிப்போனால் அது அவர்களால் உருவாக்கப்பட்ட கொண்டாட்டமல்ல. எங்கோ ஒரு இனக்குழு கொண்டாடிய ஒன்றுக்கு இவர்கள் மதமுலாம் பூசி பண்டிகைகளாய் வரித்துக் கொண்டது விளங்கும்.இப்போது புராணப்புனைவு இல்லாத பழைய கொண்டாட்டத்தை மீட்டெடுப்பது இயலாத ஒன்று.
அதே நேரம் மன இறுக்கத்திலிருந்து சற்று விடுபட கொண்டாட்டங்களை நாடும் சமூக உளவியலை நிராகரிக்கவும் முடியாது.மாற்றுக் கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் ஏகாதிபத்தியமும் பெருமுதலாளித்துவமும் தனது லாபவெறிக்காக செய்வதே அதிகம்.
உலக சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்
ஐரோப்பிய நாடுகள் 43%
அமெரிக்கா 37%
இந்தியா 3%
இதுவே ஐநா அறிக்கை.
வெடி வெடிப்பதாலும் இயற்கை மாசுபடும்.ஆனால் அது அளவீட்டில் குறைவே.பெரு முதலாளித்துவம் தான் செய்யும் தவறுகளில் இருந்து மறைக்கவே மக்களின் சாதாரண வெடி விசயத்தில் பழி போட்டு தப்பிக்க முயற்சிக்கிறது.
பாதுகாப்பாக வெடியுங்கள். கொண்டாடுங்கள்.
-சூர்யா சேவியர்.