இறுதிப்பட்டியல் குழப்பங்கள்?

அவசரகதியில் செய்யப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பாஜக-வுக்குச் சாதகமாக நடத்தப்படும் சதி. வாக்குத் திருட்டை முறியடிப்போம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் இன்று தீவிரப்புயலாக வலுப்பெறுகிறது. காக்கிநாடா அருகே இரவில் கரையைக் கடக்கும் என  வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
மோன்தா புயல் காரணமாக விசாகப்பட்டினம் வழியாக செல்லவிருந்த 43 பயணிகள் ரயில்கள் ரத்து. விசாகப்பட்டினத்தில் இண்டிகோ, ஏர் இண்டியா விமான சேவைகளும் ரத்து.
பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம். இன்று முதல், பணிகள் தொடங்கும் -தேர்தல் ஆணையர் 
 விஜய் அளித்த 20 லட்சம் ரூபாயைத் திருப்பி அளித்த கரூர் குடும்பத்தினர். தவெக தலைவர் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்காததால், திருப்பி அனுப்பியதாக பேட்டி.
தமிழகத்துடன் இனி காவிரி நீர் பிரச்சனை ஏற்படாது: கர்நாடக அரசு.
சென்னை ஆலந்தூர் பகுதியில் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் மீட்பு.
மசூலிப்பட்டினத்துக்கு 730 கி.மீ. தொலைவில் மோன்தாபுயல்: வானிலை  தகவல்.  











இறுதிப் பட்டியல் குழப்பங்கள்?

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


நவ.4-ம் தேதி முதல் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்றும், வரைவுப் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

பீகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைத்தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே 2 உயா்நிலை கூட்டங்களை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பில் ஞானேஷ் குமார் பேசியதாவது;


பீகாரில் முதல் கட்டச் சிறப்புத் திருத்தப் பணி நிறைவடைந்த நிலையில், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உட்பட மொத்தம் 12 இடங்கள் இந்தப் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) இடம்பெறும்.


இந்தச் செயல்முறைகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.


சிறப்புத் திருத்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்:

அந்தமான் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்

அசாம் நீக்கம்: 2026-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்தாலும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்முறையின் காரணமாக அசாம் மாநிலத்தில் மட்டும் இந்தச் சிறப்புத் திருத்தப் பணி நடைபெறாது.


ஆதார் அட்டை பயன்பாடு: வாக்காளர்களை அடையாளம் காணுவதற்கு மட்டுமே ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையர் குமார் விளக்கினார்.


பயிற்சி மற்றும் களப்பணி: சிறப்புத் திருத்தப் பணியின் (SIR) 2-ம் கட்டத்திற்கான அலுவலர்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கும். ஒவ்வொரு அதிகாரியும் போலி வாக்காளர்களைத் தவிர்க்கும் நோக்குடன் 3 முறை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஆய்வு செய்வார்கள்.


தகுதியுள்ள வாக்காளர் யாரும் விடுபடாமல் இருக்கவும், தகுதியற்ற வாக்காளர் எவரும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கவும் இந்தச் சிறப்புத் திருத்தப் பணி உறுதி செய்யும்.

முந்தைய சிறப்புத் திருத்தப் பணி போன்ற ஏற்கனவே உள்ள விவரங்கள் உடன் படிவங்கள் முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும்.


முன்னதாகப் பீகாரில் நடைபெற்ற முதல் கட்டச் சிறப்புத் திருத்தப் பணியைப் பற்றிக் குறிப்பிட்ட ஞானேஷ்குமார், "பீகாரில் 7.5 கோடி மக்கள் இந்தச் சிறப்புத் திருத்தப் பணியில் பங்கேற்றனர்.


வாக்காளர் பட்டியலைச் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அனைத்து மக்களும் ஒத்துழைத்ததால், முதல் கட்டத்திற்கு எதிராக யாரும் மேல்முறையீடும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

அடிக்கடி இடப்பெயர்வு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்கள் பதிவு செய்தல், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது, மற்றும் வெளிநாட்டவர்கள் தவறாகச் சேர்க்கப்படுவது போன்ற காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


ஆனால் தேர்தல் ஆணையம் சிறுபான்மையனர்,நலிவுற்றப் பிரிவினர்,பா.ஜ.ஐ,வுக்கு எதிரான வாக்குகளை மட்டும் திட்டமிட்டு நீக்குவதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.


இதற்கு ஆதாதரமாக அண்மையில் நடந்த மகராட்டிய,ராஜஸ்தான் தேர்தல் பட்டஇயலைக் காட்டுகின்றனர்.பீகாரிலும் தற்போதைய பட்டியலில் சிறுபான்மையிர் வாக்குகள் நீக்கப் பட்டதைக் காட்டுகின்றனர்.


சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) இதுவரை 8 முறை நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2002 முதல் 2004 வரை நடைபெற்றது.


ஆனால் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் இதன் தொடர்பாக ஆலோசணைக் கூட்டம் அறிவித்துள்ளது.

கரை கடக்கும் புயல்!


காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் '

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்று புயலாக மாறியுள்ளது.


மோன்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் நெருங்கி வருவதால், லேசானது முதல் கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகள் அனைத்தும் எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளன. 

மோன்தா புயல் காக்கிநாடாவில் இருந்து 570 கி.மீ., விசாகப்பட்டினத்தில் இருந்து 600 கி.மீ., மற்றும் சென்னையில் இருந்து 520 கி.மீ. தொலைவில் மேலும் தீவிரமடைந்து வருகிறது.


தென்மேற்கு-மத்திய வங்கக் கடலில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்தப் புயல், இன்று (அக்டோபர் 28) இரவுக்குள் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மணிக்கு 90-110 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.


மோன்தா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா ஆகிய  மூன்று மாநிலங்களிலும் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் காக்கிநாடாவில், அதிக பாதிப்பைத் தாங்கும் என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 260 நிவாரண மையங்களைத் திறந்துள்ளது. மேலும், நெல்லூரில் 140 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த முகாம்கள் அனைத்திலும் அடுத்த 2-3 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ரேஷன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


மேலும் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள.

காக்கிநாடா மாவட்டத்தின் தயார்நிலை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆந்திர நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி. நாராயணா, நேற்று (அக்டோபர் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.


ஒடிசாவில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள சுமார் 32,000 மக்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 1,500 தங்குமிடங்களுக்கு மாற்றப்படவுள்ளனர்.


மல்கங்கிரி, கோராபுட், நவரங்பூர், ராயகடா, கஜபதி, கஞ்சம், கலாஹண்டி மற்றும் கந்தமால் ஆகிய எட்டு மாவட்டங்களின் நிர்வாகங்கள் நிலைமையைச் சமாளிக்க "அதிக தயார்நிலையில்" வைக்கப்பட்டுள்ளன.


இந்த எட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் அக்டோபர் 30 வரை மூடப்பட்டிருக்கும்.

கிழக்கு கடற்கரை ரயில்வே, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று இயக்கப்படவிருந்த 32 ரயில்களை ரத்து செய்துள்ளதுடன், மூன்று ரயில்களின் பாதையை மாற்றியமைத்துள்ளது.

ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் டி.கே. சிங், மக்களை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், கடலோர காவல்படை அதிகாரிகளின் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது குறித்து மாநில அரசு அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.


அதே போல், தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) கரையைக் கடக்க இருப்பதால், தமிழ்நாட்டில் பெரிய அளவில் சேதம் ஏற்படாது என்று கூறினார்.


அடுத்த 10 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் எங்களுக்குத் தெரிவித்துள்ளது. ஆனால், கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள எங்கள் அரசு தயாராக உள்ளது," என்று தெரிவித்துள்ளார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை