தலைவராக மாறுங்கள்!
*தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
“கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, காலம் கடந்து அறிவுரை சொல்ல முடியாது. இனி ஒரு தலைவராக பொறுப்புடன் செய்யவேண்டியதை அவர் செய்ய வேண்டும்” என்று நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுறுத்தியுள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை, ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணியை வீசி தாக்க முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூறி கூச்சலிட்டார். அந்நபரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோரை, சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”நீதிபதி பி.ஆர். கவாய்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்குள் நடந்த இழிவான செயல், நமது ஜனநாயகத்தின் மிக உயரிய நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதல் ஆகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது.
தலைமை நீதிபதி இந்தச் சம்பவத்திற்கு அமைதி, நிதானம் மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம், நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது. இருப்பினும், இந்தச் சம்பவத்தை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்காக வெளியிட்ட காரணம், நம் சமூகத்தில் அடக்குமுறை மற்றும் படிநிலை மனப்பான்மை எவ்வளவு ஆழமாக இன்னும் நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி மற்றும் 11-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 6) முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்; அவர் அமைச்சராகப் பொறுப்பேற்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக இருக்க விரும்பினால், உரிய மனுவைத் தாக்கல் செய்து உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெறலாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், அனைத்து தரப்பும் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற நடவடிக்கையின்போது ஒரு வழக்கறிஞர் காலணியை வீசிய சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை நீதிபதியைப் பார்த்து, 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது' என்று கூச்சலிட்ட அந்த வழக்கறிஞரை நீதிமன்றப் பாதுகாவலர்கள் உடனடியாக வெளியேற்றினர். இந்த எதிர்பாராத நிகழ்வுக்குப் பிறகும், தலைமை நீதிபதி கவாய் சற்றும் அசராமல், வழக்கறிஞர்களைப் பார்த்து, "கவனத்தைச் சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது," என்று கூறி, தங்கள் வழக்குகளைத் தொடர்ந்து வாதிடும்படி கேட்டுக்கொண்டார்.

தலைமைச் செயலாளர், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பருவமழை தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக விவாதித்தார்.
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி, டி பிரிவ் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

