பாதுகாப்பு, விண்வெளி சார்ந்த தொழில்துறையில் ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்க்கத் திட்டம். உற்பத்தி துறையின் லீடராக தமிழ்நாடு திகழ்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து அசாம், குஜராத் மாநிலங்களுக்கு ரூ.707 கோடி வெள்ள நிவாரணம்: ஒன்றிய பா.ஜ.க அரசு.
நீட் தேர்வு மதிப்பெண்ணை மாற்றி, போலி சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்த பெண், பெற்றோருடன் கைது.
கோவை அவினாசி சாலையில் தமிழ்நாட்டின் முதல் நீளமான மேம்பாலம் நாளை திறப்பு. புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை சூட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
இருமல் மருந்தால் 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
தமிழ்நாட்டில் கடந்த 3 வாரங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு. சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.
கரூர் விவகாரத்தில் நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற தடயவியல் ஊழியர் வரதராஜன் கைது. நீதிமன்ற உத்தரவின்படி 10 நாட்கள் புழல் மத்திய சிறையிலடைப்பு.
தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்புக்கு விதிகள் வகுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உத்தரவு.
துல்கர் சல்மான் வீட்டை தொடர்ந்து மம்மூட்டி, பிரித்விராஜ் ஆகியோர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை.
கேள்விக்கென்ன பதில்?
இரண்டு கட்டங்களாக பீகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் நவம்பர் 6ஆம் நாள் 121 தொகுதிகளுக்கும், நவம்பர் 11ஆம் நாள் 122 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று தெரிந்துவிடும்.
தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் உள்ளடக்கிய மகா கூட்டணிக்கும் இடையில் முதன்மையான போட்டி நிலவும் நிலையில், வேறு சில கட்சிகளும் களத்தில் நிற்பதால், யாருக்கு வெற்றி என்ற கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எந்த ஒரு கணிப்பாக இருந்தாலும், வாக்காளர்களின் முடிவே இறுதித் தீர்ப்பாக அமையும். பீகார் மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு கட்டாயத் திருத்தத்தால் குளறுபடி செய்த தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியக் குடியுரிமை அல்லாதவர்கள் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருப்பதாகக் கூறி, 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறப்பு முகாம்களில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலம், உரிய ஆவணங்களைக் காட்டி, வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதாடும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் எழுத்துப்பூர்வமான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அதில், “பீகார் மாநிலத்தில் செப்டம்பர் 2025 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 18வயது நிரம்பியவர்களின் எண்ணிக்கை 8.22 கோடி ஆகும். இறுதி வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி பேர் மட்டுமே உள்ளனர். 80 லட்சம் பேர் வித்தியாசம் என்பது 10% அளவிற்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமான வாக்கு வித்தியாசம் 2% முதல் 3% அளவில் மட்டுமே உள்ள நிலையில், 10% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது, நேர்மையான நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீகார் மாநில பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையும் செப்டம்பர் மாதக் கணக்கிற்கும், இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் வேறுபடுவதையும் பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 17 இலட்சம் பெண் வாக்காளர்கள் காணாமல் போய்விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 25% முஸ்லிம் வாக்காளர்கள். இறுதிப்பட்டியலில் நீக்கப்பட்ட 3.66 இலட்சம் வாக்காளர்களில் 34% முஸ்லிம்கள் என்பதையும் பிரசாந்த் பூஷணின் எழுத்துப்பூர்வமான அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, 5.17 இலட்சம் வாக்காளர்கள் டபுள் என்ட்ரியாக இருப்பதையும், சரியான வீட்டு முகவரி, பாலினம், கணவர்-தந்தை பெயர் இல்லாத வாக்காளர்கள் உள்ளிட்ட பல குளறுபடிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான நேரடி வாதங்கள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இறுதிப்பட்டியலில் தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட 65 இலட்சம் வாக்காளர்களில், எத்தனை பேர் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்? இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் புதிய வாக்காளர்களா? நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதா? தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டும் வகையில் விண்ணப்பிப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா? எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒருவர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் தங்களின் நியாயமான வாக்குரிமையைப் பெறுவதற்கு உரிமையுடையவர் ஆவார். அதனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இறுதிப்பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன் நீக்கப்பட்டுள்ள 3 இலட்சத்து 66 இலட்சம் வாக்காளர்கள் பற்றிய தரவுகளை தேர்தல் ஆணையம் 9ந் தேதியன்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடிமகன் அல்லாத வெளிநாட்டினர் என்று கூறி இலட்சக்கணக்கானவர்கள் பெயர்களை நீக்கியுள்ள தேர்தல் ஆணையம், யார் யார் அந்த வெளிநாட்டினர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள், உச்சநீதிமன்றம் என அனைத்துத் தரப்பிலிருந்தும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, தேர்தல் ஆணையம் நியாயமான பதிலை அளிக்குமா?
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...