நூறாண்டு காணும் சேவை(கொலைவெறி) அமைப்பா!

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டைத் தொடர்ந்து, அதன் கொடிய நோக்கங்க ளை மறைத்து வெள்ளையடிக்கும் முயற்சி கள் பகிரங்கமாகத் தொடங்கியுள்ளன. 

தினமணி நாளி தழில் அக்டோபர் 2ஆம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை மிகவும் நகைக்கத்தக்க பொய்யுரையாகும்.

  ஆர்.எஸ்.எஸ் – சேவை அமைப்பா?

 மோடி ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் ஒரு அரசியல் அமைப்பே. அதன் அடிப்படை நோக்கம் ‘இந்துத்துவ’ செயல்திட்டமே. இதை நேரடியாக மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே பலவித அமைப்பு களை உருவாக்கி, வெறுப்பை விதைத்து, கலவரங்க ளால் பிரிவினை ஏற்படுத்தி இந்து வாக்கு வங்கியை உருவாக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தானே கட்சி யாகச் செயல்படாமல், பாஜக என்ற கட்சியை உரு வாக்கி இயக்குகிறது.

அரசாங்கத்தைப் பிடித்ததும் தனது திட்டத்தைத் திணிக்கிறது. எங்கே தொடங்கியது? 1925இல் மராட்டியத்தில் ஹெட்கேவாரும் நான்கு பிராமணர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொடங்கினர். அதன் தத்துவத்தை 1923இல் வி.டி.சாவர்க்கர் உருவாக்கினார்.

 இந்துத்துவம் என்பது மதக் கொள்கை அல்ல என்று அவரே கூறுகிறார். தொடக்கத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சாவர்க்கர், முதல் சுதந்திரப் போரில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வியந்தார். ஆனால் அந்தமான் சிறையில் அதைக் கைவிட்டார். விடுதலை யைக் காட்டிக் கொடுத்து, பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார். 

பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் கொள்கைக்கு வசதி யாக ‘இந்துத்துவ’ அரசியல் திட்டத்தை வடித்தார். ஆர்.எஸ்.எஸ் உருவான காலம் விடுதலைப் போராட்டம் வீறுகொண்ட காலமாகும். புரட்சி வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அதிர்வை உரு வாக்கியிருந்தனர். அண்ணல் அம்பேத்கரின் இயக்கம் மராட்டிய மண்ணில் வேர் பிடித்தது.

ஆனால் இவற்றில் ஆர்.எஸ்.எஸ் இணையவில்லை. அந்த அமைப்பு இந்துக்களை ஆயுதம் ஏந்தச் சொன்னது - ஏகாதி பத்தியத்திற்கு எதிராக அல்ல. அது பிரிட்டிஷ் ஆட்சி யோடு இணக்கமாகவும், முஸ்லிம் வெறுப்பைத் தூண்டியும் இயங்கியது. யார் உதாரணம்? ஹிட்லரைக் கொண்டாடுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லை. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆரிய மேன்மை கொள்கையும் அதற்கு ஒரு காரணம். கோல்வால்கர் எழுதிய ‘ஸ்வய அல்லது நம்முடைய தேசம் பற்றிய விளக்கம்’ என்ற நூலில், “இனம், நிலம், மதம், கலாச்சாரம், மொழி” ஆகிய ஐந்து அடிப்படை களை வைத்துத் தேசம் என்பதைக் கூறுகிறார். ஆரிய இனம் என்பது முதன்மையானது. அவர்களே இந்த நிலத்தின் பூர்வகுடிகள் என்பது இரண்டாவது. பாசிச வகையான கொள்கை ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை ஏற்காதவர்களை – சிறுபான்மையினர் மட்டுமல்லாது, பகுத்தறிவா ளர்களை, ஜனநாயக எண்ணம் கொண்டவர்களை, பன்மைத்துவ இந்தியாவை முன்வைப்போரை, கம்யூனிஸ்டுகளை – அந்த அமைப்பு வெறுக்கிறது.

 கோல்வால்கர் தனது நூலில் எழுதுகிறார்: “நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம், மொழியை ஏற்றுக் கொண்டு இணையாத வரை, அவர்கள் தேசிய வாழ்வில் இடம்பெற முடியாது...

இந்த கயவாளி ஆர்.எஸ்.எஸ்.ஐச்சேர்ந்த 

சனாதன பார்ப்பான்.

அவர்கள் அந்நியர்க ளாகக் கருதப்படுவதைத் தவிர வேறெப்படியும் இருக்க முடியாது.” அவர்கள் “நாட்டை விட்டு வெளி யேறிட வேண்டும் என்று சொல்லும் வரை, கருணை யின் கீழ் வாழ்ந்துகொள்ள வேண்டும்... இந்துக் கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்...

தங்களுடைய தனிப்பட்ட அடையா ளத்தையெல்லாம் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும்; அல்லது... ஒரு குடிமக னுக்குரிய உரிமைகளைக் கூடக் கோராமல், இந்துத் தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்து கொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம்” என்று கூறுகிறார்.  அதே நூலில் ஹிட்லர் நடைமுறைப்படுத்திய மிகப்பெரும் அழித்தொழிப்பைக் குறிப்பிட்டு, அதிலி ருந்து ‘நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்’ என்கிறார். 

காந்தியின் மீது இரட்டைத் தாக்குதல் இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காந்தியை நேசித்ததாகவும், காந்தியும் அம்பேத்கரும் பாராட்டிய தாகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் எழுதுகிறார். உண்மை யில் அவர்கள் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நேர்  எதிரானவர்கள். விடுதலைப் போராட்ட நோக்கங்க ளையே அவர்கள் வெறுக்கிறார்கள். காந்தியை எதிர்ப்பதில் இரண்டு தந்திரங்களைப் பின்பற்றுகிறார்கள். 

முதலாவது, காந்தியின் பிறந்த நாளிலும் சுதந்திர நாளிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்வதுடன், சாவர்க்கரை முதன்மைப் படுத்திக் காந்தியின் புகைப்படத்தைச் சிறுமையாக்கிப் பின்னுக்குத் தள்ளுவது. இரண்டாவது, சுதந்திர இந்தி யாவின் முதல் பெரும் பயங்கரவாதச் செயலாக அமைந்த காந்தியின் படுகொலையையும், அந்தக் கொலையைக் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ் வர லாற்றையும் மறக்கடிக்கப் பகிரங்கமாக முயற்சிப்பது. காந்தியின் கொலைக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்தது நேரு என்ற தனிநபரல்ல, இந்திய அரசாங்கம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தடைக்கு உத்தரவிட்டார்.

 1948 ஜூலை 18 அன்று அவரின் கடிதத்தில், “ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா செயல்பாடுகளின் விளைவாக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளின் காரணமாகவே, நாட்டில் இத்த கைய பயங்கரமான துயரத்திற்குச் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டது என்பதை எங்கள் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன” என்றார். காந்தி கொலையாளி நாதுராம் கோட்சே, சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வளர்ந்த வர் என்பதை அவருடைய அண்ணன் கூறுகிறார். 

 இப்படிப்பட்ட கொலை பாதகத்தை மறைப்பது நேர்மையின்மையின் உச்சம். ஆர்.எஸ்.எஸ் தடைக் காலத்தில் நாட்டில் மதக் கலவரங்களின் எண்ணிக்கை தெளிவாகவும் சீராகவும் குறைந்து வந்தது; 1960இல் குறிப்பிடத்தக்க வகையில் 26 மதக் கலவரங்களே நடந்தன. சாதியை ஒழிக்குமா ஆர்.எஸ்.எஸ்? அண்ணல் அம்பேத்கர் மனுஸ்மிருதியைத் தீயிட்டுப் பொசுக்கியவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்போ அவர் வடித்த அரசமைப்புக்கு மாற்றாக மனுவின் சட்டத்தைப் பார்க்கிறது.  அந்த மனு எழுதிய சட்ட நூலில், சூத்திரர்கள் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்  என்கிறது.

 பெண்களை மோசமாகக் கருதுவதுடன்,  பெண்களுக்கென்று தனியே சுலோகங்களோ சடங்கு களோ இல்லை என்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதையெல்லாம் கேள்விக்குள்ளாக்குவதில்லை. 1940இல் அம்பேத்கர் தங்கள் சாகாவுக்கு வந்து பார்த்ததாக

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சொல்கிறது. ஆனால் 1945இல் அம்பேத்கர் அழுத்தமாகக் கூறி னார்: “இந்து ராஜ்ஜியம் நடைமுறைக்கு வந்தால், நமது நாட்டுக்கு அதுவொரு பேரழிவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்து ராஜ்ஜியத்தை எந்த விலை கொடுத்தாவது தடுக்க வேண்டும்”.   சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் நாடு அமைய வேண்டும் என்றே அவர் விரும்பினார். 

ஆர்.எஸ்.எஸ் அவரை எதிர்த்தது. இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ‘அனைவ ரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’, ‘சாதி வேறுபாடுகள் ஒழிய வேண்டும்’ என விரும்புவதாக சி.பி.ராதா கிருஷ்ணன் கூறுவது, பொய்யுரையின் உச்சமாகும். ஆர்.எஸ்.எஸ் அதிகாரம் எதை நோக்கி? அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ப தற்காக ஆர்.எஸ்.எஸ் தம் ஆட்சியில் செய்தவைதான் என்ன?

கேரளத்தின் கம்யூனிஸ்டுகளும், தமிழ்நாட் டில் திராவிட இயக்கமும்தானே அந்த வரலாற்றைப் படைத்தார்கள்.  ஆர்.எஸ்.எஸ், தனது அதிகாரத்தைக் கொண்டு  மத மோதல்களை உருவாக்குவதற்குச் சட்டங்க ளைத் திருத்துகிறது. கல்விக் கொள்கையை உரு வாக்கிப் பாடத்திட்டங்களை மாற்றுகிறது. மாநில அதி காரங்களைத் தாக்குகிறது. மொழித் திணிப்பை வேகப்படுத்துகிறது.

 சிறுபான்மையினரின் வீடுகளை இடித்துத் தள்ள புல்டோசர்கள் புறப்படுகின்றன. மாணவர் தலைவர்களைக் கேள்வியின்றிச் சிறையில் வைக்கிறார்கள். 

தேர்தல் பத்திர ஊழல் உள்ளிட்டு, பல்லாயிரம் கோடிகளில் முறைகேடுகள் மலிந்து கொண்டுள்ளன

.  இதுதான் ஆர்.எஸ்.எஸ் கொடிய முகம். ஓநாய்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அவற்றின் கோரப் பற்களை மறைக்க முடியாது. 

                                                                    -இரா.சிந்தன்.

                                          (மாநிலக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்))

முகநூல்

Messenger inbox la ஒருத்தர் என்ன ப்ரோ நீங்க விஜய் போஸ்ட் எதுனா போட்டு இருப்பீங்க பார்த்தேன் போஸ்ட் எதுவுமே இல்ல 

மீ : தெருவுல யார் குழந்தை கீழ விழுந்தா அம்மாடி என் பிள்ளை தான் தூக்குவாங்க எங்க அம்மா.

இந்த தரங்கெட்ட தரமில்லாத தகுதியில்லாத ஒருத்தனை பத்தி பேசுறத விட மக்களை அரசியல் படுத்துவது  தான் சரியா இருக்கும் 

Fb frnd என்ன ப்ரோ இப்படி சொல்றீங்க 

ஆமா ப்ரோ இறந்த மக்களுக்கு ஒரு இரங்கல் கூட்டம் நடத்தவில்லை ஒரு மெழுகு வத்தி ஏத்த துப்பில்லை 41 பேரு இறந்ததுக்கு முக்கிய காரனம்  நீ தான் ஆனா ஏதோ ஒரு வகையில் நானும் காரனம் என்னை மன்னிச்சிடுங்க ஒரு வார்த்தை சொல்லவே இல்ல , செத்தவன் வீட்ல அந்த ஈரம் காயல ஆனா இவன் வண்டிக்கு ஆயுத பூஜை போட்டான் பாரு இவன்லாம் மனுஷனே இல்ல சரியாகாத Psycho




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை