வானம் இருண்டால்

 வாழ்வேது?

இந்தியாவின் வானம் இருண்டு வருகிறது. இது வெறும் வானிலை மாற்றம் அல்ல – நம் நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தும் அரசியல் கொள்கைகளின் நிழல் தான் இது. ஆறு இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வு,  கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய ஒளி நேரம்  கணிசமாகக் குறைந்துள்ளதை உறு திப்படுத்தியுள்ளது.

சூரிய ஒளி குறைவுக்கு முக்கியக் காரணம், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் பயோ மாஸ் எரிப்பிலிருந்து வெளியேறும் ஏரோசல் எனப்படும் நுண்துகள்கள் தான். 

இந்தத் துகள்கள் வளிமண்டலத்தில் படர்ந்து, சூரிய ஒளியைத் தடுத்துவிடுகின்றன. மும்பை, கொல்கத்தா, அமிர்தசரஸ் போன்ற நகரங்களில் அதிகபட்ச சரிவு பதிவாகியுள்ளது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த ஏரோ சல்கள் தான் மேகங்களை அதிக நேரம் நீடிக்கச் செய்து, மழையைக் கொடுக்காமல் ஒளியைத் தடுத்து நிறுத்துகின்றன. 

சுருங்கச் சொன்னால்,  பெரும் நிறுவனங்களின் லாப நோக்கத்திற்காகப் புகைக்கப்பட்ட புகை மண்டலம் தான், இப்போது நம் எதிர்காலத்தின் ஒளியையே திருடி வருகிறது.

இந்தக் கரிய வானம் வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல. சூரிய ஒளி குறைவதால், நமது உடலில் மிக முக்கியமான வைட்டமின் “டி” உற்பத்தி பாதிக்கப்படுகிறது. 

இது மக்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியை யும் குறைக்கிறது. மேலும், இந்த மாசுபாடு கார ணமாக, இந்திய விவசாயத்தில் மகசூல் இழப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

------------)))

"ஒரு கிணற்றைச் சுற்றி நான்கு பனைமரம் இருந்தா, எந்தக் காலத்திலும்  தண்ணீர் வற்றாது. அந்த அளவுக்கு நீரைப் பிடித்து நிலத்துக்குள்ள தக்க வச்சிக்கிற தன்மை பனைக்கு இருக்கு. மரம் மாதிரி தெரிஞ்சாலும் பனை புல்லினம். அதுக்கு ஆணிவேரே இருக்காது. 40-50 அடிக்கு விரிந்து கிடக்கிற ஜல்லி வேர். டியூப் மாதிரி தண்ணீரை நிலத்துக்குக் கீழே கொண்டு போய்ச் சேர்த்திடும்..10 பனைமரம் இருந்தா போதும், ஒரு குடும்பமே பிழைச்க்கிடலாம். சும்மா கிடக்கிற இடத்தில் எல்லாம் பனை மரங்களை நட்டா எதிர்காலத்தில் வறுமையே இல்லாத தமிழகத்தை உருவாக்கிடலாம்..."

   ...கே.ராஜு

-------------------------)))))

இந்த மோசமான நிலைக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைத் தளர்வுகளும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிஸினஸ்’ என்ற முழக்கத்தின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  விதிகள் தளர்த்தப் பட்டன. 

நிலக்கரி சுரங்கம் போன்ற அபாயகர மான திட்டங்களுக்குக்கூட, பொதுமக்களின் கருத்துக் கேட்பு நேரம் குறைக்கப்பட்டது. இனி அதுவும் கூட வேண்டாம் என்றும் சட்டம் வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்குப் போ திய அதிகாரமோ, நிதி உதவியோ வழங்கப்படா மல், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுய அறிக்கை களை நம்பும் போக்கு ஊக்குவிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, பெருநிறுவனங்களின் உடனடி முதலீட்டை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கொள் கைகள், இப்போது நாட்டின் சூரிய ஆற்றல் இலக்குகளையும் பலி கொடுத்துள்ளன. 

காற்று சுத்தமாக இருந்தால், இந்தியாவின் சூரிய மின் உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க முடியும் என்கிறது ஆய்வு. ஆனால், அரசு ஒரு புறம் இலக்கை அறிவித்துவிட்டு, மறுபுறம் ஒளியை மறைக்கும் மாசுபாட்டைக் கண்டு கொள்ளாமல் விடுவது முரணாகும். 

இந்தியா வுக்குத் தேவை கரிய வளர்ச்சியல்ல, பசுமை வளர்ச்சி. இந்தியாவின் கொள்கை முடிவுகள் கார்ப்பரேட் நலனிலிருந்து விலகி, மக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

காசா ‘அமைதி திட்டம்’ :  ஒரு சர்க்கஸ் காட்சி

அமெரிக்கா வெளியிட்ட ‘காசா அமைதி திட்டம்’ என்பது உண்மையான சமரசத் தீர்வு அல்ல. ஒருதலைப் பட்சமாகத் திணிக்கப்பட்ட உத்தரவு போல் தெரிகிறது. 

இது உண்மையான அமைதி முயற்சியாக இல்லாமல், டிரம்ப் அமைத்த ஒரு நாடக நிகழ்வாகும். பாலஸ்தீனம் குறித்து உலக பொதுமக்கள் மனநிலையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரும் மாற்றத்திலிருந்து கவனத்தைத் திருப்புவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் படாடோபமாக அறிவிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, காசாவுக்கு அமைதியைக் கொண்டுவருவதற்காக அல்ல. மாறாக இஸ்ரேலையும் வாஷிங்டனையும் அதிகரித்து வரும் தூதரக மற்றும் நெறிமுறை அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட போலி நாடகம் என்று உலகின் பல பகுதிகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.  

தனிமைப்படும் அமெரிக்கா சமீப மாதங்களில் பாலஸ்தீன விவகாரத்தில்  அமெரிக்கா அதிகமாகத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. 

2025 ஜூலை மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் நியூயார்க்கில் கூட்டப்பட்ட “பாலஸ்தீன் பிரச்சனைக்கான அமைதியான தீர்வு : இருநாட்டுத் தீர்வின் நடை முறையாக்கத்திற்கான உயர்நிலை சர்வதேச மாநாடு” இந்தத் தனிமைப்படுத்தலை உறுதிப் படுத்தியது. 

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளைத் தனியாக அமெரிக்கா கட்டுப்படுத்தி வந்த காலம் மெதுவாக முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது.  

2025 செப்டம்பர் 12 அன்று நடைபெற்ற ஐ.நா.  பொதுச்சபைத் தீர்மானம் “இருநாடுகள் தீர்வு” குறித்து வெளியிடப்பட்ட ‘நியூயார்க் பிரகடனத்தை’ ஆதரித்தது. இதில் இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 

அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட வெறும் 10 நாடுகள் மட்டும் எதிர்த்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இது வாஷிங்டனின் இரட்டை நிலைப்பாடுகளைப் பொறுத்துக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் மனப் பான்மை குறைந்து வருவதை வலியுறுத்தியது.  

குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இஸ்ரேல் நிலைப்பாட்டுடன் நீண்டகாலமாக இணைந்திருந்த பல மேற்கு நாடுகள் — ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து, பெல்ஜியம், நார்வே போன்ற  ஸ்காண்டிநேவிய நாடுகள், மேலும் பிரான்ஸ், ஜெர்மனியின் சில பிரிவுகள் — இப்போது வாஷிங்ட னின் கருத்துப் போக்கிலிருந்து விலகியுள்ளன. இந்தப் பிளவு ஓர் ஆழமான விலகலைக் குறிக்கிறது. 

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவாக நிற்பது என்பது தங்கள் சொந்த சமூகங்களின் பொது மக்களது கருத்துக்கு எதிராகவும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் இருப்பதாக அந்த நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன.  புதிய உலக கூட்டணி அமெரிக்க ஆதிக்கத்திற்குப் பணிய மறுக்கும் உலக சக்திகள் ஒன்றிணைந்து வலுப்பெறும் நிலைமையே இந்த மாறும் கூட்டணிக் காற்றின் பின்னணியில் நிற்கிறது.

 சீனாவும் ரஷ்யாவும் அரபு லீக்குடன் வெளிப்படையாக இணைந்து செயல்பட்டு, பன்னாட்டுச் சட்டத்தையும் பாலஸ்தீன மக்களின்  உரிமைகளையும் அங்கீகரிக்கும் அடிப்படையில் உண்மையான அரசியல் செயல்முறையை கோரி யுள்ளன. இந்தப் புதிய கூட்டணி வாஷிங்டனின் ஒரு தலைப்பட்சமான “அமைதி நிகழ்ச்சி நிரலுக்கு”  மாற்றாக ஒரு புதிய வடிவமைப்பை முன்வைத்துள் ளது — அது, ஆணையிடல் அல்ல, உரையாடலின் வழியில்; ஆக்கிரமிப்பு அல்ல, 

இறையாண்மையின் அடிப்படையில் அமைந்த அணுகுமுறை.  ராஜீய முயற்சிகளுக்கு அப்பால் நிகழும் சம்ப வங்களும் அழுத்தத்தை அதிகரித்துள்ளன. காசா கடல் பகுதிகளை நோக்கிப் பயணம் செய்து வந்த சர்வதேச மனிதாபிமானக் கப்பல் அணிவகுப்பான “சுமூத் ஃப்ளோட்டில்லா”, ஸ்பெயின் மற்றும் இத்தாலி கப்பல்களின் ஆதரவால் ஐரோப்பா முழுவதும் தீவி ரமான கவனத்தை ஈர்த்துள்ளது.

“ஒற்றுமையின் கடற்படை” என்ற உருவகம், காசா மீது தொடரும்  முற்றுகையால் உலகம் முழுவதும் அதிகரித்துவரும் அதிருப்தியின் அடையாளமாக மாறியுள்ளது.   டிரம்ப்பின் சர்க்கஸ்  பாலஸ்தீனர்களுக்கான ஒருமைப்பாடும் ஆத ரவும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தனிமை மற்றும் உலகளாவிய அழுத்தத்தின் பின்னணியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் சமீபத்திய நிகழ்ச்சியை நடத்தியுள்ளன — உண்மையில் அது ஒரு நிகழ்ச்சி அல்ல, சர்க்கஸ் காட்சி போன்றது!

 எப்போதும் பேரழிவுகளைக் கூட திருவிழாவாக மாற்ற ஆர்வமாக இருக்கும் டிரம்ப், காசா அமைதி திட்டத்தை — 20 அம்சங்களைக் கொண்ட முன் மொழிவாக — உண்மையான பேச்சுவார்த்தை கட்டமைப்பாக அல்லாமல், கவனத்தை வேறு திசைக்குத் திருப்பும் உத்தியாக வெளியிட்டுள்ளார்.

  மறுகட்டமைப்பு, நிலைத்தன்மை என்று மாற்றங்களைப் போற்றுவது போல காட்டினாலும், முக்கியமான பிரச்சனைகளான ஆக்கிரமிப்பு, முற்றுகை, சுயநிர்ணய உரிமை போன்றவை தவிர்க்கப்பட்டுள்ளன. இது பாலஸ்தீன மக்களைப் புறக்கணித்து ஒருதலைப்பட்சமாகத் தற்காலிகத் தீர்வுகளை அகங்காரமாக வலியுறுத்துகிறது.  

வாஷிங்டனின் பிடியிலிருந்து பாலஸ்தீன மக்கள் விலகி வருவது வரலாற்று சாட்சியமாக உள்ளது. பாலஸ்தீன மக்கள் தங்கள் அசாத்தியமான துணிச்சலையும் நிலைத்தன்மையையும் பல தசாப்தங்களாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் நிலைநாட்டி வருகின்றனர். 

இன்று அவர்கள் அமெரிக்காவின் சுயநல நோக்குகளுக்கு எதிராகச் செயல்படும் புதிய உலகளாவிய ஒற்றுமையின் ஆதரவுடன் இருக்கின்றனர்.  அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியான பேரரசு வாதமும் யூத இனவெறியும் மூலையில் ஒதுக்கப் படும் சூழல் அதிகரித்துள்ளது. 

அந்த மூலையில் இருக்கப்பெறுவது இராஜதந்திரம் அல்ல; மாறாக ஒரு உடைந்துகொண்டிருக்கும் பொது உடன்பாட்டை தற்காத்துக்கொள்ளும் தீவிர முயற்சியான சர்க்கஸ் நிகழ்ச்சி. இதற்கிடையில், சுதந்திர பாலஸ்தீன நோக்கம் புதிய வலிமையோடும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தோடும் முன்னேறி வருகிறது! 

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 

 தமிழில் : எஸ்.எம்.இப்ராகிம், உத்தமபாளையம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை