பேருந்து வசதிகள்!
விஜய் கேரவன் வசதிகள் என்னவென்ன?
*கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளன
*அந்த பஸ்சின் நீளம் 33 அடி. அகலம் 12 அடி, உயரம் 11 அடி
*பஸ் முழுவதும் குளிர்சாதன வசதி
*விஜய் ஓய்வெடுக்க மினி பெட்ரூம்
*5 சொகுசு நாற்காலிகள்
*2 பேர் அமரும் வகையில் 2 சொகுசு நாற்காலிகள் – இதில் விஜய் , ஆதவ் அர்ஜூனா உட்காருகிறார்கள்
*பெரிய டிவி, ரெப்ரிஜெரேட்டர்
*கழிவறை, குளியலறை
*ஒப்பனை அறை
*பெட்ரூம்
ஓட்டுநர் ஓய்வறை
*கை கழுவுமிடம்
*மினி ஹால், ஷோபா, டீ டேபிள்
*பஸ்சின் வெளிப்புறத்தில் 8 கே சிசிடிவி கேமராக்கள்
*மினி கிச்சன்
*டைனிங் டேபிளுடன் சாப்பிடுமிடம்
*சுடச்சுட ஸ்நாக்ஸ், தேநீர் மற்றும் ஜூஸ் ரெடி செய்து கொடுக்க சமையல்காரர்
*ரூ.1.25 கோடியில் ஜேசிபிஎல் நிறுவனம் இந்த பஸ்சை தயாரித்துள்ளது
*சினிமா படப்பிடிப்பு தளங்களில் 10 பேர் ஓய்வெடுக்கப் பயன்படுத்தும் பஸ் இது. இவ்வளவு பெரிய பஸ் விஜய்க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது

கரூர் வேலுசாமிபுரம் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சம்பவ இடத்தில் 2 ஆயிரம் செருப்புகள் கிடக்கின்றன. ஆனால், ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை. இது வேலுச்சாமிபுரத்தில் தண்ணீர் இல்லாமல் நீர்ச்சத்து குறைபாட்டினால் மக்கள் பாதிப்படைந்தது உறுதியானது என்பதால், இந்த வசதிகூட செய்யாத கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு முன் ஜாமீன் மறுத்துள்ளது நீதிமன்றம்.
ஆனால், தனக்கு மட்டும் எத்தனை விதமான சொகுசுகளை செய்துகொள்கிறார் விஜய் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
விமான நிலையத்தில் இருந்து சென்று மக்களை சந்திப்பதற்கு பிரச்சாரம் வாகனம் வைத்திருக்கிறார் விஜய். அது பஸ் மாதிரி இல்லை. கப்பல் மாதிரி உள்ளது.

இதுவரையிலும் பிரச்சாரத்திற்காக யாரும் இவ்வளவு பெரிய பஸ் வைத்திருக்கவில்லை. இத்தனை பெரிய பஸ்சில் ரசிகர்கள் தன்னைப் பார்ப்பதற்கு மிகச்சிறிய கண்ணாடிக் கதவு வைத்திருக்கிறார் விஜய்.
தன் பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என்பதை முழு தனி கவனம் எடுத்து இந்த பிரச்சார பஸ்சை வடிவமைத்திருக்கிறார் விஜய்.
இந்த பஸ் முழுக்க முழுக்க விதிமீறலுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் சம்பவம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரையின் போது விதிமீறலுக்கு உள்ளாகி இருக்கிறது இந்த பஸ். இதனால் நீதிமன்ற உத்தரவின் படி காவல்துறை இந்த பஸ்சை பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளது.