பயங்கரப் பட்டியல்

 பீகாரில் மீண்டும் வெற்றியை வசப்படுத்தியுள்ள நிதிஷ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

விண்ணப்பங்களை வழங்க போதிய அவகாசம் உள்ளது எஸ்ஐஆர் படிவத்தில் குழப்பம் எதுவுமே இல்லை: எடப்பாடி SIRக்கு வக்காலத்து.

‘SIR மூலம் இந்திய குடிமகன் தான் நாம் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்’ - மு.க.ஸ்டாலின் வேதனை.
ஜம்மு-காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள்  வெடித்து பெரும் விபத்து.
தமிழகத்துக்கு ரூ.2291 கோடி கல்வி நிதி நிலுவை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: மூன்று வாரத்தில் பதிலளிக்க கெடு.
பாஜகவில் இணைந்த அடுத்த நாளே சீட் வாங்கி ஒரே மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆன பாடகி மைதிலி தாக்கூர்.
தனியார் பேருந்து கட்டண உயர்வு டிச.30ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
நடிகர்விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு திருச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம்: ஆவணங்கள் ஒப்படைப்பு.
வாக்காளர் பட்டியல் விவகாரம்; உச்சநீதிமன்றத்தை அணுக கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது - ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14-ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கு விற்பனைSIR மூலம் 
தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது. தேர்தல் ஆணையத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளது - ஆ. ராசா
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் Centre for Affiliations மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள், உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு (TET) இன்று (நவ.15) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது - 367 மையங்களில், சுமார் 1.07 லட்சம் ஆசிரியர்கள் தேர்வை எழுதுகின்றனர்.

  • இயக்குநர் வி.சேகர் மறைவிற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் செய்தி! இறுதி சடங்கு, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை நெய்வானத்தம் கிராமத்தில் நடைபெற உள்ளது
  •  சேலம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்
  • கிருஷ்ணகிரியில் சாதி மறுப்புத் திருணம் செய்த மகன் சுபாஷ் மற்றும் தாயை வெட்டிக் கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது மாவட்ட நீதிமன்றம்.
  • ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனியில் நகைக்காக சரஸ்வதி (55) என்ற பெண் வெட்டிக் கொலை. கொள்ளை கும்பல், சரஸ்வதியின் காது, கழுத்தில் இருந்த நகையை பறித்து கொண்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது


பா.ஜ.க. கால 

பயங்கரப் பட்டியல்

பத்து ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியானது மக்களை எப்படிப் பாதுகாத்துள்ளது என்பதற்கான பட்டியல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

‘‘இந்தியாவில் ஆண்மை உள்ள பிரதமர் இல்லாததால் தான் வெடிகுண்டுகள் வெடிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகள் உள்ளே நுழைகிறார்கள்’’ என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பரப்புரை செய்து ஆட்சிக்கு வந்தார் மோடி. அவரது ஆட்சியின் பயங்கர சாதனைப் பட்டியலைப் பாருங்கள்...

2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் இந்தியாவில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்:

• டிச.28, 2014– பெங்களூரு தேவாலயத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – ஒருவர் பலி, 5 பேர் காயம்.

• மார்ச் 20, 2015– காஷ்மீர் பள்ளியில் குண்டுவெடிப்பு– 6 பேர் பலி, 10 பேர் காயம்.

• ஜூலை 27, 2015– குருதாஸ்பூர் போலீஸ் சோதனைச்சாவடி தாக்குதல்–10 பேர் பலி, 15 பேர் காயம்.

• ஜன 2, 2016– பதன்கோட் விமானப்படை தாக்குதல்–7 பேர் பலி

• ஜூன் 25, 2016– பாம்பூர் சி.ஆர்.பி.எப். வீரர்களின் வாகனங்கள் மீது 8 பேர் பலி, 22 பேர் காயம்.

• செப். 18, 2016– உரி ராணுவ முகாம் தாக்குதல்– 23 பேர் பலி

• அக்.3, 2016– பாராமுல்லா தாக்குதல்

• அக்6, 2016– ஹந்த்வாரா ராணுவ தளத் தாக்குதல்

• நவ. 29, 2016– நக்ரோட்டா ராணுவத் தளத் தாக்குதல்–10 பேர் பலி

• ஏப். 24, 2017 சுக்மா நக்சலைட் தாக்குதல்–26 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி.

• மார்ச் 7, 2017– போபால் – உஜ்ஜைன் ரெயில் குண்டுவெடிப்பு– 10 பேர் பலி

• ஜூலை 11, 2017– அமர்நாத் யாத்திரை படுகொலை– 8 பேர் பலி

• பிப்.10, 2018– சுஞ்சுவான் ராணுவத் தளத் தாக்குதல் –11 பேர் பலி

• மார்ச் 13, 2018–சுக்மா குண்டுவெடிப்பு– 9 பேர் பலி

• பிப்.14, 2019–புல்வாமா சி.ஆர்.பி.எப் வாகனங்கள் மீதான தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலி

• மார்ச் 7, 2019–ஜம்மு பஸ் நிலையத்தில் கையெறிக் குண்டுத் தாக்குதல்– 3 பேர் பலி, 30 பேர் காயம்.

• ஏப். 9, 2019– தண்டேவாடா தாக்குதல்–5 பேர் பலி

• மே 1, 2019 – கட்சிரோலி வெடிகுண்டு தாக்குதல்–16 பேர் பலி

• ஜூன் 12, 2019– அனந்த்நாக் தாக்குதல்–5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி

• ஏப். 3, 2021–சுக்மா–பிஜாப்பூர் தாக்குதல்– 22 ராணுவ வீரர்கள் பலி

• ஜூன் 27, 2021–ஜம்மு விமானப்படை தளம் மீதான தாக்குதல்

• ஆக. 27, 2021–அசாம் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெப்பு

• ஜன. 1,2, 2023– ராஜவுரி தாக்குதல்கள் – 7 பேர் பலி

• ஏப்.8, 2023–எலத்தூர் ரெயில் தீவைப்பு–3 பேர் பலி

• ஏப். 26, 2023– தண்டேவாடா குண்டுவெடிப்பு–10 போலீசார் உட்பட 11 பேர் பலி

• அக். 29, 2023–கொச்சி கிறிஸ்தவ கூட்டத்தில் தாக்குதல் – 3 பேர் பலி, 36 பேர் காயம்.

• மார்ச் 1, 2024– பெங்களூரு கபே குண்டுவெடிப்பு– 9 பேர் காயம்

• ஜூன் 9, 2024– ரியாசி பஸ் தாக்குதல்– 9 பேர் பலி, 41 பேர் காயம்.

• அக்.20, 2024– ககாங்கீர் தாக்குதல்– ஒரு டாக்டர் உட்பட 7 பேர் பலி

• மார்ச் 28, 2025– கதுவா தாக்குதல்– 4 போலீசார் சாவு

• ஏப், 22, 2025– பஹல்காம் தாக்குதல் – 26 பேர் சாவு

• நவ.10, 2025– டெல்லி செங்கோட்டைத் தாக்குதல்–13 பேர் பலி, 30 பேர் காயம்.

– இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியது யார்?

 பிரதமரும், உள்துறை அமைச்சரும் அல்லவா?

“தேசவிரோதச் செயல்களை ஏன் தடுக்கவில்லை? தடுக்க முடியவில்லை?” : ஒன்றிய அரசுக்கு முரசொலி கேள்வி!

டெல்லி செங்கோட்டைப் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் அதிகளவில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 தடை செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளை குற்றவாளிகள் அதிகளவில் கொள்முதல் செய்தது எப்படி? அதனை சேமித்து வைத்தது எப்படி?

கார் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர், அரியானா, உத்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 2,900 கிலோ வெடிமருந்தைக் கைப்பற்றி உள்ளனர். 

மேலும் ஏ.கே.ரக துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றி உள்ளனர். 2,900 கிலோ வெடிமருந்து இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது?

45 விழுக்காட்டுக்கு மேல் அமோனியம் நைட்ரேட்டைக் கொண்ட இரசாயனங்களை வெடிபொருட்கள் என ஒன்றிய அரசு 2011 ஆம் ஆண்டு அறிவித்தது. 

இந்த வேதிப் பொருளை இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை 2015 ஆம் ஆண்டு அரசு விதித்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் தடையில்லாமல் கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

‘டெல்லியில் நடைபெற்றது தேச விரோத சக்திகள் இழைத்த பயங்கரவாதச் செயல்” என்று ஒன்றிய அமைச்சரவைக் குழுக் கூட்டம் சொல்லி இருக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., இத்தகைய தேசவிரோதச் செயல்களை ஏன் தடுக்கவில்லை? தடுக்க முடியவில்லை?

பயங்கரப் பட்டியலை மெடல்களாகத் தயாரித்து மாட்டிக் கொள்ளப் போகிறார்களா பா.ஜ.க. ஆட்சியாளர்கள்? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை