எட்டாவது கண்டம்?

உதகை அருகேவுள்ள பைக்காரா நீர்வீழ்ச்சி இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தகவல்

திருவண்ணாமலை அருகே அரசம்பட்டில் டீசல் லாரி கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு 
70 ரசாயனங்கள் உடலில் கலக்க வழி வகுக்கிறது: புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகள்: இளைஞர்களிடம் அதிகளவு நாட்டம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்.
சென்னையில் ஒரே நாளில் 111 இடங்களில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றம் 
கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு,  காரைக்காலில் பள்ளிகள் கல்லூரிகளுக்கும் விடுமுறை  அறிவிப்பு.
அசம்பாவிதம் நடந்தும் கரூர், அரியலூரில் அலட்சியம்; தவெக ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள்: தடுக்காமல் அனுமதித்த தவெக  விஜய் ரசிகர்கள்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி.
பிலிப்பைன்சின் கூட்டு கடற்படை பயிற்சி எதிரொலி தென் சீனா கடலில் சீன ராணுவ விமானங்கள் ரோந்து.
சட்டமன்றதேர்தலில்சொத்துக்களைஎடப்பாடி பழனிசாமி மறைத்த வழக்கு  மீதான விசாரணை.நாளை உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது.

*இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
ராஜஸ்தானில் வேன்- லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி.

எதிர்க்கட்சிகளை முடக்க தேர்தல் ஆணையமே களமிறங்கிவிட்டது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

ராசிபுரம் கல்லூரியில் டைட்டல் பார்க் பணிகள் அமைப்பதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம்

*கும்மிடிப்பூண்டி அருகே சாலை பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

*ஊட்டியில் ஒரே இடத்தில் தென்பட்ட 3 புலிகள் - பொதுமக்கள் அச்சம

ஆயுத விநியோகம்?

பாஜக.​வினருக்கு ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் வழங்​கு​வதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது.

மேற்கு வங்க மாநிலத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் மம்தா பானர்ஜி முதல்​வ​ராக பொறுப்பு வகிக்​கிறார். இவரது கட்​சி​யின் எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி. அவ்​வப்​போது ஏதாவது கருத்​துகளை தெரி​வித்து சர்ச்​சை​யில் சிக்கி வரு​கிறார்.

இந்​நிலை​யில், ‘‘மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​களை அழிக்க ஆளுநர் சி.​வி.ஆனந்த போஸ், ஆயுதங்​களை​யும் வெடிப்​பொருட்​களையும் பாஜக.​வினருக்கு வழங்கி வரு​கிறார். 

கிரிமினல்​களுக்கு ஆளுநர் மாளி​கை​யில் அடைக்​கலம் கொடுக்​கிறார். அவற்றை எல்​லாம் ஆளுநர் போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று கூறி​னார். இந்த கருத்து பெரும் சர்ச்​சை​யாகி உள்​ளது.

இதுகுறித்து ஆளுநர் போஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய​தாவது: பொறுப்​பற்ற வகை​யிலும், எரிச்​சலூட்​டும் வகை​யிலும் எம்​.பி. கல்​யாண் பானர்ஜி பேசி​யிருக்​கிறார். இதற்​காக அவர் மன்​னிப்பு கேட்க வேண்​டும். அப்​படி கேட்​கா​விட்​டால் அவர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​பேன். 

ஆளுநர் மாளி​கை​யில் ஆயுதங்​களும் வெடிப்​பொருட்​களும் இருக்​கின்றன என்று ஆளும் கட்சி எம்​.பி. ஒரு​வர் கூறுகிறார் என்​றால், அவரது மாநிலத்​தின் போலீ​ஸார் மீது நம்​பிக்​கை​யில்​லை​யா?

ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் இருக்​கின்​றனவா என்​பதை பார்க்க, கல்​யாண் பானர்​ஜி, பத்​திரி​கை​யாளர்​கள், பொது​மக்​களுக்​காக காலை முதல் ஆளுநர் மாளிகை திறந்தே இருக்​கிறது.

 ஏற்​கெனவே சிலர் வந்து பார்த்து விட்டு சென்​றனர். சிலர் வந்து கொண்​டிருக்​கின்​றனர். ஆனால் கல்​யாண் பானர்ஜி எங்​கே? ஆளுநர் மாளி​கையை கொல்​கத்தா போலீ​ஸார் பாது​காத்து வரு​கின்​றனர். 

அப்​படி இருக்​கை​யில் இங்கு ஆயுதங்​களும் வெடிப்​பொருட்​களும் எப்​படி வரும்? கல்​யாண் பானர்ஜி கூறியது குறித்து உடனடி​யாக தீவிர விசா​ரணை நடத்த வேண்​டும். அவரது கருத்து ஆளுநரின் பாது​காப்​புக்​கான அத்​து​மீறலாகும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.


எட்டாவது கண்டம்!

இதுவரை 7 கண்டங்கள் மட்டுமே இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த நிலையில், இப்போது விஞ்ஞானிகள் 8வது கண்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

அதன் பெயர் 'ஸீலாண்டியா' (Zealandia). கிட்டத்தட்ட 375 மில்லியன் ஆண்டுகளாக கடலுக்கு அடியில் மறைந்திருந்த இந்த பிரம்மாண்ட நிலப்பரப்பு, நம் கிரகத்தின் புவியியல் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளது.

பல ஆண்டுகளாக, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா போன்ற தீவுகள், கடலில் சிதறிக் கிடக்கும் பாறைத் துண்டுகளாக மட்டுமே கருதப்பட்டன.

 ஆனால், அதிநவீன புவியியல் நுட்பங்கள் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள பாறை மாதிரிகள் மூலம், விஞ்ஞானிகள் அந்தத் தீவுகள் ஒரு பிரம்மாண்டமான கண்டத்தின் உச்சிகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஸீலாண்டியா கண்டம் 5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்து கிடக்கிறது. 

இது நமது இந்திய நாட்டின் பரப்பளவுக்கு கிட்டத்தட்ட சமம். இதன் 94% பகுதி, பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்கு அடியில் மூழ்கியே உள்ளது.

காந்த ஒழுங்கின்மை வரைபடம் மற்றும் பாறைகளின் தேதியிடல் போன்ற சிறப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்த நிலப்பரப்பு சாதாரணக் கடல் தளம் அல்ல; மற்ற கண்டங்களைப் போலவே தனித்துவமான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளனர்.

ஸீலாண்டியாவின் கதை 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. ஒரு காலத்தில் அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நிலப்பரப்புகளை உள்ளடக்கிய கோண்ட்வானா (Gondwana) என்ற பிரம்மாண்ட சூப்பர் கண்டத்தின் ஒரு பகுதியாக ஸீலாண்டியா இருந்தது.

 சுமார் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டெக்டோனிக் நகர்வுகள் காரணமாக கோண்ட்வானாவிலிருந்து ஸீலாண்டியா தனியாகப் பிரிந்தது.ஏன் மூழ்கியது? 

பிரிந்த பிறகு, ஸீலாண்டியாவின் மேலோடு மிகவும் மெல்லியதாகி, மெதுவாகக் கடலுக்குள் அமிழ்ந்து போனது. கடலுக்கடியில் இருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகள், ஒரு காலத்தில் நீண்ட மற்றும் சுறுசுறுப்பான எரிமலை மற்றும் டெக்டோனிக் வரலாற்றைக் கொண்ட நிலப்பரப்பு என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

அதன் காந்த அடையாளங்கள் கூட, மற்ற கண்டங்களைப் போலவே சிக்கலான புவியியல் அமைப்பைக் காட்டுகின்றன.

ஸீலாண்டியா கண்டமாக அறிவிக்கப்பட்டது வெறும் புதிய நிலப்பரப்பு அல்ல; இது புவியியல் அறிவியலையே சவாலுக்குள்ளாக்கியுள்ளது. 

ஒரு கண்டம் என்பது கடல் மட்டத்திற்கு மேலே நிலப்பரப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பாரம்பரிய வரையறையை இது உடைக்கிறது. ஒரு கண்டம் என்பது அதன் மேலோட்டின் தடிமன், கலவை மற்றும் டெக்டோனிக் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது என்பதை ஸீலாண்டியா நிரூபித்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு, பிராந்திய நில அதிர்வு அபாயங்கள், கனிம வளங்கள் மற்றும் பழங்காலக் காலநிலை மாற்றங்கள் குறித்துப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவும். கண்டங்களின் உருவாக்கம் மற்றும் புவித்தட்டு நகர்வு பற்றிய நமது பார்வையை மாற்றியமைக்கும் இந்த எட்டாவது கண்டம், கடலுக்கடியில் மறைந்துள்ள இன்னும் பல மர்மங்களுக்கு சான்றாக நிற்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை