எதிர்ப்பு எழட்டும்!


கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர்மழையால் நிரம்பிய பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகள்.அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம்; ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை.

தொடர் கனமழையால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அறிவிப்பு.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் பாதிப்பு.
 வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். நாளை மறுநாள் உருவாகிறது சென்யார் புயல்.
உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் சூர்யகாந்த். அடுத்த 15-மாதங்கள் பதவியில் நீடிப்பார்.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  
 எம்.ஜி.ஆர். குறித்து பேசுபவர்கள் எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. த.வெ.க. தலைவர் விஜயின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு  
இந்தியா- இஸ்ரேல் வர்த்தக ஒப்பந்தம் இரண்டு கட்டமாக அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர்  தகவல் .
சென்னை - ஐதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க தெற்கு ரயில்வே சார்பில் விரிவான திட்ட அறிக்கை  தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு.










கோட்டயம் பாதையில் நடக்க மக்களுக்கு வாய்ப்  பளித்த வைக்கம் சத்தியாக்கிர கம் முடிவுக்கு வந்து ஞாயிறன்று  (நவ.23 ) 100 ஆண்டுகளை நிறைவடைந்தது.

 1925 நவம்பர் 23 அன்று, கே.கேளப்பன் பொதுச்சாலைகளில் சுதந்திரமாக நடமாட அனுமதித்து அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம், 603 நாட்கள் நீடித்த ஒரு புகழ்  பெற்ற வைக்கம் போராட்டம் இறுதியாக வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. வைக்கம் சத்தியாக்கிரகம் மார்ச் 30, 1924 அன்று தொடங்கியது. 
வைக்கம் மகாதேவர் கோவில் அருகே  பொதுச்சாலையில் ஒடுக்கப்பட்ட சாதியின ருக்கு நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டது. அதற்காக சாதி எல்லை அறிவிப்பு பலகை கள் வைக்கப்பட்டிருந்தன. அதை எதிர்த்துப்  போராட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சி யாக அத்தகைய தீண்டாமை பலகைகள் அகற்றப்பட்டு நவம்பர் 23 ஞாயிற்றுக் கிழமை யுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

 இந்தப் போராட்டம் டி.கே. மாதவன், ஸ்ரீ நாராயண குரு, ஈ.வே.ராமசாமி நாயக்கர் (பெரியார்) , மன்னத்து பத்மநாபன், கே.பி. கேசவமேனன், கே.கேளப்பன் போன்ற மறு மலர்ச்சித் தலைவர்களால் வழிநடத்தப் பட்டது. மகாத்மா காந்தி 1925 மார்ச் 9 அன்று வைக்கம் வந்தார். சத்தியாக்கிரகத்தை எதிர்த்த இண்டம்துருத்தி தேவன் நீல கண்டன் நம்பூதிரியை காந்தி சந்தித்தார். பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால், சத்தி யாக்கிரகம் துவக்கப்பட்டது.

 603 நாட்கள் நீடித்த புகழ்பெற்ற போராட்டம் நடமாடும் சுதந்திரத்தை அடைவதில் முடிந்தது.

எதிர்பு புயல் வீசட்டும்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப் பட்ட நான்கு தொகுப்புச் சட்டங்கள் நடை முறைக்கு வந்துள்ளதாக அடாவடியாக அறி வித்துள்ளது ஒன்றிய அரசு.

 தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் அழுத்தம் காரணமாக உடனடி அமலுக்கு வந்துள் ளது. இதை எதிர்த்து நாடு தழுவிய கிளர்ச்சிப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. 

அனைத்து வகையிலும் தொழிலாளர் களுக்கு எதிரான இந்த தொகுப்புச் சட்டங் களை நடைமுறைப்படுத்திய கையோடு எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களுக்கு எதிரான மேலும் பல சட்டங்களை கொண்டுவரத் துணிந்துள்ளது நரேந்திர மோடி  தலைமையிலான பாஜக கூட்டணி அரசு. 

டிசம்பர் 1 அன்று துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 10 முக்கியமான சட்டமுன்வரைவுகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. 

அதில் ஒன்று தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரை அடிப்படையில் உயர் கல்விக்கு ஒரே ஆணையம் அமைப்பதற்கான மசோதா. இதன்படி யுஜிசி, ஏஐடிசிஇ, என்சி டிஇ உள்ளிட்ட வாரியங்கள் கலைக்கப்பட்டு உயர்கல்விக்கு ஒரே வாரியம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 

இந்த ஆணையத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பி னர்கள் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

உயர்கல்வித்துறையை மத்திய மயம், வணிக மயம், காவிமயம் என்ற மும்மயக்கத்திற்குள் ஆழ்த்துவதே ஒன்றிய ஆட்சியாளர்களின் திட்டம். இத்தகைய உயர்கல்வி வாரியங்களை ஆர்எஸ்எஸ் மற்றும் கார்ப்பரேட் முதலாளி களின் அவயமாக்க துடிக்கிறது மோடி அரசு.

 இது தடுக்கப்பட வேண்டும்.

காப்பீட்டுத்துறையை முற்றிலும் தனியார்மய மாக்குவதற்கான மசோதாவும் கொண்டு வரப்பட இருக்கிறது. இது காப்பீட்டுத்துறையை மேலும் அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காவுகொடுக்கவே இட்டுச் செல்லும். பயனாளர்களின் நலனை முற்றிலும் வர்த்தகச் சூதாடிகளின் கைகளில் கொடுக்கும் விபரீதத் திட்டம் இது. 

காப்பீட்டுத் துறையை பாதுகாப்பது இந்திய மக்களின் எதிர்காலத்தோடு தொடர்புடையது. 

எஸ்ஐஆர் என்கிற பெயரில் இந்தியா வின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிக்கற் களையே பெயர்க்க முயலும் மோடி அரசு இன்னும் ஒரு தாக்குதலாக, ஒரே நாடு, ஒரே  தேர்தல் என்ற சட்டத்தையும் கொண்டுவரத் துடிக்கிறது.

 இதற்காக அமைக்கப்பட்ட குழு வின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. நாடாளு மன்றத்தின் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக எண்ணம் கொண்ட கட்சிகளும் இணைந்து செயல்பட்டு மோடி அரசின் திட்டங்களை முறி யடிக்க வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை