யார் தரு வார் உத்தரவாதம்?

 பீகார் தேர்தலையொட்டி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது.

 தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகார் இளைஞர்கள் வேலைக்காக வெளி மாநிலம் செல்லும் நிலை மை மாறும் என்றும் இது எனது உத்தரவாதம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

2014 முதல் பிரதமரே நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது நிறைவேற்றப்பட் டுள்ளதா? நான் பிரதமரானால் ஆண்டுக்கு 2  கோடிப் பேருக்கு வேலை வழங்கப்படும் என்றீர். 

இந்த வாக்குறுதி உங்களால் நிறைவேற்றப்பட்டி ருந்தால் இதுவரை 22 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். 

ஆனால் அந்த வாக்குறுதி அதோகதியானது.

விவசாயிகளின் விளைபொருளுக்கு உற் பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை வழங்கப்படும் என்று கூறியது நீர்மேல் எழுத்துப் போலாகிவிட்டது. 

இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கில் அப்போதைய நிதிய மைச்சர் அருண்ஜெட்லி தேர்தல் வாக்குறுதி கள் எல்லாம் நிறைவேற்றப்படுவது கட்டாயம் இல்லை; அவை வெறும் தேர்தல் வாக்குறுதி கள்தான் (ஜூம்லா) என்று நாநடுங்காமல் கூறி யதை நாடறியும்.

கருப்புப்பணத்தை கண்டுபிடித்து ஒவ்வொரு வர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப் படும் என்று கூறியது அப்படியே காற்றில் கலந்து விட்டது. பணமதிப்பிழப்பு செய்யும் போது கருப்புப் பணம் முற்றாக ஒழிக்கப்பட்டு விடும் என்று கூறினீர்கள்.

 ஆனால் நாட்டு மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே ஏடிஎம் வரிசை யில் நின்று உயிரைவிட்டது தான் மிச்சம். ஆனால் பின்னர் பாஜகவுக்கு தேர்தல் பத்தி ரங்கள் மூலம் வசூல் தான் நடந்தது.

பாஜக கூறிய தேர்தல் வாக்குறுதிகளில் எவை எவை நிறைவேற்றப்பட்டது என்றால் ஆர்எஸ்எஸ் - அஜண்டாவான அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (370) ரத்து டன் மாநிலத்தையே கூறு போட்டது, பொது சிவில் சட்டம் (உத்தரகண்ட் மாநிலத்தில்) ஆகி யவை தான். 

இவை யாவும்  ஆர்எஸ்எஸ்க்கு கொடுத்த வாக்குறுதிகள். ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதுவுமே நிறைவேற் றப்படவில்லையே. நாட்டு மக்கள் இன்னுமா உங்களது வாக்குறுதிகளை நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

பீகார் மாநிலத்தில் உங்களது ஒத்துழைப் போடு இப்போது நடக்கும் ஆட்சிக்கு ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகிறது. பீகார் மாநில இளைஞர் கள் பிழைப்புக்காக வெளி மாநிலங்கள் செல்வ தைத் தடுக்க என்ன செய்தது? 

கொரோனா காலத்தில் சொந்த மண்ணுக்குத் திரும்பியவர்க ளை பசி, பட்டினியால், போக்குவரத்து வசதி செய் யாமல் உயிரைத் தானே வாங்கியது. இந்நிலை யில் தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார் கள் என்று உங்களால் வீண்பழி சுமத்தியதைத் தவிர வேறென்ன செய்ய முடிந்தது?

 உங்களது வாக்குறுதியை யார் நம்புவார்? 

அதற்கு யார் தரு வார் உத்தரவாதம்?

 கன் பவுடர் சதி

(Gunpowder Plot) 

கன் பவுடர் சதி என்பது இங்கிலாந்து வரலாற்றில் நடந்த ஒரு தோல்வியடைந்த படுகொலைச் சதித் திட்டம் ஆகும். 

 இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னரையும் (King James I) நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் (Lords and Commons) வெடிவைத்துத் தகர்ப்பது.இச்சதி திட்டத்தின் நோக்கம் சதி நடந்தது 1605ஆண்டு நவம்பர் 5, 

 கேட்ஸ்பி (Robert Catesby) என்பவரின் தலைமையில் கத்தோலிக்க சதிகாரர்கள் ஒரு குழுவாக இதைத் திட்டமிட்டனர்.

 இச்சதியில் கைதாகி, முக்கியமாக அறியப்பட்டவர் கய் ஃபாக்ஸ் (Guy Fawkes) ஆவார். 

இவரே நாடாளுமன்றக் கட்டிடத்தின் கீழறையில் (Undercroft) வெடிமருந்துப் பீப்பாய்களுடன்காத்துக்கொண்டிருந்தபோது பிடிபட்டார்.

 சதிக்கானகாரணம்.இங்கிலாந்தில் அதுவரை செல்வாக்குடன் அரசோட்சிவந்த கத்தோலிக்கர்கள் அதிகாரத்தை இழந்த்தற்கு பழி வாங்கவும் அனுபவித்த மதத் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், புராட்டஸ்டன்ட் அரசாங்கத்தை அகற்றிவிட்டு மீண்டும் கத்தோலிக்க ஆட்சியை மீண்டும் நிறுவவும் அவர்கள் விரும்பினர்.

ஆனால் இச்சதித்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன், ஒரு ரகசியக் கடிதத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்தது. 

அதன் விளைவாக, நவம்பர் 4, 1605 அன்று நள்ளிரவுக்குப் பிறகு நாடாளுமன்றக் கட்டிடத்தின் கீழ் சோதனை நடந்தபோது, ஃபாக்ஸ் 36 வெடிமருந்துப் பீப்பாய்களுடன் பிடிபட்டார்.

  இச்சதி தோல்வியடைந்ததன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ஆம் தேதி இங்கிலாந்தில் 'பான்ஃபயர் நைட்' (Bonfire Night) அல்லது 'கய் ஃபாக்ஸ் டே' (Guy Fawkes Day) என்று கொண்டாடப்படுகிறது.

 அந்நாளில் பட்டாசுகளை வெடித்தும், கய் ஃபாக்ஸின் உருவ பொம்மைகளை எரித்தும் கொண்டாடுவார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை