உத்திரவாதம் தரத் தயாரா?

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி ரூ.1,000 கோடியை தொட்டது; நல்லுள்ளங்களுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குணா, சதீஷ், கார்த்திக் ஆகிய 3 பேர் சுட்டுப்பிடிப்பு.காலில் குண்டடி பட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி.
SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். 

- TN Election CEOதேர்தல் ஆணைத்தின் சொந்த விதிப்படி (RER 1960) Rule 21-26 ஒரு நபரின் பெயரை நீக்குவதற்கு முன் அறிவிப்பும், விளக்கமும், காரணங்களும் கொடுக்கப்பட வேண்டும்,  வெறும் படிவத்தை நிரப்பிக் கொடுக்கவில்லை என்றால் பெயரை நீக்குவோம் என்று சொல்வது தேர்தல் ஆணையத்தின் சொந்த விதி மற்றும், RPA சட்டங்களுக்கு எதிரானது.

படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால் அவர் இறந்துவிட்டார், இடம் மாறிவிட்டார் என்று முடிவுக்கு வர ECI-க்கும், BLO-க்கும் யார் அதிகாரம் கொடுத்தது? 3-6 மாதங்கள் இருந்த இந்த SIR/SSR நடைமுறையை 1 மாதமாக குறைத்தீர்கள் சரி! 

ஒரே மாதத்தில் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டு,  காரணம் எழுதி எப்படி ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க முடியும்? 

இதற்கெல்லாம் @TNelectionsCEO என்ன விளக்கம் கொடுக்கப் போகிறது?

#TamilNaduSaysNoToSIR.

எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து விதவிதமாக அவதூறு பரப்ப"அவதூறு அவமதிப்பு அமைச்சகத்"தை பிரதமர் மோடி உருவாக்கலாம்: பிரியங்கா காந்தி
பீகாரில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு.
ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்.
கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே சுட்டுப்பிடித்தது தனிப்படை போலீஸ்.
அதிமுகவில் எடப்பாடி மகன்,மைத்துனர், மாப்பிள்ளை தலையீடு:- செங்கோட்டையன் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த விவகாரம் தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு.
பொதுக்கூட்டம், பிரசாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க 6ம் தேதி அனைத்துக்கட்சிகூட்டம்.அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்.
 நாடு முழுவதும் பரவும் ‘டிஜிட்டல்’ மோசடி; பெங்களூரு, ஐதராபாத் டெல்லியில்மட்டும் 60% வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம்.
டெல்லியில் ஓயாத பழிவாங்கும் படலம்; இளைஞரை சுட்டுக்கொன்ற ரவுடி கும்பல்: சமூக வலைதளத்தில் பகிரங்க அறிவிப்பு .
காஞ்சிபுரத்தில் 2 நாட்களில் நீர்நிலைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.
செங்கல்பட்டு சிறையில் கைதியை சரமாரி தாக்கி சிலகைதிகள் கொலை மிரட்டல்: போலீசார் விசாரணை.














செயற்கை நுண்ணறிவின் இருண்ட பக்கம்  

தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ண றிவு (AI) என்பது தவிர்க்க முடியாத ஒரு புரட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் புரட்சி, கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத லாப வெறிக்காக, உழைக்கும் வர்க்கத்தின் மீது தொடுக் கப்படும் ஒரு புதிய போராக உருவெடுத்துள்ளது என்பதே கசப்பான உண்மை.

பெரு நிறுவனங்கள் எப்போதும் ஊழியர்க ளை ஒரு ‘செலவினமாக’ மட்டுமே பார்க்கின்றன. இப்போது, ஏஐ (AI)-யை ஒரு புதிய ஆயுதமாகப் பயன்படுத்தி, தங்கள் மனிதவளத்தைச் சுருக்க வும், உற்பத்தியைச் செலவின்றி அதிகரிக்கவும் முயல்கின்றன. இதன் விளைவுதான், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் தொட ரும் வரலாறு காணாத உழைப்புச் சுரண்டலும், ஆட்குறைப்பும் ஆகும்.

உலகளாவிய நிறுவனங்கள் ஏஐ தொழில் நுட்பத்தை மிக வேகமாக ஏற்றுக்கொள்வதால், ஊழியர்களுக்குப் பணி இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் மட்டும், அமேசான் , மைக்ரோசாப்ட், இன்டெல், டிசிஎஸ் (Amazon, Microsoft, Intel, TCS) போன்ற சர்வதேச நிறுவனங்கள் இதுவரை சுமார் 1,12,000-க்கும் மேற்பட்ட வேலைகளை நீக்கி யுள்ளன. 2024 இல் 1,60,000 க்கும் மேற்பட்டோரின் வேலை பறிபோனது. கோல்டுமேன் சாக்ஸ் (Gold man Sachs) ஆய்வின்படி, உலகளவில் சுமார் 30 கோடி வேலைகள் செயற்கை நுண்ணறிவு வரு கையால் பாதிக்கப்படலாம் எனக் கணிக்கப் பட்டுள்ளது. மேலும், 41% நிறுவனங்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏஐ ஒருங்கிணைப் பால் ஆட்குறைப்பு இருக்கும் என எதிர்பார்ப்ப தாக உலகப் பொருளாதார மன்றம் (WEF) தெரி வித்துள்ளது. 

எளிமையான, திரும்பத் திரும்பச் செய்யப் படும் பணிகளை ஏஐ துல்லியமாகவும், வேகமா கவும் செய்வதால், பல நடுத்தர அனுபவம் கொண்ட ஊழியர்கள் இன்று வேலையை இழந்து நிற்கின்றனர். இது நிறுவனங்களுக்கு லாபத்தை அள்ளித் தருகிறது. ஆனால், பணி நீக்கம் செய்யப்படும் ஆயிரக்கணக்கான ஊழி யர்களது குடும்பங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.

ஏஐ-யின் வருகை என்பது நிரந்தரமானது. எனவே, நாம் ஏஐ-யை ஒதுக்கிவிட முடியாது. ஆனால், நிறுவனங்களின் லாப நோக்கத்தை எதிர்த்து, உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைக ளுக்காகப் போராட வேண்டிய தேவை அதி கரித்துள்ளது.

இன்றைய சூழலில், வேலையில் நீடிக்க வேண்டுமானால், ஒவ்வொரு தொழிலாளியும் ஏஐ-யைப் பயன்படுத்தும் திறன்களைக் கற்றுக் கொள்வது கட்டாயமாகிறது. நிறுவனங்களும், அரசுகளும் இணைந்து, வேலையிழந்த மற்றும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏஐ-க்கு ஏற்ற மறுபயிற்சி (Re-skilling) மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல் படுத்த வேண்டும். இல்லையேல், ஏஐயின் மின்னல் வேக வளர்ச்சி, செல்வமும் அதிகாரமும் ஒரு சிலரிடம் மட்டுமே மேலும் மேலும் குவியும் நிலையை உருவாக்கி, சமூக ஏற்றத்தாழ்வை மேலும் ஆழமாக்கிவிடும்.


உத்திரவாதம் தரத் தயாரா?

ஜனநாயக விரோத - சட்ட விரோத முயற்சிகளைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்” என்று தி.மு.க. தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. விரல் விட்டு எண்ணக் கூடிய நான்கைந்து கட்சிகள் மட்டும் வரவில்லை. அதிலும் இரண்டு கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ஏற்கவில்லை என்று அறிவித்த கட்சிகள் ஆகும்.

ஒன்றிணைந்து செயல்படுவதில் அவர்களுக்கு தயக்கம் இருக்கலாமே தவிர, தேர்தல் ஆணையத்தின் முடிவை அவர்கள் ஏற்கவில்லை. பா.ஜ.க.வும், பா.ஜ.க.வின் பழனிசாமி பிரிவும் மட்டுமே பங்கேற்காத முக்கியக் கட்சிகள். மற்றபடி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளன. கடுமையாக எதிர்க்கின்றன.

“பீகார் மாநில S.I.R. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், குறிப்பாக அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளிவராத காலகட்டத்தில், தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளது ஏற்க இயலாது.

நமது அச்சத்துக்கு மிக முக்கியமான காரணம், பீகார் மாநிலத்தில் நடைபெற்றவை ஆகும்.

SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !

ஒன்றிய பா.ஜ.க.வின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. முறையான நடவடிக்கையைச் செய்யாமல் தேர்தல் ஆணையமே அறிவிப்பைத் தன்னிச்சையாக வெளியிடுவது, அரசியல் சட்டத்திற்கும் மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்திற்கும் எதிரானது. இப்போது செய்யப்பட்டுள்ள S.I.R அறிவிப்பே சட்டவிரோதமாகும்” என்று அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த உணர்வோடு நிலைப்பாட்டை எடுக்கின்றன.

பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தது. பீகாரில் ஒரே தொகுதியில் 30,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் குற்றம்சாட்டினார். இதுபோன்ற சதிகளை தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிப்பார்கள்.

அரசியல் கட்சிகள் கேட்கும் கேள்விகள் மிகமிகச் சாதாரணமானவை ஆகும். ஆதார் அட்டையை 12-ஆவது ஆவணமாகச் சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 27.10.2025 அறிவிப்பில் தெளிவற்ற முறையில் ஆதார் பற்றி குறிப்பிட்டுள்ளது ஏன்? என்பதுதான் இவர்கள் எழுப்பும் கேள்வி ஆகும்.

ஆதார் அட்டையைக் கொடுப்பதே ஒன்றிய அரசுதான். ஆதார் அட்டைக்கான உச்சநீதிமன்றத்தில் பலமாக வாதிட்டதும் பா.ஜ.க. அரசுதான். இப்போது அவர்களே ஆதார் அட்டையை ஏற்க மறுத்தால் பிறகு யார் ஏற்பார்கள்? ஆதாருக்கு என்ன மரியாதை?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று தி.மு.க. இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?

ஆவணங்கள் கொடுக்க வேண்டுமா, இல்லையா என்ற தெளிவு இல்லை. இதைக் கூடத் தெளிவாகச் சொல்லாமல் எதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளும் கேட்கும் கேள்வி ஆகும்.

SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !

இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் 4 முதல் தொடங்குகின்றது. ஏற்கனவே மழை பெய்து கொண்டு இருக்கிறது. அரசு அலுவலர்கள், நிவாரணப் பணிகளில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இது போன்ற பணியைச் செய்ய முடியாது. செய்தாலும் குழப்பம்தான் ஏற்படும். தேர்தல் ஆணையத்துக்கு என்ன அவசரம் என்பதுதான் யதார்த்தமான கேள்வி ஆகும். “தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் S.I.R-ஐ நடத்த வேண்டும்” என்றுதான் இவர்கள் கோருகிறார்கள்.

பீகாரில் SIR-ல் நடைபெற்றுள்ள மோசடியை Scroll இணையப் பத்திரிகை கள ஆய்வு செய்தது. 100 பேரிடம் பேட்டி கண்டார்கள். பல ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசித்து வந்த சிலரையே ‘காணப்படவில்லை' (absent) அல்லது 'இடமாற்றம்' (shifted) என்று சொல்லப்பட்டதாக Scroll தெரிவித்திருக்கிறது.

தேர்தல் ஆணையம், “வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு” நடத்தப்படும் என்று தெளிவாகக் கூறியிருந்த போதிலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் (BLOs) தங்கள் வீடுகளுக்கு வரவே இல்லை என்று வாக்காளர்கள் Scroll செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.இதுபோல் இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா?

எந்த சீர்திருத்தமும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் எதற்கு இந்த குழப்பம் என்பது தான் கேள்வி. பீகாரில் கண்ணுக்கு முன்னால் அனைத்தையும் பார்த்தோம். அதே போல் இங்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வைக்கும் குற்றச்சாட்டு எதற்கும் தேர்தல் ஆணையம் பதில் சொல்வது இல்லை. பக்கம் பக்கமாக எழுதி வந்து வாசிக்கிறார் தேர்தல் ஆணையர். ஆனால் எந்தக் கேள்விக்கும் முறையான பதில் அளிப்பது இல்லை.

என­வே­தான் அர­சி­யல் கட்­சி­கள், தேர்­தல் ஆணை­யத்தை நம்­பா­மல் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் கத­வைத் தட்­டு­வ­தற்கு முன்­வந்­துள்­ளன.

உச்­ச­நீ­தி­மன்­றம்­தான் உரிய நீதியை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை