உரிமம் வழங்கல்?
*காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது முன்னாள் திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சரக டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்தவர் வருண்குமார். இவர் தற்போது சென்னையில் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜி.யாகப் பணியில் தொடர்கிறார்."நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில், அக்கட்சியினர் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக சீமான் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வருண்குமார் திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீதிமன்ற நடவடிக்கை: இந்த அவதூறு வழக்கில், சீமான் திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
தன்னுடைய மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், அதன் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் சீமான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எல். விக்டோரியா கௌரி, சீமான் மீது முன்னாள் திருச்சி டி.ஐ.ஜி.யாக இருந்த வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை முழுவதுமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு, சீமானுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு முக்கிய விடுதலை அளித்திருப்பதோடு, அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
சீமான் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம்.தரம் தாழ்ந்து பேசலாம்.அதை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது என உரிமம வழங்குவதாகத தீர்ப்பு அமைந்துள்ளதாக பேசப் படுகிறது.









