இந்திய பில்லியனர்கள்

எண்ணிக்கை 4மடங்கு அதிகரிப்பு!


*கடந்த 4 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில்* 
 
*நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது!* 
 
*‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு!*  

தமிழ்நாடு அரசின் இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கடந்த 4 ஆண்டுகளில் நெல் கொள்முதல் விகிதம் உயர்ந்துள்ளதாக *‘தி இந்து’* நாளேடு பாராட்டியுள்ளது.  

🔹 *குறுவை சாகுபடி (ஏப்-ஆகஸ்ட்)*
  
- 2021-22: *15.94%*  
- 2022-23: *43.67%*√
- 2023-24: *36.77%*  
- 2024-25: *41.02%* ⬆

📈 *4 ஆண்டுகளில் 16%ல் இருந்து 40%க்கு மேல் உயர்வு!*  

✅ டெல்டா மாவட்டங்கள் அதிக பங்களிப்பு  
✅ காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை – *24% பங்களிப்பு*  

🌾 இலவச மின்சாரம், புதிய கொள்முதல் நிலையங்கள் – குறுவை & சம்பா பருவங்களில் கொள்முதல் பெருக்கம்!  

*‘தி இந்து’ ஆங்கிலம்.




இந்தியாவின் 1%

பெரும் பணக்காரர்களின் செல்வம் 23 ஆண்டுகளில்

62% அதிகரிப்பு 

இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டுக்குள் 62% அதிகரித்துள்ளதாக தென்னாப்பிரிக்க தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.


சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய ஜி20 அமைப்பு சார்பில் நிபணர் குழு அமைக்கப்பட்டது. 2001-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில், ஜெயதி கோஷ், வின்னி பியானிமா, இம்ரான் வலோடியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் சமத்துவமின்மை என்பது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய அளவுக்கு (emergency levels) அதிகரித்துள்ளது. இது ஜனநாயக நிலைத்தன்மை, பொருளாதார மீள்தன்மை, காலநிலை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.


2000-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் பெரும்பகுதி வசதிபடைத்தவர்கள் வசம் நோக்கியே பாய்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட செல்வங்களில் 41%, முதல் 1% பணக்காரர்கள் வசமே சென்றுள்ளது.


அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட செல்வங்களில் 1%ஐ மட்டுமே உலக மக்களில் பாதி பேர் பெற்றுள்ளனர். இது சர்வதேச அவசரநிலையைக் காட்டுகிறது.


இந்தியா மற்றும் சீனா போன்ற பொருளாதாரங்கள் வளர்ந்ததால் நாடுகளுக்கு இடையேயான இடைவெளிகள் ஓரளவு குறைந்துள்ளன.

எனினும், பெரும்பாலான நாடுகளில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது.


உலகின் பாதி நாடுகளின் செல்வத்தைவிட அதிக செல்வத்தை உலகின் 1% செல்வந்தர்கள் கொண்டிருக்கிறார்கள். அதாவது அவர்கள் உலக செல்வத்தில் 74%ஐ தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்திய செல்வந்தர்களில் முதல் 1 சதவீதத்தினரின் செல்வம் 2000 - 2023 காலகட்டத்தில் 62% அதிகரித்துள்ளது. 

.

தீவிர சமத்துவமின்மைக்குக் காரணம், அரசியலும் கொள்கைகளுமே. இது தவிர்க்க முடியாதது அல்ல. பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு காண சர்வதேச குழு அமைக்கப்பட்டதைப் போல, இந்த தீவிர சமத்துவமின்மைக்கு தீர்வு காணவும் ஒரு சர்வதேச குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழு சித்தாந்தங்களின் அடிப்படையில் அல்லாமல், தரவுகளின் அடிப்படையில் அரசாங்கங்களை வழிநடத்த வேண்டும்.


இந்த பிரச்சினை புறக்கணிக்கப்பட்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். அதிக சமத்துவமின்மை உள்ள நாடுகளில் ஜனநாயகம் பலவீனமடைய 7 மடங்கு வாய்ப்புகள் அதிகம். 2000 முதல் வறுமை குறைப்பில் முன்னேற்றம் குறைந்துள்ளது.


தற்போது 230 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறார்கள். சுமார் 130 கோடி மக்கள் மருத்துவச் செலவுகளால் வறுமையில் தள்ளப்படுகிறார்கள். செல்வந்தர்களிடம் செல்வம் மேலும் மேலும் குவிவது சமூக அநீதி மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியாகவும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகிறது.


இதைச் சரி செய்ய பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அரசியல் நடவடிக்கையும் தேவைப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  இந்திய பணக்காரர்களின் வளர்ச்சி 2016 இல் இருந்து உலக பணக்காரர்களின் வளர்ச்சியை விட மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது.

இந்திய பில்லினர்கள் 2014 இல் .70 ஆக இருந்தது தற்போது நான்கு மடங்காகி 284 ஆக இருக்கிறது.



உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மனு .

முழு விபரம்!

ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக கூட்டுறவால் பீகாரில் கடும் விமர்சனத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்கு வித்திடும் வகையிலும் அமைந்துள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான இது போன்ற நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற முனைப்புடன் நவ.02 அன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், “ஜனநாயக விரோத - சட்ட விரோத S.I.R. முயற்சிகளைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும்!” என அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!

அதன்படி,  தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (S.I.R) எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

அம்மனுவில், “பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S.I.R) செய்தபோது பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. அதற்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவை இதுவரை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. 

இந்த சூழலில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு மேற்கொள்வது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் காலத்தில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை போன்றவை வருவதால், வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படும். இதனால் அவர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


தெருவில் நடக்க முடியாது!

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், முதலமைச்சராக தேஜஸ்வி வருவார் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. இதனால் NDA கூட்டணி தலைவர்கள் பிரதமர் மோடி, நிதிஷ்குமார், அமித்ஷா ஆகியோர் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.

மேலும் NDA கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்துள்ளார். 

இதனால் எங்களுக்கு என்ன கிடைத்தது?, எங்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. எந்த அடிப்படை வசதியும் இல்லை என மக்கள் குற்றச்சாட்டுகனை வைத்து வருகிறார்கள். 

பா.ஜ.க கூட்டணிக்கு எங்கள் வாக்குகளை செலுத்த மாட்டோம் என துணிச்சலுடன், வாக்கு கேட்டு செல்லும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களிடமே தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் NDA கூட்டணி தோல்வி பயத்தில் இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடாகத்தான் ஒன்றிய அமைச்சர் லாலன் சிங்கின் பேச்சு அமைந்துள்ளது. பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், ”பீகாரில் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் தேர்தல் நாளில் நடமாட முடியாது” என வாக்காளர்களை மிரட்டியுள்ளார்.

இவரின் இந்த மிரட்டல் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து பீகார் மக்களுக்கு மிரட்டல் விடுத்த ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை