இதற்கு மேல்...?

உடல்நலக் குறைவால் காலமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி. இறுதிக் காலம் வரையிலும் தமிழுக்கு தொண்டாற்றியவர் எனவும் புகழாரம்.

மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.16-வது ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை உட்பட 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு.
பொறுப்புடிஜிபியை அறிமுகப்படுத்தியதே அதிமுகதான் டிஜிபி நியமனம் பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு அருகதை இல்லை: அமைச்சர் ரகுபதி 
திமுக உடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்தது காங்கிரஸ். தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.
தமிழ்நாட்டில் SIR பணிகளை முடிப்பதில் சிக்கல். மாநிலத்தில் இதுவரை 36% படிவங்கள் மட்டுமே பூர்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றம்.
400 மாடுகளுடன் போராட சென்ற சீமான்: போலீஸ் தடையால் ஏமாற்றம்.



ஊடக நிலை!

ஜம்மு ஜம்மு-காஷ்மீர் பகுதியின் முக்கிய பிராந்திய ஊடக மாக இருப்பது “காஷ்மீர் டைம்ஸ்” பத்திரிகை ஆகும்.

 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த  பத்திரிகை செய்தித்தாள் மற்றும் டிஜிட்டல் வடிவில் இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத் தில் (2021 - 2022) காஷ்மீர் டைம்ஸின் செய்தித்தாள் பதிப்பு நிறுத்தப் பட்டது.

தற்போது டிஜிட்டல் வடி வில் மட்டுமே “காஷ்மீர் டைம்ஸ்” செய்தி மற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

 இந்நிலையில், வியாழனன்று ஜம்முவின் ரெசிடென்சி சாலை யில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் அலு வலகத்தில் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) திடீரென சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சோதனை மேற்கொள் ளப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் புலனாய்வு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படு கிறது. காஷ்மீர் டைம்ஸ் அலுவல கத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

 மவுனமாக்க முயற்சி இந்நிலையில், காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் பிரபோத் ஜம்வால், அனுராதா பாசின் ஆகி யோர் வெளியிட்டுள்ள கூட்ட றிக்கையில், “எங்கள் அலுவல கத்தில் சோதனை நடவடிக்கை களை உறுதிப்படுத்தும் அதிகா ரப்பூர்வ அறிவிப்போ அல்லது அறிக்கையோ எங்களுக்கு இது வரை கிடைக்கவில்லை.

 சோதனை கள் நடந்ததாகக் கூறப்படும் எங்கள் அலுவலகம், கடந்த 4 ஆண்டுக ளாக மூடப்பட்டு செயல்படாமல் இருக்கிறது. ஆனால் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. 

எங்கள் அலுவலகத்தில் சோ தனை நடத்தப்பட்டதாகத் தெரி விக்கப்படும் தகவல்கள், அரசுக்கு எதிரான செயல்பாடுகளை கையாண்டதாகக் கூறப்படும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு கள் காஷ்மீர் டைம்ஸ் நிறுவனத்தை மவுனமாக்க மேற்கொள்ளப்படும் மற்றொரு முயற்சியாகும்.

பொதுவாக அரசை விமர்சிப் பது, அரசுக்கு எதிரானது அல்ல. உண்மையில், அது அதற்கு நேர் எதிர்மாறானதே ஆகும். ஒரு சக்திவாய்ந்த, கேள்விகள் கேட்கும் ஊடகம் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இன்றியமையா தது ஆகும். அதிகாரத்தைக் கண்கா ணித்தல், ஊழலை விசாரித்தல், புறக்கணிக்கப்பட்ட குரல்களைப் பலப்படுத்துதல் போன்ற எங்கள் பணி, நமது தேசத்தை வலுப் படுத்துகிறதே தவிர ஒரு போதும் பலவீனப்படுத்தாது. 

தொடர்ந்து ஜனநாயகம் சார்ந்த பணியைச் செய்வதால்தான் நாங்கள் குறி வைக்கப்படுகிறோம். விமர்சனக் குரல்கள் பெருகிய முறையில் அரிதாகி வரும் ஒரு சகாப்தத் தில், அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசத் தயாராக இருக்கும் சில சுயாதீன ஊடகங்க ளில் ஒன்றாக நாங்கள் இருக்கி றோம்.  

வெளிப்படைத் தன்மை தேசத் துரோகமல்ல எங்கள் அலுவலகங்கள் மீது சோதனையிட அரசுக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் எங்களின் உண்மைக்கான உறுதிப்பாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியாது. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்ட விரோதமாக்குவதற்கும், இறுதியில் வாயடைப்பதற்கும் வடி வமைக்கப்பட்டுள்ளன. 

இதனைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். பத்திரிகைத் துறை என்பது ஒரு குற்றமுள்ள துறை அல்ல. அதே போல வெளிப்படைத்தன்மை என் பது தேசத்துரோகம் அல்ல. மேலும், எங்களைச் சார்ந்திருப்பவர்க ளுக்கு நாங்கள் தொடர்ந்து தகவல் தெரிவிப்போம், விசாரிப் போம், வாதிடுவோம், செய்திக் கட்டுரைகளை வெளியிடுவோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மேல் யார் சொல்ல வேண்டும்?
சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது” என்று உச்சந்தலையில் ஆளுநர் ரவியை கொட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம். 

இதற்கு மேல் அவருக்கு அறிவுரையை யார் சொல்ல வேண்டும்.‘“ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது” என்று கிண்டி ரவிக்கு கிடுக்குப் பிடி போட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதற்கு மேல் அவருக்கு உறைக்கும் அளவுக்கு யார் சொல்ல முடியும்?

நாகலாந்தில் இருந்து விரட்டப்பட்டவர் ஆர்.என். ரவி. தனக்கு வேண்டிய ஒரு அதிகாரியின் மூலமாக கெஞ்சிக் கூத்தாடி தமிழ்நாட்டுக்கு ஆளுநர் ஆனவர் ரவி. இங்கு இருந்த கெடுமதியானவர்கள் கையில் சிக்கினார். 

வந்தவர் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தார்.

இறுதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 18 மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.

‘அரசமைப்புச் சட்டம் 142 ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் தரப்பட்டவையாக நாங்கள் அறிவிக்கிறோம். 

நீண்ட காலமாக மசோதாவை நிலுவையில் வைத்திருந்த ஆளுநர், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக நேர்மையற்ற செயல் செய்துள்ளார். இது போன்று பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்தது. அன்றைய தினம், குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். 

எனவே, மசோதாக்கள் மறுபரிசீலனைக்கு எப்போது தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டதோ, அந்த நாளில் இருந்தே அவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன” என்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜே.பி.பார்த்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8 அன்று தீர்ப்பு அளித்தது.

மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்தது. இந்தத் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் அனுப்பினார்.

இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு நேற்றைய தினம் மிக முக்கியமான சில கருத்துகளை அளித்துள்ளது.

ஆளுநர் ரவியின் உச்சந்தலையில் கொட்டிய உச்சநீதிமன்றம் : இதற்கு மேல் யார் சொல்ல வேண்டும்? - முரசொலி!

•ஆளுநர் காரணத்தைத் தெரிவிக்காமல் நீண்ட காலம் மசோதாவை நிறுத்திவைப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.

•மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம், சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பலாம். இந்த மூன்றில் ஒன்றைத்தான் ஆளுநர் தேர்ந்தெடுக்க முடியுமே தவிர, ஒன்றிய அரசு கூறுவதுபோல் நான்- காவதாக எந்த வாய்ப்பும் இல்லை.

•அரசியல் சாசனப்பிரிவு 200, 281-ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவைக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும்.

•மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் காலவரம்பின்றி கிடப்பில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அதன் அமைச்சரவையுமே முதன்மையான இடத்தில் இருக்கிறது. மசோதாக்கள் விவகாரத்தில் இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை ஆளுநர்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆளுநர் செயல்ப- டாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும்.

•அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.

- இப்படி நெத்தியடியாகச் சொல்லி இருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்ன கருத்துகள் முக்கியமானது.

“ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப் படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவும், அதற்கான விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் திருத்தங்களைத் திரும்பப் பெறவும், இல்லையெனில், வாக்கெடுப்பைக் கோரவும் அதிகாரம் உள்ளது. இத்தகைய சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதன்மீது கருத்துகளைத் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, மாண்புமிகு ஆளுநர் அவர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

ஆளுநர் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகளை இப்பேரவை நிராகரிக்கிறது” என்று முதலமைச்சர் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். இதனை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றித் தந்தது.

முதலமைச்சரின் உரிமைக் குரலை மிகச் சரியானது என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முதலமைச்சர் சொன்னபோதெல்லாம் அது அரசியல் என்று ஒதுக்கி வந்த ஆளுநர், உச்சநீதிமன்றத்துக்கு என்ன சொல்லப் போகிறார்? 

இப்படி ஒரு பதவியில் வேறு யாராவது இருந்தால், அவர்கள் இந்த மாதிரியான தீர்ப்பைப் பார்த்தால் அடுத்த நொடியே பதவி விலகி இருப்பார்கள். ஆனால் ஆர் .என்.ரவியிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்புப் பணியை சில  கட்சிகள் எதிர்க்கின்றன. ஏனெனில் ஊடுருவல்காரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும் என்று அவை விரும்புகின்றன.

இன்று நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன், இந்த நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும், ஒருவர்பின் ஒருவராக நாடு கடத்துவோம். இது மோடி அரசின் உறுதி.

நாட்டின் எந்த மாநிலத்தின் முதல்வர் யார், பிரதமர் யார் என்பதை இந்தியக் குடிமக்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும். நமது ஜனநாயக அமைப்பை மாசுபடுத்தவும், நமது ஜனநாயக முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தவும் ஊடுருவல்காரர்களுக்கு உரிமை இல்லை.” என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார். 

இதைத்தான் SIR பணிகளை பீகாரில் அறிமுகப் படுத்திய நாளிலிருந்தே சொல்லி வருகிறோம். SIR என்பது வெறும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி மட்டுமல்ல… அது ஒரு நபரின் குடியுரிமையைக் கேள்வி கேட்கும் நடைமுறை என்று. 

தமிழ்நாட்டில் சில ’அறிவு’ ஜீவிகள், CAA/NRC எல்லாம் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது, அதெல்லாம் எல்லை மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று சொல்லி அதை எதிர்த்தவர்களை எல்லாம் ‘கிக்கி பிக்கி’ செய்துகொண்டிருந்தனர். 

இதோ, தமிழ்நாட்டிலும் NRC-ஐ SIR மூலம் நடைமுறைப் படுத்துகின்றனர். அமித் ஷாவே அதை வாக்குமூலமாக கொடுத்துவிட்டார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை