நமட்டு சிரிப்பு!

பெங்களூரில் அரசு அதிகாரிகள் போல் வேடமிட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல், ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய ரூ.7 கோடியை எடுத்துச் சென்ற வேனை பட்டப்பகலில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளி மாணவிகளை தகாத முறையில் தொட்டு அத்துமீறியதாக இயற்பியல் ஆசிரியர் மீது புகார்  புகாரை உதாசீனப்படுத்தியதால் தலைமை ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - தலைமறைவான இயற்பியல் ஆசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு.

குரூப்2, 2ஏ காலி பணியிடங்கள் எண்ணிக்கையை 1,270ஆக அதிகரித்து TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.ஜூலை 15ஆம் தேதி 645 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது கூடுதலாக 625 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC.
SIR பணிகள் தொடர்பாக வருவாய் துறை அலுவலர்கள் அறிவித்திருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், இனி அதீதமான பணி நெருக்கடி தொடராது என்று உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என விளக்கம்
சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.









நமட்டு சிரிப்பு!

கோவை வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வரவேற்றபோது அவருக்கு அருகிலேயே நின்று வரவேற்றார் ஜி.கே.வாசன்.  

தற்போது பாஜக சார்பில் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நபரும் இவர்தான்.  

பீகார் தேர்தல் வெற்றிக்கு பின்னர் தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்த நினைக்கிறது பாஜக. இதற்காக கூட்டணிக்கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் பாஜக டெல்லி தலைமை,  டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் அவர்களை கூட்டணிக்குள்ளாவது கொண்டு வந்துவிட வேண்டும் நினைத்து,  அது தொடர்பாக பழனிசாமியுடன் பேசி முடிவெடுக்க ஜி.கே.வாசனை அனுப்பி வைத்தது.

2026ல் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. விஜய்தான் முதலமைச்சர் என்று கரூர் சம்பவத்திற்கு பின்னரும் தவெக உறுதியாக நின்றதால், அதிமுக கூட்டணியில் விஜய் இணைவார் என்ற கனவு காற்றோடு போனதால், போட்ட பிள்ளையார் சுழி எல்லாம் வீணாய்ப் போனதால், பழனிசாமி படு அப்செட்டில் இருந்த நேரத்தில் சேலத்தில் அவரை சந்தித்தார் வாசன்.

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து வாசன்  சொன்னதும்,  டிடிவி தினகரனை கட்சியில் இணைப்பது என்பதும் அவருடன் இணைந்து பயணிப்பது என்பதும் நடக்காத காரியம். அதே நேரம் தினகரன், பன்னீர்செல்வம் இருவரையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர எந்தவித ஆட்சேபனையும் இல்லை’’ என்று கூறிவிட்டார்.

கேட்ட உடனேயே பழனிசாமி பச்சைக்கொடியை பறக்க விட்டதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத வாசன்,   அவர் வீட்டு வாசலில் நின்றே டெல்லிக்கு போன் போட்டு சொல்லி  விபரத்தை சொல்லி இருக்கிறார்.

விஜய் வருவார் என்கிற தெம்பில் எகத்தாளமாக திரிந்த பழைய பழனிசாமி இப்போது இல்லை.  அதனால்தான் கேட்ட உடனேயே தலையாட்டி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு டெல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்திருக்கிறது .


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை