தென்னிந்திய வரலாறு முற்றிலும் புறக்கணிப்பு

 என்சிஇஆர்டி புத்தகத்தில் தென்னிந்திய வரலாறு முற்றிலும் புறக்கணிப்பு 

மோடி பிரதமர் ஆன பின்பு  ஒன்றிய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஏதுவாக, பள்ளிக் கல்வியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை திணிப்பது, முகலாயர், திப்பு சுல்தான் உள்ளிட் டோரின் முக்கிய வரலாற்றை நீக்குவது போன்ற  உள்ளடி வேலையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது.

அதாவது கல்வியை காவிமயமாக்க இந்திய நாட்டின் கல்விமுறையில் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான மோடி அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

 இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் தேசியக் கல்வி ஆராய்ச்சி  மற்றும் பயிற்சி வாரியம் (என்சிஇஆர்டி) புதிதாக வெளியிடப்பட்ட 8ஆம் வகுப்பு சமூக அறி வியல் பாடப்புத்தகத்தில் (பகுதி 1) தென்னிந்திய வரலாற்றை புறக்கணித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 முக்கிய நீக்கங்கள் மற்றும் புறக்கணிப்புகள் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஆங்கி லேய எதேச்சதிகாரத்தை எதிர்த்த மிக முக்கிய மான ஆட்சியாளர்களில் ஒருவரான திப்பு சுல்தான், அவரது தந்தை ஹைதர் அலி மற்றும் 18ஆம் நூற்றாண்டில் நடந்த நான்கு ஆங்கிலோ - மைசூர் போர்கள் பற்றிய குறிப்புகள் முற்றி லுமாக நீக்கப்பட்டுள்ளன. முந்தைய பாடத் திட்டத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்த முக்கிய சக்தியாக திப்பு சுல்தான் ஆட்சியை குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நீக்கப்பட்டுள்ளது. 

அதே போல இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் செல்வாக்கு மிக்க பேரரசுகளில் ஒன்றான விஜயநகரப் பேரரசு பற்றிய தனிப்பட்ட விரி வான பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரரசு வடக்குப் பகுதிகளை எதிர்த்த விப ரங்கள் மட்டுமே பாடப்புத்தகத்தில் குறிப்பி டப்பட்டுள்ளது.

 ஆனால் தென்னிந்திய வரலாறு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வட மற்றும் மத்திய இந்தியாவை மையமா கக் கொண்ட சன்னியாசி கலகம், கோல் கிளர்ச்சி,  சந்தால் கிளர்ச்சி போன்ற காலனித்துவ எதிர்ப்புப்  போராட்டங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள் ளன. 

ஆனால்  திருவிதாங்கூரில் நடந்த சாணார் புரட்சி (Channar Revolt) போன்ற முக்கிய மான தென்னிந்திய எதிர்ப்பு இயக்கங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. 

முகலாயர்க ளிடமிருந்து நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு நகரும் வகையில், தக்காண சுல்தான்கள் மற்றும் மைசூர் போன்ற வாரிசுப் பிராந்திய அரசுகள் (Regional Successor States) பற்றிய விளக்கங்களும் முழுமையாக சுருக்கப் பட்டுள்ளன.

 கல்வியாளர்கள் கண்டனம் வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இத்தகைய நீக்கங்கள் வரலாற்றுக் கல்வி, பிராந்திய அடை யாளம் மற்றும் தேசிய நினைவு ஆகியவற்றில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்ப்பும், கிளர்ச்சியும் பெரும்பாலும் வட இந்தியா வில் மட்டுமே நடந்தது அல்லது தென்னிந்தியச் சமூகங்கள் செயலற்றவையாக இருந்தன என்ற தவறான பிம்பத்தை மாணவர்களிடம் இது உருவாக்கக்கூடும். 

அதே போல இந்த வர லாற்று இடைவெளிகள் பாடநூலின் கல்வி சார்ந்த பொருத்தப்பாட்டைக் குறைக்கிறது. நாட்டின் கடந்த கால காலனித்துவத்தின் முழு மையான பார்வையை இது வழங்கவில்லை என கல்வியாளர்கள், 

வரலாற்று ஆசிரியர்கள், அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கையுடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மோடி அரசு மழுப்பல் புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புக் கான பரிந்துரைகளின் (NCFSE 2023) அடிப்படை யில்  8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம் திருத்தப்பட்டுள்ளது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை