சட்டம் ஒழுங்கு?

SIR-க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 11ம் தேதி விசாரணை. கணக்கெடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க கட்சியினருக்கு முதலமைச்சர் உத்தரவு.

திமுக-வின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இளைஞர் அணி சார்பில் அறிவுத் திருவிழா. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்றுதொடங்கிவைக்கிறார்.
பீகார் மின் கொள்முதல் முறைகேடு அதானியால் ரூ.60 ஆயிரம் கோடி ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
கோவையில் நேற்று ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக செய்திகளில் பார்த்தேன் என்று "டிவி புகழ்" பழனிசாமி சமூக வலைதளங்களில் நீட்டி முழக்கி இருக்கிறார்.உண்மை நிலை என்னவென்றால் கோவையில் யாரும் கடத்தப்படவில்லை. 

ஒரு கணவன் - மனைவிக்குள் சிறிது சச்சரவு ஏற்பட்டு காரில் சென்றுள்ளார்கள். அதனை பார்த்த ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்ல, காவல்துறை தனிப்படை அமைத்து துரிதமாக செயல்பட்டு அந்த கணவன் - மனைவியை கண்டறிந்து விசாரித்துள்ளனர்.திமுக அரசு மீது திட்டமிட்டு பொய்களை வதந்திகளை ஆதாரமற்ற தகவல்களை பரப்பி அரசியல் பிழைப்பை நடத்த நினைக்கிறார் பழனிசாமி. அரைகுரையாக செய்திகளை பார்த்துவிட்டு ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட எதிர்க்கட்சி தலைவரை இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை.

                                              -  ஆர்.எஸ்.பாரதி

அதிமுக-வை ஒருங்கிணைக்க கூறியதே பாஜகதான்; நிர்வாகிகளை நீக்கிக்கொண்டே இருந்தால் முழு நிலவு தேய்ந்து அமாவாசையாகி விடும் -செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி.

அப்போது செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓபிஎஸ் கரூர் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை விஜய் செய்கிறார்: மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ பேச்சு.
நடிகை கவுரி கிஷன் உருவ கேலி செய்யப்பட்ட விவகாரத்தில் வலுக்கும் கண்டனம். திரைப் பிரமுகர்கள், தமிழ்நாடு, கேரள நடிகர் சங்கங்கள் நடிகைக்கு ஆதரவு.
திரைப்பட புகழை வைத்துக்கொண்டு அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக மாய பிம்பத்தை உருவாக்குகிறார் விஜய்: அதிமுக தாக்கு.
திமுக-தவெக இடையே தான் போட்டி எனக் கூறிய விஜய்க்கு வைகோ, கே.பி.முனுசாமி, நயினார் நாகேந்திரன் கண்டனம். மணலில் கோட்டை கட்டிக் கொண்டுள்ளதாகவும் விமர்சனம்.
மனைவியை கள்ளக்காதலனுக்கு மணமுடித்து கணவன் தற்கொலை: தெலங்கானாவில் பரபரப்பு.
டெல்லியிலும் ஓட்டு, பீகாரிலும் ஓட்டு 2 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் எப்படி வாக்களிக்க முடியும்? பா.ஜ தலைவர்களிடம் ராகுல்காந்தி கேள்வி?







தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை 

குலைக்க மோடி

 அரசு திட்டம்?

தமிழ்நாட்டில் காவல்துறை தலைவரான, சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தை முன்வைத்து தி.மு.க அரசு மீது  விமர்சனத்தை முன்வைத்துள்ளன.

தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபியை நியமனம் செய்யாமல் மக்களின் பாதுகாப்புடன் முதலமைச்சர் விளையாடிக் கொண்டிருப்பதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர்  பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால், மத்திய அரசின் தலையீடு காரணமாகவே டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். டிஜிபியை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? 

2006 ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் எதிர் இந்திய அரசு வழக்கில் ஏழு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அந்த உத்தரவில், 'ஒரு மாநிலத்தில் டிஜிபி பொறுப்பில் உள்ள நபருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு பணிக்காலம் இருக்க வேண்டும்' எனக் கூறியது.


"இதனை சில மாநிலங்கள் கடைபிடிக்காமல் இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்தன" என, பிபிசி தமிழிடம் வழக்கு தொடர்ந்த ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.

சில மாநிலங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவைக் கடைபிடிக்காமல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு குறித்த காலத்துக்குள் டிஜிபி பதவிக்கான பெயர்ப் பட்டியலை அனுப்பாமல் இருந்துள்ளன.

இதுகுறித்து 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 'குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணிகளை மாநில அரசு செய்தாக வேண்டும்' என உத்தரவிட்டது.


வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "டிஜிபி பதவிக்கு தனது பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அதிகாரி ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதனால் டிஜிபியை நியமனம் செய்ய முடியாமல் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டார்" எனக் கூறினார்.


அப்போது தலைமை நீதிபதி அமர்வு, தொடர்புடைய காவல்துறை அதிகாரியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறியது.


தொடர்ந்து, டிஜிபி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுக்கும் பரிந்துரையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு யுபிஎஸ்சி நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடர்பாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்தநிலையில், டிஜிபி நியமனத்தில் காலதாமதம் ஏற்படுவதால் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஹென்றி திபேன் தொடர்ந்துள்ளார்.


அவர் தனது மனுவில், 'டிஜிபி நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதுதொடர்பாக மூன்று பேரின் பெயர்களை யுபிஎஸ்சி பரிந்துரை செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'


"மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அனுப்பப்பட்ட பெயர்களில் ஒருவரை மாநில அரசு நியமிக்காமல் உள்ளது என்றால் அதில் ஏதோ தயக்கம் இருப்பதாகவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார், வழக்கு தொடர்ந்த ஹென்றி திபேன்.


"பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் யார் பெயர் உள்ளது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், டிஜிபி பணியிடத்துக்கு மூத்த அதிகாரிகளில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அதிலேயே இவ்வளவு குளறுபடிகள் என்றால் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளின் நிலை குறித்துக் கூற வேண்டியதில்லை.

தமிழ்நாடு அரசுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் வாரத்தில் நடக்க உள்ள நிலையில், அரசியல்ரீதியாகவும் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

தேர்தல் நோக்கத்தில் டிஜிபி நியமனத்தைக் காலதாமதம் செய்வதாக அடிப்படையில்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

'டிஜிபி நியமனப் பட்டியல் தொடர்பாக யுபிஎஸ்சி நடத்திய கூட்டத்தில் விதிகளுக்குப் புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டன.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. மாநில உரிமைகளை காக்கும் ஓர் அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது' எனவும் அறிக்கையில் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழ்நாடு அரசின் கருத்துகளை ஏற்காமல் தாங்கள் விரும்பியவர்களையே முன்மொழிந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பட்டியலை அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து அந்த அறிக்கையில், 'இதனை தமிழ்நாடு அரசு ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையில் அதற்கான காரணங்களை விளக்கி தலைமைச் செயலாளர் மூலமாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.

இதற்கான பதில் பெறப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.


'சட்டம் ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்துகளை புறக்கணித்து தனக்கு வேண்டிய நபர்களை தமிழ்நாட்டில் டிஜிபியாக அமர்த்துவதற்கு ஒன்றிய அரசு முயல்வது தான் தமிழ்நாடு அரசு சந்திக்கும் பிரச்னையாக உள்ளது.


தமிழ்நாடு அரசு அனுப்ப எட்டுபெயர்களைப் புறந்தள்ளிவிட்டு புதிதாக தனக்கு வேண்டிய மூன்று பெயர்களை அனுப்பி ஒன்றைத் தெரிவு செய்யச் சொல்கிறது ஒன்றிய அரசு.


மூவருமே தமிழ்நாடு பற்றிய அனுபவமே இல்லாதவர்கள் இளநிலையாளர்கள் வடமாநிலப் பிரிவிலேயே பணயாற்றியவர்கள். தமிழ்நாடு அரசு அனுப்பிய எட்டுபெயர்களில் மூன்றை ஏன் தெரிவு செய்யவில்லை?


அதிலும் ஐந்து பேர்கள் வடமாநலத்தவர்கள்தான்.ஆனால் தமழ்நாட்டில் பணியாற்றி அனுபவ்வம் வாய்ந்தவர்கள்.ஏன் உள்துறை உள்நோக்கத்துஉடன் பிடிவாதமாக புதியவர்கள் முதுநிலையற்ற இளையவர்களைத் திணிக்கப் பார்க்கிறது?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை