டன்கள் கணக்கில் தங்கம்!

 திமுகவை வீழ்த்த தேர்தல் ஆணையம் மூலம் குறுக்குவழியில் முயற்சி நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு.காவியால் திமுகவை ஒருபோதும் வீழ்த்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். 

கொடுநாடு கொலை, கொள்ளை வழக்கு என்றுகூறி தன்னை அச்சுறுத்த முடியாது என எடப்பாடி பழனிசாமி பேச்சு. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என உறுதி.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு. 12-ம் தேதி 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு.
எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவத்தை எளிதில் பெற முடியவில்லை என தமிழ்நாட்டின் பல இடங்களில் வாக்காளர்கள் புகார். படிவம் கிடைத்தாலும் எப்படி பூர்த்தி செய்வது என தெரியாததால் நீடிக்கும் குழப்பம்.
சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் எதிரொலியாக ரயில் சேவையில் மாற்றம். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு.
திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆலோசனை 
புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடுவதா?. அரசியலமைப்புக்கு விரோதமானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்.
பீகாரில் 2-ம் கட்ட  பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 122 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம்.
பீகாரில் பாஜக கூட்டணி, வதந்திகளை பரப்பி மக்களை மீண்டும் ஆள முயற்சிப்பதாக பிரியங்கா காந்தி கண்டனம். 
டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர். 15 நாட்களாக கூட்டத்தொடரை குறைத்தது ஏன்? என காங்கிரஸ், திரிணாமுல் தலைவர்கள் கேள்வி.
டெல்லி மாநகரில் காற்று மாசு அபாய அளவை எட்டியது.சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் தவிக்கும் மக்கள்.
உலகக் கோப்பை செஸ் போட்டி 4-வது சுற்றுக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெங்கடேஷ் உள்பட மேலும் 3 இந்திய வீரர்களும் முன்னேற்றம்.
கரூர் சம்பவத்துக்கு நடிகர் விஜய் மட்டுமே காரணம்.முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா கடும் குற்றச்சாட்டு.


700,000,000,000,000,000,000 டாலர் மதிப்புடன் விண்வெளியில் மிதக்கும்  தங்கம்!

ஒரு சிறுகோள்... அது அத்தனையும் உலோகம். நமது செல்வம், அறிவியல், ஏன் விண்வெளி ஆய்வு பற்றிய நமது மொத்த பார்வையையுமே மாற்றி எழுதக் கூடிய சக்தி கொண்டது.


இப்படி ஒன்று நிஜமாகவே செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் மிதந்து கொண்டிருக்கிறது.


அதன் பெயர் '16 சைகே' (16 Psyche). இது ஏதோ அறிவியல் புனைகதை அல்ல. நாசா (NASA) இந்த உலோகப் புதையலை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்பியும் விட்டது. இந்தப் பயணம் பிரபஞ்சத்தின் ரகசியங்களை மட்டுமல்ல, பூமியில் உள்ள மொத்த பணக்காரர்களையும் விட பல மடங்கு மதிப்புள்ள ஒரு புதையலையும் நமக்குக் காட்டப் போகிறது.


'16 சைகே' ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?

காரணம், அதன் அபாரமான கலவை. இது முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் மற்றும் தங்கம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் ஆனது.

இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் $700 குயின்டில்லியன்! (அதாவது 700-க்கு அடுத்து 18 பூஜ்ஜியங்கள்).

இந்த மதிப்பு, பூமியில் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விட பல்லாயிரம் மடங்கு அதிகம். ஒரு கணக்குக்காகச் சொன்னால், இந்த சிறுகோளில் உள்ள தங்கத்தை மட்டும் பூமிக்குக் கொண்டு வந்தால், இங்குள்ள ஒவ்வொரு மனிதரையும் கோடீஸ்வரர்களாக்கி விட முடியும்.


ஆனால், நிஜமாகவே அத்தனை உலோகத்தையும் பூமிக்குக் கொண்டு வந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்: உலகச் சந்தையில் தங்கம் மற்றும் பிளாட்டினத்தின் விலை அதல பாதாளத்திற்குச் சரிந்து, உலகப் பொருளாதாரமே கவிழ்ந்துவிடும் அபாயம் உள்ளது.

புதையல் பெரிதாக இருந்தாலும், அதை பூமிக்குக் கொண்டு வருவதில் உள்ள சவால்களும் பிரம்மாண்டமானவை.


நாசாவின் 'சைகே' விண்கலம் அக்.2023-ல் தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. அது 2029-ம் ஆண்டு '16 சைகி'-ஐ சென்றடையும். நாசா நோக்கம் சுரங்கம் தோண்டுவது அல்ல. மாறாக, இந்த மர்மமான சிறுகோளைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதுதான்.



'16 சைகே' என்பது உண்மையில் என்ன? விஞ்ஞானிகள் நம்பும் தியரி... இது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகத் தவறிய 'முன்-கிரகத்தின்' (Protoplanet) உறைந்து போன 'மையம்' (Core) என்பதாகும். சூரியக் குடும்பத்தின் ஆரம்பகால மோதல்களில், அதன் வெளிப்புறப் பாறைகள் சிதறிப் போக, இந்த உலோக மையம் மட்டும் தனியாக மிதக்கத் தொடங்கியிருக்கலாம்.


அப்படி என்றால், இது நமக்குக் கிடைத்த மாபெரும் ஜாக்பாட்! ஏனென்றால், நமது பூமியின் மையத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் ஒருபோதும் தோண்டிப் பார்க்க முடியாது. ஆனால், '16 சைகி'-ஐ ஆய்வு செய்வதன் மூலம், ஒரு கிரகத்தின் மையம் எப்படி உருவாகிறது என்பதை நம்மால் நேரடியாகப் படிக்க முடியும்.


'16 சைகே' ஆரம்பம் மட்டுமே. பூமிக்கு அருகிலுள்ள '2011 UW158' என்ற மற்றொரு சிறுகோளில் மட்டும் $5.4 டிரில்லியன் மதிப்புள்ள பிளாட்டினம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


இந்த உலோகங்களை நாம் வெட்டி எடுக்க முடிந்தால், அது தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும். பூமியில் சுரங்கம் தோண்டுவதைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், இதில் பல சவால்கள் உள்ளன:

பொருளாதார சவால், முன்பே சொன்னது போல், விலை சரிவு ஏற்படும் அபாயம். எடையற்ற, கொடூரமான விண்வெளிச் சூழலில் ரோபோக்களை வைத்து சுரங்கம் தோண்டுவது, சுத்திகரிப்பது என்பது மிக மிகச் செலவு பிடிக்கும் ஒரு காரியம்.


சிறுகோளை அடைந்துவிட்டோம்.

அதில் உள்ள தங்கம் யாருக்குச் சொந்தம்? அதைக் கண்டுபிடித்த நாசாவுக்கா? அல்லது அது மனுக்குலத்தின் பொதுச் சொத்தா? இதற்கான சர்வதேச விண்வெளிச் சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவே இல்லை.


செல்வத்தைத் தாண்டி, '16 சைகே' போன்ற சிறுகோள்கள் நமது சூரிய மண்டலத்தின் பயங்கரமான இளமைக் காலத்தின் 'டைம் கேப்சூல்கள்'. பூமி எப்படி உருவானது என்ற ரகசியங்கள் அவற்றில் உறைந்துள்ளன.


அதே சமயம், இந்த சிறுகோள்கள் நமக்கு ஆபத்தானவையும்கூட. 2022-ல் நாசாவின் டார்ட் திட்டம், சிறுகோளின் மீது விண்கலத்தை மோதச் செய்து, அதன் பாதையை வெற்றிகரமாக மாற்றிக் காட்டியது.


இது, எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் ஆபத்துகளைத் தடுக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

'சைகி' போன்ற பயணங்கள், இந்த ஆபத்தான பாறைகளைப் பற்றி நாம் நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன.


நவம்பர் 09, 1921.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற தினம் இன்று.

தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது.


மாநிலம் முழுவதும் 76 பிஎல்ஓ-க்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.


  இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ்,  எஸ்ஐஆர் தொடர்பாக பொதுமக்களுக்கு இயல்பாக எழும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் . 


பிஎல்ஓ-க்களும் அரசு ஊழியர்கள் தான். அவர்களின் அலுவலக பணி முடிந்த பிறகே வாக்காளர்களை சந்திக்கச் செல்வார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றுவார்கள். அதனால் அனைவரிடமும் படிவம் கொடுப்பதில் சிக்கல் இருக்காது.


பிஎல்ஓ-க்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ஐஆர் செயலியில், சம்பந்தப்பட்ட அந்த வாக்காளர் குடிபெயர்ந்ததாக பதிவு செய்துவிடுவார்கள். அப்படி பதிவு செய்யப்பட்டவர்கள் டிசம்பர் 9-ம் தேதி முதல் நடைபெறும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அதனால் முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.


ஒரு வாக்காளருக்கு 2 படிவம் மட்டுமே தரப்படுவதால் படிவத்தை பூர்த்தி செய்யும்போது தவறு நேர்ந்தால் என்ன செய்வது... இரண்டுக்கு மேல் படிவம் வழங்க வாய்ப்புள்ளதா?


தவறாக பூர்த்தி செய்தால், அடித்துவிட்டு திருத்தி எழுதி, அந்த வாக்காளர் தான் கையெழுத்திடுவார். அதை பிஎல்ஓ ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார். இதில் சிரமம் எதுவும் இருக்காது. இந்த படிவங்கள், அனைவருக்கும் பொதுவான படிவங்கள் இல்லை. ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்தனியாக, வாக்காளர் விவரங்கள், புகைப்படங்கள் அடங்கிய படிவமாக வழங்கப்படுகிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் கூடுதல் படிவங்களை அச்சிடுவது சிரமம்.



சில இடங்களில் அரசு ஊழியர்கள் அல்லாதோரும் பிஎல்ஓ-க்களாக நியமிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறதே?


அரசு ஊழியர்களை மட்டும் தான் பிஎல்ஓ-க்களாக நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



படிவம் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?


குறிப்பிட்ட முகவரியில் வசிப்பவர்கள், அதே முகவரியில் வாக்காளர் அட்டை பெற்றிருந்தால் கட்டாயம் படிவம் வீடு தேடி வந்து சேரும். பிஎல்ஓ படிவத்தை கொடுக்காமல் இருந்தால், தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் பிரத்யேக செயலியின் டேஷ் போர்டில் பார்க்க முடியும்.


எதற்காக படிவம் இன்னும் சென்று சேரவில்லை என பிஎல்ஓ-க்களிடம் கேள்வி எழுப்ப முடியும். பிஎல்ஓ-க்கள் படிவத்தை வழங்காமல் இருந்தால், அதற்கான காரணத்தை இறப்பு, குடிபெயர்தல் அல்லது ஆப்சென்ட் என எஸ்ஐஆர் செயலியில் குறிப்பிட வேண்டியது கட்டாயம்.



படிவத்தில் ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயமா?

கட்டாயம் இல்லை. அது வாக்காளர்களின் விருப்பம்.


தாய், தந்தை இருவரும் இறந்துவிட்டால், அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் வைத்திருக்காத நிலையில் என்ன செய்வது... அந்த எண்களை வழங்க வேண்டியது கட்டாயமா?


சம்பந்தப்பட்ட வாக்காளருக்கே, 2002 காலகட்டத்தில் வாக்குரிமை இருந்திருந்தால், அதன் விவரங்களை கொடுத்தால் போதும். அவர்களுக்கு வாக்குரிமை அப்போது இல்லாமல் இருந்தால் மட்டுமே பெற்றோரின் அப்போதைய விவரங்களை இப்போது கொடுக்க வேண்டும்.



2002, 2005-ம் ஆண்டுகளில் வாக்குரிமை பெற்று, அதன் விவரங்கள் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

2002 காலகட்ட வாக்காளர் பட்டியல் தற்போது இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்து படிவத்தை பூர்த்தி செய்யலாம். அதற்கு பிஎல்ஓ-க்கள் உதவுவார்கள்.


2024-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. தற்போது பெயரைச் சேர்க்க முடியுமா?

வரும் டிசம்பர் 9-ம் தேதி முதல் நடைபெறும் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, படிவம் 6-ஐ கொடுத்து பெயரைச் சேர்க்கலாம்.


படிவங்களை பூர்த்தி செய்ய பிஎல்ஓ உதவாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நிச்சயமாக உதவுவார்கள். அப்படி உதவாவிட்டால் 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்பு கொள்வதற்கான எண்கள், முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. அங்கும் புகார் அளிக்கலாம்.


இந்த படிவங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளதா?


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், அது ஆதார் அடிப்படையில் ஓடிபி பெற்று செயல்படும் என்பதால், ஆதார் அட்டையிலும், வாக்காளர் அட்டையிலும் பெயர் ஒரே மாதிரி இடம் பெற்றிருப்பது அவசியம்.

குறிப்பிட்ட முகவரியில் வசிக்காமல் ஆன்லைனில் விண்ணப்பித்தால், தொடர்புடைய பிஎல்ஓ அந்த படிவத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்.


தந்தை, மகன் வெளிநாட்டில் வேலை செய்யும்போது அவர்கள் எப்படி படிவத்தை பூர்த்தி செய்ய முடியும்... அப்போது அவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

அதே முகவரியில் குடும்பத்தினர் யாராவது வசித்து வந்தால், அந்த வாக்காளர்களின் சார்பில் படிவத்தை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு வழங்கலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை