பீகார் முதல் கட்டம்?
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
இதன் 121 தொகுதிகளில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிடம் (என்டிஏ) 59, மெகா கூட்டணியிடம் 61 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 75 லட்சத்து 13 ஆயிரத்து 302. இவர்களுக்காக மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020 தேர்தலில், 121-ல் மெகா கூட்டணி 61, என்டிஏ 59 மற்றும் லோக் ஜன சக்தி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, இந்த முதல்கட்ட தேர்தல் இரண்டு கூட்டணிகளுக்கும் மிக முக்கியமானதாக உள்ளது.
சிராக் பாஸ்வானின் எல்ஜேபி தனித்து போட்டியிட்டிருந்தது. அக்கட்சியின் ஒரு எம்எல்ஏவும் பிறகு முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) இணைந்தார்.
இந்த 121 தொகுதிகளில் மெகா கூட்டணியின் தலைமைக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மட்டும் 42 தொகுதிகளில் வென்றிருந்தது.
இந்த முறையும் 121 தொகுதிகளில் இரண்டு கூட்டணி கட்சிகளும் 16 நாட்களாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பிரச்சாரம் செய்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பாஜக ஆளும் உத்தர பிரதேசம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் என்டிஏவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர்.
இவர்களுக்கு சவால் விடும் வகையில் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவும் தொடர் பிரச்சாரத்தில் இருந்தார்.
முதல்கட்ட வாக்குப் பதிவில் வீசும் அலை, இரண்டாம் கட்டத்துக்கும் வீசி ஆட்சி அமைக்கும் கூட்டணியை முடிவு செய்கிறது. ஆர்ஜேடியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மெகா கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளன.
பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகளின் உள்ளன. 122 தொகுதிகளி வரும் 11-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வரும் 14-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
இந்திய சமையலறைகளில் மஞ்சள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாட்டியின் சமையல் குறிப்புகளில் இது எப்போதும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. உடல் காயங்கள், சளி ஏற்ப்பட்டால், பாலுடன் கலந்து குடிப்பதால் மஞ்சள் ஒரு வீட்டு மருந்தாகக் கருதப்படுகிறது.
அதன் மிகவும் தனித்துவமான அம்சம் குர்குமின் கலவை ஆகும், இது அதற்கு ஒரு தங்க நிறத்தை அளிக்கிறது மற்றும் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் வழங்குகிறது.
தினமும் ஒரு சிறிய அளவு மஞ்சளை உட்கொள்வது உடல், மூளை, மூட்டுகள் மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.








