7000 வாக்காளர் நீக்கம்.?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல், இன்று பிற்பகல் மேலும் வலுவிழக்கும் என கணிப்பு. கடலோர மாவட்டங்களில் மழை ஆபத்து நீங்கியதால், மக்கள் நிம்மதி
ஆளுநர் மாளிகைக்கு பெயர் மாற்றுவதை விட, சிந்தனை மாற்றமே தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து. சட்டமன்றத்தை மதிக்காதவர்கள் மக்கள் மாளிகை என பெயர் வைப்பது கண்துடைப்பா? என்றும் கேள்வி
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது தூய்மையான ஆட்சி தரப்படவில்லையா? என பழனிசாமி கேள்வி. தவெக தூய்மையான ஆட்சி தரும் எனப் பேசிய செங்கோட்டையனுக்குப் பதிலடி
சிவகங்கை மாவட்டத்தில் 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 11 பேர் பலி. மருத்துவமனைகளில் 28 பேர் சிகிச்சை பெறும் நிலையில், அமைச்சர்கள் நேரில் ஆறுதல்.
பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்ததை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம். தனது கட்சி தனக்கே வரும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை.
இலங்கையில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக மீட்பு. உணவு கிடைக்காமல் தவித்த நிலையில், தாயகம் திரும்ப உதவிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
சிம் கார்டை நீக்கிவிட்டு இனி வாட்ஸ் ஆப், டெலிகிராம் செயலிகளை பயன்படுத்த முடியாது. 90 நாட்களுக்கு ஒரு முறை சிம் கார்டு செயல்பாட்டை உறுதி செய்ய, விதிகளை வகுத்தது ஒன்றிய அரசு. அதில் முதன்மையாக, அத்திக்கடவு அவினாசி, முதலீடு, வேலைவாய்ப்பு, குடும்ப அரசியல் என ஏடாகூடமாக வெந்தும், வேகாததுமாக நிறைய பேசியிருக்கிறார்.
முதலில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்றைய முதலமைச்சர் பழனிசாமி, அத்திக்கடவு அவினாசி தொடங்கி வைத்தாரே தவிர முழுமையான நிதியை ஒதுக்கவில்லை. விவசாயிகளிடம் நிலங்களையும் பெறவில்லை.
நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினையை தீர்த்து, முழுமையான நிதி ஒதுக்கி, 60 விழுக்காடு பணிகள் தி.மு.க. ஆட்சியில்தான் செய்யப்பட்டன. அதனால்தான் இன்று ஆயிரம் நீர் நிலைகள் நிரம்பி, 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது.
இரண்டாவது, இந்த நான்காண்டுகளில் புதிதாக வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 29.64 இலட்சமாக உயர்ந்துள்ளதென உங்களின் கூட்டணியில் உள்ள ஒன்றிய பாஜக அரசின் PF புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதைவிட தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு வேறு DATA தேவையா பழனிசாமிக்கு?
இந்தியாவிலேயே 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ள ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்!
மின்னணு பொருட்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதி, உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடுதான்; இதெல்லாம் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சியில்தான்.
அப்போதும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தோல்வியை மட்டுமே பரிசாகத் தருவார்கள்.-தி.மு.க.அறிக்கை.
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் எஸ்.ஐ.ஆர் (SIR) எனப்படும் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. இதில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது.
சின்னாளப்பட்டியில் மட்டும் மொத்தம் 25,000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 வாக்குச்சாவடிகளில் உள்ள 7,227 வாக்காளர்கள் 'இடம்பெயர்ந்துவிட்டதாக' (Shifted) குறிக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையின் பின்னணியில் ஆட்சியர் சரவணன் மற்றும் வட்டாட்சியர் முத்துமுருகன் ஆகியோர் உள்ளனர்.
வட்டாட்சியர் முத்துமுருகன் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று, அங்கிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO), எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்பிக் கொண்டு வருபவர்களை 'இடம் மாறுதல்' என்று குறிப்பிடுங்கள் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.
பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இவ்வாறு அழுத்தம் தரப்பட்டுள்ளது.
சின்னாளப்பட்டி மக்கள் பெரும்பாலும் வியாபாரிகள். அவர்கள் பகல் நேரங்களில் பணிநிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு இரவு நேரங்களிலே வீடு திரும்புவார்கள். இதனை அதிகாரிகள் கருத்தில் கொள்ளவில்லை.
சரிபார்ப்புப் பணியை கடைசி நாள் வரை பொறுமையாகச் செய்திருக்க வேண்டும். ஆனால், அவசர அவசரமாகப் பணிகள் நிறுத்தப்பட்டதால், படிவம் நிரப்பிக் கொண்டு வந்த பலராலும் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்













