நீக்கப்பட்டோர் 98லட்சம்!

 தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். 

அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதற்காக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது. 

சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?நீக்கப்பட்டதா? என்பதை எப்படி சரிபார்ப்பது என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். 

1. முதலில் voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

2. பிறகு உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம்.

3. இதன் பின்னர் 'தேடல்' பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களைக் காணலாம்.


4. இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ளலாம் .


வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லையா? நீங்கள் செய்ய வேண்டியது என்ன? 

* இருப்பினும், இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.

* இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் ஐ ஆர்-க்கு பின் தமிழ்நாட்டில் 5.43 கோடி வாக்காளர்கள்!

தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர்-க்கு முன் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ் ஐ ஆர்-க்கு பின் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 


சென்னை மாநகரில் நீக்கப்பட்டவர்கள் தொகுதிவாரியாக:-

1.ஆர்.கே.நகர் தொகுதி - 32,501
2.பெரம்பூர் தொகுதி - 97,345
3.கொளத்தூர் தொகுதி - 1,03,812
4.வில்லிவாக்கம் தொகுதி - 97,960
5.திரு.வி.க. நகர் தொகுதி - 59,043
6.எழும்பூர் தொகுதி - 74,858
7.ராயபுரம் தொகுதி - 51,711
8.துறைமுகம் தொகுதி - 69,824
9.சேப்பாக்கம் தொகுதி - 89,241
10.ஆயிரம் விளக்கு தொகுதி - 96,981
11.அண்ணாநகர் தொகுதி - 1,18,287
12.விருகம்பாக்கம் தொகுதி - 1,10,824
13.சைதாப்பேட்டை தொகுதி - 87,228
14.தியாகராயநகர் தொகுதி - 95,999
15.மயிலாப்பூர் தொகுதி - 87,668
16.வேளச்சேரி தொகுதி - 1,27,521

சென்னையில், வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டவர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 40,04,694
பின்பு உள்ள வாக்காளர்கள்: 25,79,676
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 14,25,018
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 35.58%


எஸ் ஐ ஆர்-க்கு பின் முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1,03,812 பேரும், துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். 


திருவள்ளூர் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 35,82,226
பின்பு உள்ள வாக்காளர்கள்: 29,62,449
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 6,19,777
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 17.30%


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 16,80,626
பின்பு உள்ள வாக்காளர்கள்: 15,06,077
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 1,74,549
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 10.38%

தேனி மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:

முன்பு இருந்த வாக்காளர்கள்: 11,30,303
பின்பு உள்ள வாக்காளர்கள்: 10,04,564
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 1,25,739
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 11,12%


தஞ்சாவூர் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 20,98,561
பின்பு உள்ள வாக்காளர்கள்: 18,92,058
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 2,06,503
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 9,84%


விழுப்புரம் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 17,27,490
பின்பு உள்ள வாக்காளர்கள்: 15,44,625
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 1,82,865
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 10.58%


சிவகங்கை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 12,21,933
பின்பு உள்ள வாக்காளர்கள்: 10,79,105
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 1,50,828
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 12,26%


மயிலாடுதுறை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 7,83,500
பின்பு உள்ள வாக்காளர்கள்: 7,08,122
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 75,378
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 9.62%


ஈரோடு மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 19,97,189
பின்பு உள்ள வாக்காளர்கள்: 16,71,760
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 3,25,429
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 16.30%


 எடப்பாடி தொகுதியில் எஸ் ஐ ஆர்-க்கு பின் 26,375 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 


கரூர் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 8,98,362
பின்பு உள்ள வாக்காளர்கள்: 8,18,672
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 79,690
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 8.87%


திருவண்ணாமலை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 21,21,902
பின்பு உள்ள வாக்காளர்கள்: 18,69,740
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 2,52,162
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 11,83%


ராமநாதபுரம் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 12,08,690
பின்பு உள்ள வாக்காளர்கள்: 10,91,326
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 1,17,364
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 9.71%


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 11,60,607
பின்பு உள்ள வாக்காளர்கள்: 10,76,278
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 84.329
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 7.30%


தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில் 2,18,444 பெயர்கள் நீக்கம். சோழிங்கநல்லூரில் எஸ் ஐ ஆர்-க்கு முன் 7,02,450 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ் ஐ ஆர்-க்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலில் 4,84,005 பேர் உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:

முன்பு இருந்த வாக்காளர்கள்: 13,94,112
பின்பு உள்ள வாக்காளர்கள்: 12,54,525
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 1,39,587
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 10.17%


செங்கல்பட்டு வாக்காளர் எண்னிக்கை குறைந்துள்ளது. முன்பு : 27,87,362 பின்பு: 20,85,491 நீக்கப்பட்ட வாக்காளர்கள்: 7,01,871 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 5,67,730
பின்பு உள்ள வாக்காளர்கள்: 5,10,392
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (வித்தியாசம்): 57,338
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 10.00%


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 14,01,198
பின்பு உள்ள வாக்காளர்கள்: 11,26,924
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 2,74,274
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 19.60%


மதுரை மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம்:
முன்பு இருந்த வாக்காளர்கள்: 27,40,631
பின்பு உள்ள வாக்காளர்கள்: 23,60,157
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 3,80,474
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 13.90%


சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து 2,15,025 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வரைவுப் பட்டியலின் மொத்த எண்ணிக்கை: 10,88,005.
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 19.76%.


சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து 1,45,157 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வரைவுப் பட்டியலின் மொத்த எண்ணிக்கை: 9,12,543.
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 13.72%.


சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து 2,06,503 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வரைவுப் பட்டியலின் மொத்த எண்ணிக்கை: 20,98,561.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (S.I.R) முன் வாக்காளர்களின் எண்ணிக்கை: 19,34,447.
பின் வாக்காளர்களின் எண்ணிக்கை: 16,09,553.
நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 3,24,894.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதம்: 16.80%.


நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து 1,93,706 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வரைவுப் பட்டியலின் மொத்த எண்ணிக்கை: 14,66,660.
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 11.67%.


சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) அடிப்படையில், கோவை மாவட்டத்தில் வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து 6,50,590 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வரைவுப் பட்டியலின் மொத்த எண்ணிக்கை: 32,25,198.
நீக்கப்பட்டவர்களின் சதவீதம்: 20.17%.


நெல்லை பொருணை அருங்காட்சியகப் புல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் எழுதப்பட்ட ராம் என்ற வார்த்தை அழிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் நாளை மறுநாள் (டிசம்பர் 21, 2025) முதல் பொதுமக்களால் திறந்து வைக்கப்பட உள்ளது

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆணைக்கு தடை


திண்டுக்கல் மண்டு கருப்பண்ணசாமி கோயில் வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. கோவிலைத் திறந்து பூஜை செய்யவும் கார்த்திகை தீபம் ஏற்றவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்உத்தரவிட்டிருந்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை