மனதில் வஞ்சனை!
திட்வா புயல் நேற்று (நவ.30) இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
தொடர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்க்பட்டிருந்தது.இந்த நிலையில் தாழ்வு மண்டலம் மேலும் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தற்போது அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று (டிச.01) மாலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால் நாளை (டிச.02) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார்.
இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது.
மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். இவர் பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார்.இவர் பல நாடகங்களை எழுதி இயற்றியுள்ளார். இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதுள்ள ஈர்ப்பு இவருக்கு குறையவில்லை.
இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் 'சதிலீலாவதி'. சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, 'சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்' என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். 1947ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு 'கலைவாணர்' பட்டம் வழங்கப்பட்டது.
நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய கலைவாணர் தனது 48வது வயதில் (1957) மறைந்தார்.
மனதில் வஞ்சனை குரல்?
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அவருடைய இன்றைய உரையில் காசி தமிழ்ச்சங்கமம் குறித்து பேசியிருக்கிறார்.
இந்த சங்கமத்தின் கருப்பொருள் ‘தமிழ் கற்கலாம்’ என்பதாம். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புல்லரித்து பிரதமர் மோடி தமிழ்மொழியின் மீது கொண்டுள்ள நேசமும் பற்றும் ஆச்சரியப்பட வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ என்பது மகாகவி பாரதியின் வாக்கு. இந்தியாவின் பன்முகத் தன்மையை விவரிக்கும் வரிகள் இவை. ஆனால் காசி தமிழ்ச்சங்கமம் எதற்காக நடத்தப்படுகிறது என்றால் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்று தமிழில் பிரதமர் குறிப்பிட்டுள் ளார். பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பன்முகப் பண்பாடு என்று இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பு. ஆனால் ஒற்றைப் பண்பாட்டை திணிப்பதற்காக துடிப்ப வர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலின் சுருக்கம்தான் பிரதமர் குறிப்பிடும் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பது.
இந்தி மொழி திணிப்பை ஏற்க மறுப்பதால் 2024-25, 2025-26 ஆண்டுகளில் தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தை களுக்கு கிடைக்க வேண்டிய 3548.22 கோடி ரூபாயை முடக்கி வைத்துவிட்டு, தமிழில் கற்க என்று காசியில் முழங்குவதால் பிள்ளைகள் எப்படி தமிழ் கற்க முடியும்?
தேவபாசை என்று கூறி சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மோடி அரசு 2014-2025 ஆம் ஆண்டு வரை ஒதுக்கிய தொகை ரூ.2,532.59 கோடி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட இந்திய மொழி களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.147.56 கோடி மட்டுமே. தமிழுக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது.
சமஸ்கிருதத்தைவிட 22மடங்கு குறைவாக தமிழுக்கு ஒதுக்கிவிட்டு தமிழ் கற்க என்று போலித்தனமாக கூறுவதில் பொருள் உண்டா?ழடி அகழாய்வை ஒன்றிய அகழாய்வுத் துறை கைவிட்டது மட்டுமின்றி, செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைக் கூட வெளியிட முட்டுக்கட்டை போடுகிறது ஒன்றிய அரசு.
கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தமிழி எழுத்துக்கள் காணப்படுகின்றன. காலப்புயல் களைக் கடந்து தமிழ் மொழி நிலைத்து நிற்கிறது. அதன் வரலாற்றுப் பெருமையை மூடி மறைக்க முயல்பவர்கள் காசிக்கு வாருங்கள், தமிழ் கற்கலாம் என்று பம்மாத்து செய்வது ஏன்?
உண்மையில் தமிழ் குறித்து பிரதமர் பேசும் புகழுரைகள் அவரது மனதிலிருந்து வருபவை அல்ல. வெறும் உதடுகளால் மட்டுமே உச்சரிக்கப்படுபவை. அந்த வார்த்தைகளில் உயிர் இல்லை.






