உருவாக்கப்பட்ட நெருக்கடி
கடந்த ஒரு வாரமாக இண்டி கோ விமான நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது திட்டமிட்ட “செயற்கை நெருக்கடி” என்று விமானிகள் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த நெருக்கடி, தனியார் மயம், ஏகபோகம், கார்ப்பரேட் லாப வெறி, அரசு - கார்ப்பரேட் கூட்டணி ஆகிய பிரச்சனைகளை யும் அம்பலப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு விதிகள் இந்தப் பிரச்சனையின் பின்ன ணியில் விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limit - FDTL) உள்ளது. இந்த விதிகள் விமானிகள் மற்றும் விமானப் பணிக்குழுவி னரின் ஓய்வு நேரத்தை அதிகரித்து, இரவுப் பணி வரம்பைக் குறைத்து, விமானப் பாதுகாப்பை உறுதி செய் வதை நோக்கமாகக் கொண்டுள் ளன. சோர்வுடன் பணிபுரிவதால் ஏற்படும் விமான விபத்துகளைத் தவிர்க்கவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
2025 நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. ஆனால் அது முறையாக அமலாக்கப்பட வில்லை. இந்த மாற்றங்கள் விமானப் போக்குவரத்து துறையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் அடித்து வரும் லாபக் கொள்ளைக்கு தடையாக இருப்பதால், அவர்கள் இதை விரும்பவில்லை.
குறைந்த பணியாளர்களை வைத்து அதிக நேரம் வேலை செய்ய வைக்கும் “சுரண்டல் முறை”க்கு இது தடையாக உள்ளது.குறைந்த பணி யாளர்களை வைத்து அதிக வரு வாய் பெற வேண்டும் என்ற இண்டி கோ நிறுவனத்தின் நோக்கமே இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்றும் விமானிகள் சங்கங்கள் பைலட் யூனியன்கள் குற்றம் சாட்டுகின்றன.
தற்போது விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட குழப்பத்தை சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டு, இண்டிகோ நிறு வனத்திற்கு மட்டும் இந்திய அரசின் விமான போக்குவத்து ஒழுங்கு முறை ஆணையம் (DGCA) பாதுகாப்பு விதிகளில் தற்காலிகத் தளர்வு அளித்துள்ளது.
இது 2026 பிப்ரவரி வரை நீடிக்கும். இத்தகைய விதிவிலக்கு களைப் பெறுவதற்கான அழுத் தத்தை உருவாக்கவே இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டு விமான ரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.பெருமளவு பொதுமக்கள் அவதிப் படுவதன் மூலம் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து, பாது காப்பு விதிகளை தளர்த்த வைக்க முயல்கிறது என விமானிகள் சங்கத் தலைவர் சாம் தாமஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு விதிகளில் தளர்வு அளிப்பது விமானிகளின் சோர்வை அதிகரித்து, விமான விபத்துக்களுக்கான அபாயத்தை உருவாக்கும்.
இது மக்கள் பாது காப்பைக் கைவிட்டு, கார்ப்பரேட் லாபத்திற்கு முன்னுரிமை அளிக் கும் ஆபத்தான செயல் என்று தொழிலாளர் அமைப்புகள் எச்ச ரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் லஞ்சம் கொடுத்த நிறுவனம் 2023-ஆம் ஆண்டில் இண்டிகோ நிறுவனம் பெரும் தொகையை நன்கொடையாக அளித்த விவகா ரம் தற்போது வெளியே வந்துள் ளது.
இந்திய தேர்தல் ஆணையம் 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட தர வுகளின்படி, இண்டிகோ நிறுவ னத்தை இயக்கும் இண்டர் குளோ பல் குழுமம், தேர்தல் பத்திரங்க ளை வாங்கிய போக்குவரத்துத் துறை சார்ந்த மிகப்பெரிய நிறுவன மாக உள்ளது.இந்தக் குழுமம் மொத்தம் 36 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி யுள்ளது. இண்டிகோ குழுமத்தின் இண்டர் குளோபல் ஏவியேசன், இண்டர் குளோபல் ஏர் டிரான்ஸ் போர்ட், இண்டர் குளோபல் ரியல் எஸ்டேட் வெண்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் தலா 1 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 36 பத்திரங்களை வாங்கின.
இந்திய விமானப் போக்கு வரத்துச் சந்தையில் 63 சதவிகித பங்கை இண்டிகோ நிறுவனம் கொண்டுள்ளது. டாட்டாவிற்கு விற்கப்பட்ட இந்திய அரசின் விமா னமான ஏர் இந்தியா 13.6 சதவிகிதம் மட்டுமே கொண்டு இராண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய மக்களின் பொதுச் சொத்துக்களை கொடுத்து அம்பானியையும் அதா னியையும் மிகப்பெரிய முதலாளிக ளாக வளர்த்து விட்ட மோடி அரசு. அதேபோல கொரோனா காலத்தில் இருந்தே விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ நிறுவ னத்தை ஏகபோக நிறுவனமாக வளர்த்து விட்டுள்ளது.
தற்போதைய விதி விலக்குகள் விமானப் பயணிகளின் உயிரை ஆபத்தில் தள்ளி அனைவரையும் சுரண்டி இண்டிகோ நிறுவனம் மேலும் அதிக ஆதிக்கத்தை செலுத்த வழிவகை செய்யும்.
உலகம் கற்றுக்கொண்ட பாடம், இந்தியாவுக்கு எச்சரிக்கை விமான விபத்துகளுக்கு விமா னியின் சோர்வு முக்கியக் காரணம் என்பதை மேற்கு நாடுகளும் சீனா வும் உணர்ந்த பிறகு, வேலை நேரத்தைக் குறைத்து, ஓய்வு நேரத்தை அதிகரித்து, பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தின.
பெரும் விபத்துகள் மற்றும் தொழிலாளர் போராட்டங்களுக்குப் பிறகே இந்த மாற்றங்கள் வந்தன.
இந்தியாவும் இந்தக் கடுமை யான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பானது கார்ப்பரேட் நிறுவ னங்களின் அழுத்தத்திற்கு அடி பணியாமல், தனது சுதந்திரத்தை யும் பொறுப்பையும் மீட்டெடுக்க வேண்டும்.
நீக்கப்பட்ட நீதிக்கு அரசர்கள்!தமிழ்நாட்டை சார்ந்த நீதியரசர் ஒருவர் மீது நம்பிக்கையில்லை என்றுஃஃ நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வருவது ஒன்றும் புதிதல்ல.
உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக பணியாற்றிய வி.ராமசாமி மீது 1991ல் இம்பீச்மெண்ட் கொண்டுவரப்பட்டது (பிரபலமான சஞ்சய் ராமசாமியின் அப்பா இவர்தான்).
பிறந்த ஆண்டை தவறாக கொடுத்தவர் என்கிற குற்றச்சாட்டு இவர்மீதுதான் சுமத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தபோது அரசுப் பணத்தை முறைகேடாக செலவழித்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.பாஜக மற்றும் இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் இவர் மீது இம்பீச்மெண்ட் கொண்டுவந்தார்கள். நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி விசாரித்து, இவர் மீது சாட்டப்பட்ட 14 குற்றங்களில் 11 குற்றங்கள் நிரூபணமாகின என்று அறிவித்தது.
எனினும் மக்களவையில் ஓட்டெடுப்பு வந்தபோது காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்பிக்கள் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். எனவே நாடாளுமன்றம் மூலமாக அவரது பதவி பறிப்பு தப்பித்தது.
சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக ஒரு நீதியரசரின் பதவி பறிப்பு நடவடிக்கைகள் நடந்தது ராமசாமி விவகாரத்தில்தான்.
பின்னாளில் அதிமுகவில் சேர்ந்து, ஏ-ஒன் புரட்சித்தலைவியால் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியும் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்பீச்மெண்ட் மூலமாக பதவி இழந்த முதல் நீதியரசர் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த செளமித்ராசென். பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டு, கடைசியாக 2011ல் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இவருக்கு எதிராக பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்து பதவி இழந்தார்.
இந்தியாவில் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதியரசர் இவர்தான்.
தமிழ்நாட்டைச் சார்ந்த பி.டி.தினகரன், சிக்கிம் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். சட்டத்துக்கு மீறிய வகையிலான சொத்துகளை அவர் சொந்த ஊரில் குவித்து வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற வாய்ப்பிருந்த சூழலில், அவர் மீதான பதவிநீக்க நடவடிக்கைகள் வலுபெறத் தொடங்கின. நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருவதற்கு முன்பாக அவரே ராஜினாமா செய்தார்.
பின்னாளில் தன் ராஜினாமாவை திரும்பப்பெற விரும்புவதாக அவர் சொன்னபோதும்கூட, சட்ட அமைச்சகம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
நீதியரசர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை இந்தியாவில் அரிதிலும் அரிதாகதான் எழும்பும். அத்தகைய அரிதிலும் அரிதிலான பெருமையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதியரசர் தற்போது பெற்றிருக்கிறார்.
இந்த கோரிக்கை வெல்லுகிறதோ இல்லையோ, ஆனால் வரலாற்றில் சம்மந்தப்பட்ட நீதியரசரின் நம்பகத்தன்மை நிரந்தரமாக கேள்விக்கு உள்ளாக்கப்படும்.
8025 ஏக்கர் நிலம் மீட்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று (08.12.2025) கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தில் 4 குடியிருப்புகள் மற்றும் 18 வணிக கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை வெளியேற்றிட கோவை மண்டல இணை ஆணையர் அவர்களால் 2015 ஆம் ஆண்டில் சட்டப்பிரிவு 78-ன்படி ஆக்கிரமிப்பினை அகற்றிட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் துறையின் செயலாளர் ஆகியோரிடம் செய்திருந்த மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
2018 ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பாளர் சரவணமூர்த்தி மற்றும் சிலர், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நடத்த மனுதாரர்கள் முன்வராததால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கினை தள்ளுபடி செய்து, திருக்கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78 மற்றும் 79-ன் கீழ் தொடரப்பட்ட வழக்கு மற்றும் உயர்நீதிமன்ற பேராணை உத்தரவுகளின்படி, கோவை மண்டல இணை ஆணையர் பெ.ரமேஷ் அவர்களின் உத்தரவின்படி, உதவி ஆணையர்கள் உ.ச.கைலாஷமூர்த்தி மற்றும் மு.இரத்தினாம்பாள் ஆகியோர் முன்னிலையில் காவல்துறை உதவியுடன் திருக்கோயிலுக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 100 கோடியாகும்.
இதுவரை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 1,063 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ. 8,230.55 கோடி மதிப்பிலான 8,024.43 ஏக்கர் திருக்கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.






