ஆபத்தின் விளிம்பில்
இந்தியாவில் ஆபத்தின்விளிம்பில்
இருக்கும் மொழிகள்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதிலில் தென் இந்தியாவில் 117 மொழிகள் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகவும் தெற்கு மண்டலத்தில் 20 மொழிகளும் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு தொன்மையான மொழிகள் வரலாற்றில் எதிரெதிராக நிறுத்தப்பட்டு வருகிறது. இரு மொழிகளை முன்வைத்து நடக்கும் அரசியல் சதுரங்கம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 4.0 நடத்துகிறது. பிரதமர் மோடி செல்லுமிடமெல்லாம் தமிழ் மொழியைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் உயர்வாகப் புகழ்ந்து பேசுகிறார்.
ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் மத்திய பா.ஜ.க அரசு துரோகங்களை செய்து வருகிறது என்றும் பிரதமர் மோடி பேச்சில் மட்டும்தான் தமிழைப் புகழ்கிறார், செயலில் இல்லை என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, சமஸ்கிருதம், ஒரு செத்த மொழி, ரூ.2,400 கோடி பெறுகிறது.” என்று பேசியயுள்ளார்.
தென் இந்தியாவில் 117 மொழிகள் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகவும் தெற்கு மண்டலத்தில் 20 மொழிகளும் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகக் .
தென் இந்தியாவில் 117 மொழிகள் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகவும் தெற்கு மண்டலத்தில் 20 மொழிகளும் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகக் .
இந்தியாவில் 10,000 க்கும் குறைவான மக்களால் பேசப்படும், அழிந்து வரும் மொழிகள் என்று அழைக்கப்படும் அனைத்து தாய்மொழிகள்/மொழிகளையும் பாதுகாத்தல், பேணுதல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றில் செயல்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து 117 அழிந்துவரும் மொழிகள்/ தாய்மொழிகள் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி (இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை ஆணையர் அலுவலகம்), நாட்டில் மொத்தம் 121 மொழிகள் பதிவாகியுள்ளன.
இந்த மொழிகளில் பலவற்றிற்கு அவற்றின் தனித்துவமான எழுத்து வடிவங்கள் உள்ளன, மற்றவை பொதுவான அல்லது பிராந்திய எழுத்து வடிவங்களில் எழுதப்படுகின்றன.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் (Central Institute of Indian Languages - CIIL), இந்தியாவின் அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் பேணுவதற்கான திட்டத்தின் (Scheme for Protection and Preservation of Endangered Languages of India - SPPEL) கீழ், இந்தியாவில் 10,000 க்கும் குறைவான மக்களால் பேசப்படும், அழிந்து வரும் மொழிகள் என்று அழைக்கப்படும் அனைத்து தாய்மொழிகள்/மொழிகளையும் பாதுகாத்தல், பேணுதல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றில் செயல்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து 117 அழிந்துவரும் மொழிகள்/தாய்மொழிகள் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன,
ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள சாகித்ய அகாடமி 24 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் மற்றும் பல பழங்குடி மற்றும் அங்கீகரிக்கப்படாத மொழிகளிலும் விருதுகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் இலக்கிய உரையாடல் மற்றும் வெளியீட்டை ஊக்குவிக்கிறது.
மேலும், வாய்மொழி மற்றும் பழங்குடி இலக்கியங்களை ஆவணப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இது சிறப்புத் திட்டங்கள் மற்றும் மையங்களை உருவாக்குகிறது, அவை வாய்மொழி மற்றும் பழங்குடி இலக்கியத்திற்கான மையம் (Centre for Oral and Tribal Literature) போன்றவை ஆகும்.
அத்துடன், குறைவாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் பணியாற்றும் அறிஞர்களுக்கு பாஷா சம்மான் விருதையும் வழங்குகிறது.
மேலும், பின்னிணைப்பில், அழிந்து வரும் மொழிகள் என ஆபத்தின் விளிம்பில் இருக்கும் மொழிகளாக 117 மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவில் தெற்கு மண்டலத்தில் 20 மொழிகள் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவற்றில், ஏறவல்லன், ஹக்கிபிக்கி, ஜெனு குரும்பா, காடர், கணிகர் கோட்டி, குடியா, மலைமலசர், மலசர், மலையான், மன்னன், மூப்பன், முதுகா, பளியா, புலியா, சித்தி, சோளிகா, தோடா, உரளி, ஆகிய மொழிகள் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேசிய மாசுக் கட்டுப்பாட்டு நாள்
முக்கியமான காரணம், 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ல் நடந்த போபால் விஷவாயு துயரம் (Bhopal Gas Tragedy) தான்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய மாசுக் கட்டுப்பாட்டு நாள் (National Pollution Control Day) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம் தேசத்தின் வரலாற்றில் நடந்த ஒரு பயங்கரமான துயரத்தை நினைவுபடுத்தும் நாளாகவும் உள்ளது.
தேசிய மாசுக் கட்டுப்பாட்டு நாள் அனுசரிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம், 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடந்த போபால் விஷவாயு துயரம் (Bhopal Gas Tragedy) தான்.
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்திருந்த அமெரிக்க இரசாயன நிறுவனமான யூனியன் கார்பைடு (Union Carbide) நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து நள்ளிரவில் மெத்தில் ஐசோசயனேட் (Methyl Isocyanate - MIC) என்ற நச்சு வாயு கசியத் தொடங்கியது.
மக்கள் வசிக்கும் பகுதிக்குள் பரவிய இந்த விஷவாயு காரணமாக, குறைந்தபட்சம் 4,000 பேர் தங்கள் உயிரை இழந்தனர்.
வரலாற்று ரீதியாக இதுவே உலகின் மிகக் கொடிய தொழில்துறை விபத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. போபால் நகரம் ஒரே இரவில் ஒரு விஷவாயுக் கிடங்காக மாறியது.
![]() |
| அமெரிக்காவில் இந்திய அரசால் ஒளியவைக்கப்பட்ட யூனியன் கார்பைடு ஆன்டரசன் |
போபால் துயரத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் நினைவாகவும், தொழில்துறை அலட்சியத்தின் பயங்கரமான விளைவுகளை நினைவூட்டும் வகையிலும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தேசிய நாள் ஒரு நினைவஞ்சலி நாளாக மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறையினருக்கு ஒரு முக்கியமான பாடத்தையும் வழங்குகிறது:
இது, பெரிய தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன ஆலைகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் மண் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் அசுத்தங்களின் அபாயங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
பொருத்தமான மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், சுத்தமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் வேண்டிய கடமையை இது நமக்கு நினைவூட்டுகிறது.
சுருங்கச் சொன்னால், இந்த நாள் நாம் இழந்த உயிர்களுக்கான மரியாதை மட்டுமல்ல, வருங்காலப் பேரழிவுகளைத் தடுக்க நாம் எடுக்க வேண்டிய உறுதிப்பாடாகவும் உள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு நேரடியாக நம் நிதி ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மோசமான காற்றுத் தரத்தால் (உதாரணமாக, டெல்லி போன்ற நகரங்களில்) ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கான மருத்துவச் செலவுகள், மாசுபட்ட நீரால் ஏற்படும் நோய்கள், இவை அனைத்தும் தனிநபரின் நிதிச் சுமைகளை அதிகரிக்கின்றன.
எனவே, தேசிய மாசுக் கட்டுப்பாட்டு நாளில், நம் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது நம் சுகாதாரம் மற்றும் நிதிப் பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
போபாலைப் போன்று மாறிவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை தூத்துக்குடி மக்களால் 14 உயிர்களை தூப்பாக்கக்கு பலி கொடுத்தனர்..
போபால் படுகொலைகளில் இருந்து நம் அரசுகள் பாடங்களைப் படிக்காமல் பணத்துக்காக எளிய மக்கள் உயிர்களை கார்பரேட் களிடம் காணிக்கையாக்கி வருகின்றன.



