மோடியை நம்ப முடியாது?
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை, கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய மேயர் பிரியா.
🔴சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் நிலவரம்!
35 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது
அதிகபட்சமாக,
1⃣ பாரிமுனை - 265.2 mm
2⃣ எண்ணூர் - 264.3 mm
3⃣ ஐஸ் ஹவுஸ் - 231.3 mm
4⃣ பேசின் பாலம் - 207.6 mm
5⃣ மணலி புதுநகர் - 206.6 mm
மழை பதிவாகியுள்ளது
சென்னையில் சராசரியாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மாநகரின் பல பகுதிகளில் இரவிலும் வெளுத்து வாங்கிய கனமழை. ஜாம்பஜார், மீசாபேட்டை பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை புரசைவாக்கம், ஓட்டேரி பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு. சாலைகள், வீதிகளில் தேங்கிய மழைநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை.
வீடுகள் சேதம், உயிரிழப்புகளுக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.மோடி அரசுக்கு அதிர்ச்சி அளித்த சர்வதேச நாணய நிதியம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரத்தை நம்பமுடியாது
புதுதில்லி ஒன்றிய புள்ளியியல் அமைச்சகம் கடந்த வாரம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளி விபரத்தை வெளியிட்டது.
அதில், இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2025-26 நிதி யாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விடவும், முந்தைய காலாண்டையும் விடவும் மிக அதிகம் ஆகும். அமெரிக்காவின் வரிகள் போன்ற சவால்களையும் தாண்டி இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என கூறப்பட்டுள் ளது.
பிரதமர் மோடி,”இந்த வளர்ச்சி விகிதம் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்திய மக்களின் கடின உழைப்பு மற்றும் தொழில் முனைப்புக்கு பாராட்டு” என பெருமிதமாகக் கூறினார். இந்நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) புள்ளி விபரத்தை நம்ப முடியாது என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளது.சர்வதேச நாணய நிதியம் இந்தியா குறித்த அதன் வருடாந்திர “கட்டுரை IV” அறிக்கையை வெளியிட்டது. இந்தக் கட்டுரையில் இந்தியாவின் தேசிய கணக்குகளு க்கு (ஜிடிபி, ஜிவிஏ மற்றும் தொடர்புடைய எண் களை உருவாக்கும் அமைப்பு) ஒட்டுமொத்த மாக “சி (மூன்றாம் தரம்)” தரத்தை வழங்கி யுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளிவிவ ரங்கள் நம்பகமானவை அல்ல. இந்திய அரசு பொருளாதாரச் சோதனையில் அரிதாகவே தேர்ச்சி பெற்றுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அறிவிக்கும் போது தகவல் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சிறு கடைக் காரர்கள், வியாபாரிகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, மொத்த உள் நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரத்தை நம்ப முடியாது.
இந்தியாவின் பொருளாதார அறிவிப்பு வெறும் தற்காலிகம் தான்.
நிரந்தரம் அல்ல.
தற்போது வெளியாகியுள்ள இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரத்திற்கு “பி” கிரேடு வழங்குகிறோம் என சர்வதேச நாணய நிதியம் “கட்டுரை IV” அறிக்கையில் கூறியுள்ளது.
இந்திய மக்களுக்கு மோடி விதம்,விதமாக வாயால் வடைசுட்டு ஏமாற்றி வருவது போல் உலகளவில் வடை சுடுவது செல்லாது எனசர்வதேச நாணய நிதியம் கூறிவிட்டது.?
மோ(ச)டி வேடம்!
மோ(ச)டி நடிப்பு!!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, கூட்டத் தொடரின் முதல்நாளிலேயே அனல் காற்று வீசத் துவங்கியுள்ளது.
‘இதை எதிர் பார்த்து பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி யினர் பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும். நாடகம் போடக் கூடாது. நாடகம் நடத்துவதற்கு வேறு இடங்கள் உள்ளன.
பீகாரைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஆனால் இதற்கு அரசு எந்த பதிலையும் கூறாத நிலையில்தான் மக்களவையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட வுள்ளது. அரசுத் தரப்பு விவாதத்திற்கு இணங்காத நிலையில், அவையில் அமளி ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதானியின் ஊழல் குறித்து அவையில் விவாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கா கவே ஆளுங்கட்சி தரப்பில் கடந்த காலத்தில் ரகளை செய்து அவை முடக்கப்பட்டது என்பதை நாடறியும்.
நாடாளுமன்றம் தானறியும். இந்த லட்சணத்தில் நாடகம் வேண்டாம் என்று பிரதமர் கூறுவது கேலிக்கூத்தானது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலத் கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசி டம் இல்லை. ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விபரீதத் திட்டத்தை அரங்கேற்ற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதில் இந்திய மக்கள் நலன் கிஞ்சிற்றும் உண்டா?
அது மட்டுமின்றி, கல்வித்துறையை மத்திய மயமாக் கும் உயர்கல்வி ஆணைய மசோதா,
அணு சக்தி துறையிலும் கார்ப்பரேட் முதலாளிகளை அனுமதிக்கும் அணுசக்தி மசோதா,
தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத் திருத்த மசோதா,
பெரு நிறுவன சட்டத் திருத்த மசோதா
என உத்தே சிக்கப்பட்டுள்ள அனைத்து மசோதாக்களும் இந்திய மக்களின் நலனுக்கு எதிரானவை.
இந்தியாவை மேலும் மேலும் தாராளமயப் பாதையில் இட்டுச் செல்வதற்கான மசோதாக் களைத்தான் ஒன்றிய அரசு தீட்டி வைத்துக் கொண்டு நாடகம் போடாதீர்கள் என்று வெளி வேசம் போடுகிறது.மாநிலங்களின் வரி வருவாய் வாய்க்கால்களை அடைத்துள்ள மோடி அரசு செஸ் வரிகள் மூலம் மாநிலங்களை மேலும் ஓட்டாண்டியாக்க முயல்கிறது.
நாடாளுமன் றத்தை நாடக மேடையாக மாற்றிக் கொண்டிருப் பது மோடி அரசுதான்.









