அழியும் ஆரவல்லி மலைத்தொடர்!
எஸ்.ஐ.ஆர். படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ். நேரில் ஆஜராகி ஆவணங்களை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ். முதற்கட்டமாக ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னையில் நேற்று இரவு அதிவேகமாக வாகனங்களை ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாக 15 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை.
*கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம்.*
1968-ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள, கீழ்வெண்மணி கிராமத்தில், உழைப்புக்கேற்ற கூலி கேட்டுப் போராடியமைக்காக 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தலித் வேளாண் தொழிலாளர்கள் பதுங்கியிருந்த ராமையாவின் குடிசைக் கதவு, நிலக்கிழார் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களால் அடைக்கப்பட்டு, 44 பேரும் குடிசையோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.
"இன்னுயிர் ஈந்த...
தியாகிகளுக்கு
வீர வணக்கம்."
அழிக்கப்படும் ஆரவல்லி!
இந்தியாவின் மிகப்பழமையான மலைத் தொடரான ஆரவல்லி, இன்று அதன் இருப் புக்கே சவாலான சூழலைச் சந்தித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 2025-ஆம் ஆண்டு தீர்ப்பு மற்றும் ஒன்றிய அரசின் கொள்கை மாற்றங்கள், வட மேற்கு இந்தியாவின் இந்த ‘உயிர்நாடியை’ கார்ப் பரேட் லாபத்திற்காகத் திறந்துவிட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுத லின்படி, 100 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள நிலப் பகுதிகள் மட்டுமே “மலை” எனக் கருதப்படும். ஆரவல்லி என்பது இமயமலை போன்ற உயர மான சிகரங்களைக் கொண்ட தொடரல்ல;இது பல கோடி ஆண்டுகள் பழமையான சிதைந்த மலை அமைப்பு. இதன் பெரும்பகுதி 10 முதல் 80 மீட்டர் உயரமுள்ள சிறிய குன்றுகளே.
‘இந்திய வன ஆய்வு நிறுவனத்தின்’ தரவுகளின்படி, ஆரவல்லியில் உள்ள 12,081 மலைகளில் வெறும் 1,048 (8.7சதவிகிதம்) மட்டுமே 100மீட்டர் உயரத்தைத் தாண்டுகின்றன.
இதன் பொருள், சுமார் 91.3சதவீத ஆரவல்லிப் பகுதிகள் சட்டப் பூர்வ பாதுகாப்பை இழந்து, சுரங்க மாஃபியாக் களுக்கும் கார்ப்பரேட்களுக்கும் காவு கொடுக்கப் படப் போகின்றன என்பதே.
சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப்போகச் செய்வது ஒன்றிய மற்றும் பாஜக மாநில அரசுக ளுக்குப் புதியதல்ல. 2019-இல் ஹரியானா அரசு ‘பஞ்சாப் நிலப் பாதுகாப்புச் சட்டத்தில்’ திருத்தம் செய்து, 63,000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட நிலத்தை வணிகப் பயன்பாட்டிற்குத் திறந்தது.
அதன் தொ டர்ச்சியாக, 2023 வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் பல பொது வனங்களைத் தனியார் நிறுவ னங்களுக்குத் தாரைவார்த்தது.
தற்போது 100 மீட்டர் வரையறை என்பது இந்தத் துரோகத் தின் அடுத்த கட்டமாகும். ஹிந்துஸ்தான் ஜிங்க், ஜிண்டால் ஸ்டீல் போன்ற பெருநிறுவனங்கள் மற்றும் சுரங்க மாஃபியாக்களின் சுரண்டலுக்கு இத்தீர்ப்பு சட்டப்பூர்வ முகமூடியை வழங்கியுள்ளது.
ஆரவல்லி மலைத்தொடர், தார் பாலை வனம் கிழக்கு நோக்கிப் பரவாமல் தடுக்கும் இயற்கை அரண். இத்தடுப்புச் சுவர் பலவீன மானால், மணல் புயல்கள் அதிகரித்து விவசாய நிலங்கள் அழிந்துவிடும்.
மேலும் தில்லி, குரு குரூம், ஜெய்ப்பூர் நகரங்களின் நிலத்தடி நீர் ஆதா ரமாக இக்குன்றுகளே உள்ளன. சுரங்கம் அதி கரித்தால், ஏற்கனவே நீர் நெருக்கடியிலுள்ள இப்பகுதிகள் கடும் வறட்சியைச் சந்திக்கும். சிறுத் தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம் பெயரும் வழித்தடங்கள் அழிக்கப்பட்டு மனித- விலங்கு மோதல்கள் தீவிரமடையும்.மலையின் முக்கியத்துவம் அதன் உயரத்தில் இல்லை; சூழலியல் செயல்பாட்டில்தான் உள் ளது. நிலவியல் மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகிய அறிவியல் அளவுகோல்களைப் புறந் தள்ளி, ‘நில அளவீடு’ என்ற தொழில்நுட்பச் சாக்கில் கார்ப்பரேட் நலனுக்காகச் செயல்படு வது தேச விரோதச் செயலாகும்.
ஒட்டுமொத்த ஆரவல்லித் தொடரையும் ‘முக்கியச் சூழலியல் மண்டலமாக’ அறிவித்து, சுரங்கத் தொழிலை மாஃபியா கும்பலிடம் ஒப்படைப்பதை தடுக்க வேண்டும்.
இல்லையெனில், வரும் தலைமுறை சுவாசிக்கக் காற்றும் குடிக்கத் தண்ணீரும் இன்றி தவிக்கும்!











