கட்சிகளின் கலவர நிலவரம.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பம். உறுதிமொழி படிவம் கொடுப்பதில் குளறுபடி நீடிப்பதால் புதியர்களை சேர்ப்பதில் சிக்கல்.

பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு. திமுக மேற்கு மண்டல மகளிர் அணி சார்பில் 2 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு.

சென்னையில் காற்று மாசு தரக் குறியீட்டில் முன்னேற்றம்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.
தெற்கு மெக்சிகோவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு; 36 பேர் படுகாயம்.
இந்தியா முழுவதும் 130 விமான சேவைகளை குறைத்துள்ளது இண்டிகோ நிறுவனம்.
மைசூரு நகைக்கடையில் 5 கிலோ தங்கம் கொள்ளை












சங்கி சக்கரவர்த்தி?

அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, உத்தர பிரதேசத்தை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக பதிவிட்டுள்ள கருத்து தமிழகத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக காங்கிஸ் நிர்வாகிகள் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாள்தோறும் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.


குறிப்பாக தி.மு.க. பா.ஜ.க, த.வெ.க கட்சிகள் மாறி மாறி குறை சொல்வதும், குற்றச்சாட்டுகள் சுமத்துவதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்குள்ளே அரசியல் கருத்துக்கள் மீதான சச்சரவு அதிகரித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை அதிகரித்துள்ளது. 

காங்கிரஸ் தோழமைகட்சிகளையும் பகைத்துக் கொண்டால் வெற்றி கேள்விதான்.

இப்போது தோழமைக் கட்சியான தி.மு.க வை தாக்கி இடுகையிட என்ன அவசியம் வந்தது என காங்கிரசிலேலே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இந்த சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் முக்கிய காரணமாக இருப்பவர் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தான். இவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2010 ஆம் ஆண்டில், உத்திரபிரதேச மாநிலத்தின் கடனில் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.


இப்போது, உ.பி. மாநிலத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது. பிபி & மனிதவளத்திற்குப் பிறகு தமிழகத்தின் வட்டிச் சுமை சதவீதம் 3வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி கோவிட்-க்கு முந்தைய நிலைகளை விட இன்னும் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்து, தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது.


கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பயனுள்ள நலன்புரி வழங்கல் ஆகியவற்றில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, நிறுவன நிர்வாகத்திற்குப் பதிலாக "புல்டோசர் ராஜ்" மாதிரியை ஊக்குவிக்கும் அதே வேளையில், பெரும்பாலான மனித மேம்பாட்டு குறியீடுகளில் உத்தரப்பிரதேசம் இன்னும் போராடுகிறது.


கடனை விளைவுகளுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் திறன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தை வலுப்படுத்தும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 


மத்திய அரசின் நிதிக் கொள்கைகளும் முக்கியம். தமிழ்நாடு வரிகளில் முக்கிய பங்களிப்பாளராக உள்ளது, ஆனால் அதிகாரப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது, அதே நேரத்தில் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக பரிமாற்றங்களைப் பெறுகின்றன.


இயற்கை பேரழிவுகள் மற்றும் எஸ்.எஸ்.ஏ (SSA) போன்ற திட்டங்களின் போது கூட, தமிழ்நாடு முறையான நிலுவைத் தொகைகளை மறுத்து தாமதப்படுத்தியுள்ளது. 


கடனைப் பற்றி விவாதிப்போம், ஆனால் சூழலுடன். வளர்ச்சி விளைவுகள், தனிநபர் குறிகாட்டிகள், வரி பங்களிப்பு - அதிகாரப் பகிர்வு மற்றும் நிர்வாகத்தின் தரம். இந்த நடவடிக்கைகளால், தமிழ்நாடு மிகவும் முன்னேறியுள்ளது. நமது மாநிலத்தை நாம் ஏமாற்ற வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். 

சஷிகாந்த் செந்தில்

முழுமையான கடனை வைத்து மாநிலங்களை மதிப்பிடுவது என்பது உடல் எடையை வைத்து உடற்தகுதியை தீர்மானிப்பது போன்றது. உயரம் இல்லை, தசை இல்லை, வெறும் அதிர்வுகள் மட்டும் தான் என்று பதிவிட்டுள்ளார். 


லட்சுமி ராமச்சந்திரன்

தமிழகத்தின் கடன் மற்றும் நிதிப்பற்றாக்குறை எண்கள் குறித்து, மதிப்புக்குரிய மற்றும் நன்கு அறியப்பட்ட பொருளாதார வல்லுநர் ஒருவரிடம் நான் பேசினேன். அவர் கூறிய கருத்துக்களில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் முதல் இந்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்கள் வரை, மொத்தக் கடன் என்பது ஒவ்வொரு ஆண்டும் உயரவே செய்யும்.


எனவே, வெறும் 'மொத்தக் கடன்' தொகையை மட்டும் ஒரு மாநிலத்தின் நிதி நிலையை மதிப்பிடுவதற்கான பயனுள்ள அல்லது பொருத்தமான அளவுகோலாகக் கருத முடியாது.


அடுத்து ஒரு மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தைக் கணிக்க, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GSDP), கடனுக்கும் இடையிலான விகிதத்தைப் பார்ப்பதே சரியானது. தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த விகிதம் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி ஏறக்குறைய நிலையாகவே (Constant) உள்ளது.


தமிழகம் தனது நிதி நிர்வாகத்தை எவ்வளவு சிறப்பாகக் கையாண்டுள்ளது என்பதை, நிதிப்பற்றாக்குறைக்கும் (Fiscal Deficit) GSDP-க்குமான விகிதத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தெளிவாகக் காட்டுகிறது.


இந்த விகிதம் 3.46% என்பதிலிருந்து 3.00% ஆகக் குறைந்துள்ளது. 3.00% என்ற அளவை எட்டியதன் மூலம், தமிழகம் எஃப்.ஆர்.பி.எம்.  (Fiscal Responsibility and Budget Management) நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.


நிதிப்பற்றாக்குறை என்பது ஒவ்வொரு ஆண்டும் அரசு வாங்கும் கடனின் அளவைக் குறிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த விகிதத்தில் சுமார் 0.5% முன்னேற்றம் கண்டுள்ளது என்பது ஒரு வியக்கத்தக்க சாதனையாகும்.


இது தமிழகம் தனது கடன் வாங்கும் முறையை மிகத் திறம்பட நிர்வகித்து வருவதை உறுதிப்படுத்துகிறது.


பொருளாதாரத்தின் இத்தகைய நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளாமல், மாநிலங்களுக்கு இடையே வெறும் கடன் தொகையை வைத்து மட்டும் செய்யப்படும் மற்ற ஒப்பீடுகள் அனைத்தும் அர்த்தமற்றவை என்று பதிவிட்டுள்ளார்.


கட்சிகளின் கலவர நிலவரம.


தமிழ்நாடு 2026ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறது. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏறத்தாழ 1 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வாக்குரிமை உள்ளவர்களும் அடக்கம். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களிலும் இருப்பிடச் சான்றிதழ் வழங்க வேண்டிய வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். 

புதிய வாக்காளர்களை இறுதிப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இத்தனையும் சரியாக நடந்தால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் நிலைநாட்டப்படும். அதனை அரசியல் கட்சிகள் கண்காணிக்க வேண்டும்.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து தொடக்கத்திலிருந்தே மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி வருவது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதிகாரப்பூர்வ பாக நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள எவரும் நீக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறார்கள். வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்கிறார்கள்.


 ஏற்கனவே, ஓரணியில் தமிழ்நாடு என்ற செயல்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்ட மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியில் தங்கள் கட்சி ஆதரவு வாக்காளர்களின் அடையாள அட்டை, வரிசை எண், பாக எண் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதால் தி.மு.க.வினரால் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் எவை சரியாக உள்ளது, எவை தவறாக உள்ளது என்பதைக் கண்டறிந்து சரிப்படுத்தும் பணி எளிதாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஜெயலலிதா இருந்தவரை தேர்தல் களத்தில் கில்லியாக இருந்தார்கள். 100 வாக்காளருக்கு ஒரு நிர்வாகி என நியமித்து, அந்த வாக்காளர்களில் பெரும்பாலானவர்களை தங்களுக்கு ஆதரவாகத் திருப்புதவற்கு சாம-தான-பேத-தண்டங்களை செய்வதில் அ.தி.மு.கவினர் சாமர்த்தியமாக செயல்பட்டனர். 

அது அ.தி.மு.க.வுக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றியைத் தந்தது. இப்போது, அ.தி.மு.க.வின் நிலை முன்பு போல இல்லை. பாக நிலை முகவர்களை நியமிப்பதிலேயே பல குழப்பங்கள் உள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியிலேயும் அ.தி.மு.க. பெரிாகா அக்கறை காட்டவில்லை.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, தங்கள் ஆதரவு வாக்காளர்கள் இருக்கிறார்களா என்பதை அ.தி.மு.க. கவனிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் சனி, ஞாயிறு கிழமைகளில் நடத்தப்படும் முகாம்களில் அ.தி.மு.க நிர்வாகிகள் குவிகின்றனர். 

பழைய வேகம் இல்லாவிட்டாலும், சொந்த வாக்குகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அதைவிட முக்கியமாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் நம்பியது போலவே, பிரதமர் நரேந்திர மோடி ஆதரவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏதேனும் மாய்மாலம் செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலமாக கணிசமான அளவில் உண்மையான வாக்காளர்களை நீக்கிவிட்டு, பீகார் உள்ளிட்ட வடமாநில வாக்காளர்களை தமிழ்நாட்டு பட்டியலில் சேர்த்து விடலாம் என்றும், அதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் துணை நிற்கும் என்றும் நினைக்கின்றனர்.

 அத்துடன், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் போன்ற மதவாத பிரச்சிகனைகளைக் கிளப்பி, தி.மு.க.வை இந்து விரோதி என்று பரப்புரை செய்து, அதன் மூலம் வாக்குகளைத் தங்கள் திருப்பலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.

பா.ம.க. அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸிடமும், அவர் மகன் அன்புமணியிடமும் அல்லாடிக் கொண்டிருக்கிறது. யார் உண்மையான பா.ம.க., இரண்டு பா.ம.க.வில் எந்தக் கட்சி யார் பக்கம் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிற கட்சிகள் இருக்கின்றன.

 தே.மு.தி.க. எந்தப் பக்கம் போகலாம் என யோசிக்கிறது. பொதுவாக, தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க தே.மு.தி.க. ரெடியாக இருக்கும். இந்த முறை என்னவென்று இனிதான் தெரியும்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிகாரத்தில் ஆசை உள்ளது. அதில் குறிப்பாக, மாநிலத் தலைமையை மீறி செயல்படுவதே கட்சி அரசியல் எனக் கருதும் தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்கள் ஆளுக்கொரு கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்னுடைய கூட்டணி தி.மு.க.வுடன்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என பல சக்திகள் முயற்சி செய்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாய்ஸ் தி.மு.க.தான் என்பது தற்போது வரையிலான நிலவரம். ம.தி.மு.க குறித்து எல்லாருக்கும் கேள்வி உள்ளது.

இந்தத் தேர்தல்களத்தில் அதிகளவில் புரமோட் செய்யப்படும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது ரசிகர்களை வைப் செய்து தொண்டர்களாக வைப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்துகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, மலேசியா வரை வைப் செய்கிறார்கள்.

 அரசியலில் வேறு திசை அறியாத தினகரன், ஓ.பி.எஸ். போன்றவர்கள் விஜய் பக்கம் கண்களை சிமிட்டுகிறார்கள்.

புத்தாண்டு பிறந்தபிறகு குழப்பங்கள் தெளிந்து, அரசியல் குட்டை தெளிவாகலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை