வளர்ச்சிக்கான கடன்.
* தமிழ்நாடு முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட 3 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு
வடக்கு மண்டல ஐ.ஜி. தவிர்த்து, 3 மண்டல ஐ.ஜி-க்களும் பணியிட மாற்றம். ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர்களையும் இடமாற்றம் செய்து இயந்திரம்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை.சென்னையில் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை
தி.மு.க தேர்தல் அறிக்கைக்காக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய செயலியை இன்று அறிமுகம் செய்கிறார்இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 1 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அதன்பின், 10 ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 6 இலட்சம் கோடியாக உயர்ந்தது. 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் கடன் சுமை 8.33 இலட்ச ரூபாயாக உள்ளது.
அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் 40% முதல் 50% வரை கடன்சுமை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் இந்த கடன் சுமையை உத்தரபிரதேச அரசுடன் ஒப்பிட்டு, அந்த மாநிலத்தைவிட தமிழ்நாட்டின் கடன்சுமை அதிகம் என்று வரைபடத்துடன் புள்ளிவிவரம் வெளியிட்டிருப்பவர் பா.ஜ.க.வையோ அ.தி.மு.க.வையோ சார்ந்தவரல்ல.
காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி எம்.பி.க்கு நெருக்கமான ஆலோசகராக அறியப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி (Praveen Chakravarthy) என்பவர். தமிழ்நாட்டின் கடன்சுமையை காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் அந்த காங்கிரஸ் பிரமுகர் ஒப்பிட்டிருந்தால் இயல்பான ஒப்பீடாக இருந்திருக்கும்.
காங்கிரசின் நேரடி எதிரியான பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேச அரசுடன் ஒப்பிட்டிருப்பது அவருடைய உள்நோக்கத்தையே காட்டுகிறது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் மயிலாடுதுறை தொகுதிக்கான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பெயரை அறிவிப்பதில் அதிக தாமதம் ஏற்பட்டது.
2019ல் தி.மு.க. வென்ற தொகுதி அது. 2024ல் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியில் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதத்திற்கான காரணம் என்னவாக இருந்ததென்றால், காங்கிரஸ் மேலிடம் மூலமாக அந்தத் தொகுதியை பிரவீன் சக்கரவர்த்தி வலியுறுத்தியதுதான்.
சொந்தக் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு இருந்தது.
மக்களிடம் அறிமுகமில்லாதவர் என்பதும் காரணமாக இருந்தது. இறுதியில், வழக்கறிஞர் சுதா அந்தத் தொகுதியின் வேட்பாளராகி எம்.பி.யானார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பிரவீன் சக்கரவர்த்திக்கு தி.மு.க. தலைமை மீதும், அரசு மீதும் இரத்தத்தில் ஊறிய வெறுப்பு உண்டு.
எனினும், தனிப்பட்ட காரணங்களைத் தவிர்த்து, அவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை ஆராய்வதே பொருத்தமான ஒப்பீடாக இருக்கும். கடன்சுமை (Debt burden) என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் உள்ளது. இந்தியாவுக்கும் கடன் சுமை உண்டு.
உலக நாடுகள் பலவும் கடன் வாங்கி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, 2014ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் நிறைவில், மத்திய அரசின் கடன் சுமை என்பது 58.6 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அதன் பின் கடந்த 11 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் கடன் சுமை 181 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் பிரமுகர் ஒப்பிட்டிருக்க வேண்டிய கடன்சுமை இதுதான். ஆனால், அவரது இரத்தத்தில் ஊறிய உணர்வோ தி.மு.க. அரசை விமர்சிப்பதாக உள்ளது.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும GSDP அடிப்படையில் 28.9%க்குள் அந்த மாநிலத்தின் கடன் அளவு இருக்கவேண்டும்.
2021 அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் விகிதம் 29%ஆக இருந்தது.
இந்த 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் GSDP அளவுடன் ஒப்பிடும்போது, கடன்விகிதம் என்பது 26.4% என்ற அளவிலேதான் உள்ளது.
உத்தரபிரதேசத்தின் கடன் சுமை 9.04 இலட்சம் கோடி ரூபாய். அந்த மாநிலத்தின் GSDPயுடன் ஒப்பிடும்போது 29.4% என்ற அளவில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக உள்ளது.
தமிழ்நாட்டின் கடன் அளவு எப்படி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது?
தொழில்துறை முதலீடுகள், உற்பத்தி, வணிகம், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.
அதனால், கடன்சுமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், கடன் தொகையையும் சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தி, அதன் மூலமாக தனி மனிதர்களின் வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கி, சமுதாய முதலீடாக மாற்றியுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் அளவு என்பது கட்டுப்பாட்டில் உள்ளது. வளர்ச்சி என்பது சீராக உள்ளது. கொரோனா பேரிடர் நிவாரணம், இயற்கை பேரிடர் நிவாரணம் போன்ற நெருக்கடிகளையும், மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறையையும் எதிர்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, இந்திய அரசு நிர்ணயித்துள்ள பல இலக்குகளிலும் முன்னேறி இருக்கிறது.
இன்னும் பல முன்னேற்றங்களை அடைய வேண்டியுள்ளது.
நச்சு அரசியல் ஊடுருவல்!
அசாம் மக்களை அச்சுறுத்தும் வங்கதேச ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியாகக் கருதுகிறது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று போர்துவா நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
தேர்தல் வந்துவிட்டாலே வெறி கொண்டு வெறுப்பைக் கக்குகிறார்கள். குஜராத்தில் துவக்கிய அந்த வெறியாட்டத்தை வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக நிகழ்த்துகி றார்கள்.
அதன் அண்மைக்கால வடிவமாக உள்ளது வங்கதேச ஊடுருவல்காரர்கள் என்ற பிரச்சாரம். அதை அசாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019 மூலம் அமல்படுத்தி இஸ்லாமியர் கள் மட்டுமின்றி இலங்கைத் தமிழர்கள் உள்பட பலரும் பாதிக்கப்படும் நிலையை மாநில பாஜக அரசு உருவாக்கிவிட்டது.
இத்தகைய வெறுப்புணர்வு காஷ்மீர் மக்கள் மீது பிற மாநிலங்களில், தலைநகர் தில்லி உள்பட தாக்குதலாக வெளிப்பட்டது. பாஜக ஆளும் மாநி லங்களில் காவல்துறையினர் கண் முன்பாகவும் கூட நடந்து வருகிறது.
சமீபத்தில் கிறிஸ்தவர் கள் மீதான தாக்குதலும் இந்த வெறுப்புக் கும்பல் களால் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து உலக மக்களின் கண்டனத்துக்குள்ளாகியது.
அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் அஞ்சல் சக்மாவும் அவரது சகோதரர் மைக்கேல் சக்மாவும் டேராடூன் அருகே ஒரு கும்பலால், சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறி தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் அஞ்சல் சக்மா 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இந்துத்துவா கும்பலின் வெறியால் இந்திய நாட்டின் மிகச் சிறந்த மாணவர் ஒருவர் பலியாகிய பாதகம் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் இது சகிப்புத்தன்மையற்ற அரசியலால் நிகழ்ந்தது என்றும் திரிபுரா மாநில எதிர்க் கட்சித் தலைவரும் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான ஜிதேந்திர சவுத்ரி கூறி யுள்ளது கவனிக்கத்தக்கது.
வரும் காலம் தேர்தல் காலமாக இருப்பதால் மேற்கு வங்கத்திலும் கூட இந்த கும்பல், வங்கதேச ஊடுருவல் பற்றி இன்னும் வெறித்தனமாகப் பேசவும் வெறியாட்டத்தில் ஈடுபடவும் கூடும்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடி மக்கள் என பலரும் பாஜகவின் - இந்துத்துவா கும்பலின் - வெறுப்பு நடவடிக்கைகளில் பலியா வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வேற்றுமை யில் ஒற்றுமை, மத நல்லிணக்கம் போன்ற இந்தி யாவின் மாண்புகள் காக்கப்பட வேண்டும்.
நாட்டின் அரசியல் களத்தில் ஊடுருவியுள்ள இந்துத்துவா நச்சு அரசியலையும் வெறுப்பு அரசியலையும் முறியடிப்பது மக்களின் முதல் பெரும் கடமையாகும்.













