ஆணையத்தின் ஆணவம்?

 திருப்பரங்குன்றம் மலையில் 100 ஆண்டு மரபுப்படி கார்த்திகை தீபம் ஏற்றம்.தடுப்புகளை உடைத்து எறிந்து இந்துத்துவா அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதால் 144 தடை உத்தரவு அமல்.

இந்து முன்னணி அமைப்பினர் தாக்கியதில் 2 காவலர்கள் மண்டை உடைந்தது.மலை மீது ஏற முயன்றதை தடுத்த போது போலீசாரை ஆபாசமாக பேசி இந்துத்துவா அமைப்பினர் கலவரம்.144 தடை பிறப்பிப்பு.
திருப்பரங்குன்றம் மலை மீது அத்துமீறி ஏற முயன்ற இந்துத்துவா அமைப்பினர் கைது.அரோகரா முழக்கத்துக்கு பதிலாக பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டு வாக்குவாதம்.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது டிட்வா புயல்.வட சென்னை பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை
சென்னை,திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. கனமழை எச்சரிக்கையை அடுத்து நடவடிக்கை.
 புதிய குடியிருப்பு,மனைகளை வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யும் வசதி.தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் விரைவில் தொடக்கம்.
வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை உடனே சமர்பிக்க வேண்டும் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல். 
தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் பா.ம.க. இன்று போராட்டம்.அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு. 
எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் திடீர் சந்திப்பு.ராமதாஸ் தரப்பினர் டெல்லிக்கு சுற்றுலா சென்றிருப்பதாக பாலு விமர்சனம். 
மணப்பாறை அருகே நடைபெற்ற அசைவ விருந்து.சாதி,மத, பேதமின்றி நடைபெற்ற விருந்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு.
2026-ம் ஆண்டு அரசு போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு.பாடத் திட்டத்தை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
தாளவாடி அருகே கிராமங்களுக்குள் யானைகள் புகுந்ததால் மக்கள் அச்சம்.இரவில் இடம் பெயரும் காட்டு யானைகளால் பயிர்கள் சேதமடைவதாக புகார். 
குஜராத்தில் பைக்கில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு.தலைக்கவசம் அணியாமல் அசுர வேகத்தில் சென்றதால் தலை துண்டானது. 
ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.உக்ரைன் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல்.
2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்.டெல்லியில் 5 அடுக்கு உச்சபட்ச பாதுகாப்பு.
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்..

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் நேகுவா கிராமத்தில் சாஸ்திரி ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் அரசாங்க பள்ளிக்கூடம் இயங்கி வந்தது.

. புதிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிக்கூடங்களை இணைக்கும் பணி தொடங்கிய போது. குறிப்பிட்ட இந்த பள்ளிக்கூடம் மட்டும் ஏற்கனவே இணைக்கப்பட்டதாக தகவல் இருந்தது.

 இதை சரி பார்க்கும் நோக்கோடு பள்ளிக்கல்வித்துறை இதைப்பற்றி ஆவணங்களை தேடிய போது தான். இப்படி ஒரு பள்ளிக்கூடமே மத்திய அரசாங்கத்தின் கீழ் இல்லை என்பது தெரியவந்தது. 

போலிப் பள்ளி
கடந்த 12 வருடங்களாக இந்தப் பள்ளிக்கூடத்திற்கு சுமார் 16 கோடி அரசு நிதி , ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, நிலுவை படி என்று அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

யார் இதை நடத்தி வருகிறார்கள் என்று பார்த்த போது தான் ராஜேந்திர சாஸ்திரி என்ற பார்ப்பனர் நடத்தி வந்துள்ளார் மேலும் இவர் தான் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராகவும் பல ஆண்டுகாலம்இருந்துவந்துள்ளார்என்பதும் தெரியவந்துள்ளது.

 பள்ளிக்கூடத்தை பற்றி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்பதற்காக சென்ற அரசு அதிகாரிகளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் இவர்தான் நிவாரி மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் என்பதை அறிந்ததும் அவர்கள் அதிர்ந்து போனார்கள்.

 மேலும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டதாக்க் கூறப்படும் நபர்கள்  ஒருவர் கூட பத்தாம் வகுப்பை கூட படிக்காதவர்கள் என்பதும். பள்ளியின் பெயரைச் சொல்லி சுமார் 16,88,88,920 ரூபாயைஆட்டையைபோட்டதுதெரியவந்துள்ளது.

ஆணையத்தின் ஆணவம்!

கேரளாவில், ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளும் (SIR) உள்ளாட்சித் தேர்தல்களும் எப்படி நடத்த முடியும், கேரள அரசின் நிலையைப் பரிசீலி யுங்கள் என்று  உச்சநீதிமன்றம் கூறியிருப்பது கேரள அரசு நிர்வாகத்தின் இரட்டைச் சுமையை நீதித்துறை கூர்மையாக அங்கீகரித்ததன் வெளிப்பாடு எனக் கொள்ளலாம்.

கேரள மாநில அரசு, எஸ்ஐஆர் பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றுக்கு சுமார் 2.4 லட்சத்திற்கும் அதிகமான அரசு  ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் வாதிட்டது. 

இதில், எஸ்ஐஆர் பணிக்கு மட்டும் 25,668 பயிற்சி பெற்ற அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். இந்த ஊழியர்கள் ஒரே சமயத்தில் இருபெரும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டால், அன்றாட அரசு நிர்வாகம் ‘முட்டுக்கட்டை’ நிலையை அடையும்; எனவே எஸ்ஐஆர் பணியை ஒத்திவைக்க வேண்டும்  என்ற கேரள அரசின் வாதம், முற்றிலும் யதார்த்தமானது. 

குறிப்பாக, பணியில் ஈடுபடுத்தப்படும் வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் (BLO) “அதிகப்படியான வேலை அழுத்தத்தில்” இருப்பதாகக் கூறி விடுப்பு எடுப்பதாகவும், சிலர் உயிர் இழப்பினை சந்திப்பதாகவும் வந்த செய்திகள், அரசின் சேவைகளைப் பாதிக்கும் என்ற கவலை நியாயமானதே.

உச்சநீதிமன்றம், இந்தப் பிரச்சனை குறித்து ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்திருப்பதைக் கவனத்தில் கொண்டது. 

இது அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, நிர்வாகச் சிக்கலின் தீவிரத்தை உணர்த்துகிறது. மேலும், தமிழக அரசு உட்பட கேரளாவின் நிலைப்பாட்டை ஆதரித்தது, இது தனிப்பட்ட மாநிலச் சிக்கல் அல்ல என்பதை நிரூபித்தது.

தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கேரள அரசின் கோரிக்கையை “நியாய மானது, தகுதியானது” என்று ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையத்தை, அதை “சமூக உணர்வுடனும் புறநிலை எதார்த்தத்தின் அடிப்படையிலும்” டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது, இந்தத் தீர்ப்பின் மிகக் கூர்மையான அம்சம். 

வெறும் சட்ட நுணுக்கங்களைப் பார்க்காமல், மக்களின் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வையை நீதிமன்றம் முன்வைத்தது பாராட்டத்தக்கது.

எனவே, தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை நீட்டித்து, கேரளாவின் நிர்வாக இயந்திரம் சீராகச் செயல்பட அவகாசம் அளிக்க வேண்டும் என்பதே அம்மாநில மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்குமா என்ற கேள்வி எழுகிறது. 

தமிழக வழக்கும் கிட்டத்தட்ட இதே போன்றது தான். அந்த வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பொருத்தமானதாக அமை யட்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை