திட்டத்தை ஒழிப்பது எப்படி?
மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரையும் மாற்றி, அதன் தன்மையையும் மாற்றி, மாநில அரசுகள் மீது சுமையை ஏற்றி, ஏழை மக்களுக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 100 நாள் வேலைத் திட்டம் பழைய நிலையிலேயே தொடர வேண்டும் என்பதே அதில் பயனடைந்து வரும் பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மத்திய அரசின் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற்று, மீண்டும் மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி சார்பில் 300க்கும் அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
சென்னை மேடவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றதால் அது பெரிய அளவில் ஊடகங்களில் கவனம் பெற்றது.
அதே நேரத்தில், ஊரகப் பகுதிகளில் நடந்த போராட்டங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தால் வாழ்வுரிமை பெறும் கிராமத்துப் பயனாளிகள், குறிப்பாகப் பெண்கள் அதிகளவில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகாத்மா காந்தி பெயரில் கொண்டு வந்த திட்டம் என்பதால், பா.ஜ.க. அரசு காழ்ப்புணர்வுடன் இந்தத் திட்டத்தை முற்றிலுமாக மாற்றி, அப்படியே முடக்கிப் போட்டுவிட திட்டமிடுகிறது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
அதுதான், கிராமத்துப் பயனாளிகளின் பயமாகவும் உள்ளது. பா.ஜ.க அரசு இதனை அலட்சியப்படுத்தி, 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்குவதற்கான ரகசிய வேலைகளை செய்தால் அதன் விளைவுகளை அது எதிர்கொண்டே ஆகவேண்டும்.
போராட்டத்தில் கிராமத்துப் பெண்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு அலட்சியப்படுத்தினால் எதிர்கொள்ளக்கூடிய விளைவுதான், மாநில அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மீதான அலட்சியமும் ஏற்படுத்தும்.குறிப்பாக, தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டால் செவிலியர்கள் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்றாலும், இவர்களின் பணி நிரந்தரம் குறித்த வாக்குறுதிகளை கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தரப்பு வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரித்தான் அவர்கள் போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை, மத்திய அரசின் பாரபட்சம் ஆகியவற்றை தி.மு.க. அரசு முன்வைத்து, செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டும் நிலையில், போராட்டக்காரர்களைக் காவல்துறையின் கையாளும் முறை, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியைப் போலவேதான் உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகளை காவல்துறை தனது வாகனத்தில் ஏற்றி, சென்னைக்கு வெளியே கொண்டு போய் இறக்கிவிட்டது.
தற்போதும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை காவல்துறை தனது வாகனத்தில் ஏற்றி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இறக்கிவிட, இரவு நேரத்திலும் செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதன்பிறகு அவர்கள் வேறொரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பல இடங்களிலும் செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது. நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்தப் பணியாளர்களும் பார்ப்பது ஒரே விதமான வேலைதான்.
அவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு மேலும், இவர்களுக்கு 20ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவும் ஊதியம் கிடைக்கிறது. அந்த வேறுபாடு நீக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.
ஒப்பந்த செவிலியர்கள் ஆயிரம் பேர் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அமைச்சரின் உறுதிமொழி செவிலியர்களின் போராட்டத்தை தற்காலிக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
செவிலியர்கள் போலவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் தங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தங்கள் போராட்டத் திட்டடங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில், ஆட்சியாளர்களிடம் கோரிக்கையை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்துவது ஒவ்வொரு தேர்தலின் போதும் இயல்பானதுதான்.
எனினும், தி.மு.க. தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை முன்வைத்து, தி.மு.க. ஆட்சியை நோக்கி நடத்தப்படும் போராட்டம் என்பது அரசின் மீதான பொறுப்பை கூடுதலாக்குகிறது.
உயரதிகாரிகளும் காவல்துறையினரும் எல்லா ஆட்சியிலும் தங்களின் நடைமுறைப்படியே செயல்படுவார்கள். ஆட்சியாளர்கள் அப்படி இருக்க முடியாது.
தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள், தங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள், தேர்தல் களத்தில் பக்கபலமாக நின்றவர்கள் என்று எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். அதைவிட முக்கியமானது,
போராடுபவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயம். அதை அலட்சியப்படுத்துவதும் புறக்கணிப்பதம் நியாயமல்ல.
| ||
| 352 ஆம் ஆண்டு இந்த நாளில், போப் லிபேரியஸ் ரோமில் முதல் அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் திருப்பலியைக் கொண்டாடினார் - டிசம்பர் 25 நாட்காட்டியில் நாளாக மாறிய தருணத்தைக் குறிக்கிறது. கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடியது இது முதல் முறை அல்ல: சில கொண்டாட்டங்கள் 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்திருக்கலாம், மேலும் ரோமில் உள்ள தேவாலயம் 336 இல் கிறிஸ்துவின் பிறந்தநாளை அங்கீகரிக்கத் தொடங்கியது. ஆனால் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை சட்டப்பூர்வமாக்கியதுதான் ரோமானிய நாட்காட்டியில் தேவாலயம் தனது இடத்தைப் பெற உதவியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுகளைப் பயன்படுத்தி (தேதி குறித்து சில சர்ச்சைகள் இருந்தபோதிலும்) இயேசுவின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தியதற்கும், புனிதர்கள் மற்றும் தியாகிகளின் பண்டிகை நாட்களின் அடிப்படை தேவாலய நாட்காட்டியை உருவாக்குவதற்கும் - கிறிஸ்துமஸ் பண்டிகையை உறுதிப்படுத்தியதற்கும் பாரம்பரியமாக போப் ஜூலியஸ் I பாராட்டப்படுகிறார். அவர் ஏப்ரல் 352 இல் இறந்தார், எனவே முதல் நாட்காட்டி-குறியிடப்பட்ட "கிறிஸ்துவின் திருப்பலி"யைச் சொல்லும் பெருமை போப் லிபீரியஸுக்குக் கிடைத்தது. டிசம்பர் 25 ஏன்? சில கோட்பாடுகள் உள்ளன. குளிர்கால சங்கிராந்திக்குப் பிறகு இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் வெல்லப்படாத சூரியனின் மறுபிறப்பு மற்றும் டிசம்பர் நடுப்பகுதியில் களியாட்டம், குறும்பு மற்றும் பரிசு வழங்குதலுடன் கூடிய சாட்டர்னாலியா உள்ளிட்ட பிரபலமான பேகன் பண்டிகைகளுடன் இந்த தேதி வரிசையாக உள்ளது. குறியீட்டுவாதம் - மற்றும் உள்ளமைக்கப்பட்ட பார்வையாளர்கள் - எதிர்க்க கடினமாக இருந்திருக்க வேண்டும். ஆரம்பகால கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏராளமான பேகன் எச்சங்களுடன் ஆபாசமான விவகாரங்களாக இருந்தன: குடிப்பது, பாடுவது, விருந்து வைப்பது மற்றும் அநேகமாக ஏராளமான மோசமான முடிவுகள். தேவாலயத்தின் ஒப்புதல் கிறிஸ்துமஸை ஒரு மத விவகாரமாக மாற்றும் பாதையில் அமைத்தது, ஆனால் சில ரவுடி மரபுகள் (வீணடித்தல் மற்றும் தவறான ஆட்சி போன்றவை) தொங்கிக் கொண்டிருந்தன, 1600 களின் நடுப்பகுதியில் இங்கிலாந்து மற்றும் மாசசூசெட்ஸ் இரண்டிலும் கிறிஸ்துமஸ் உண்மையில் தடைசெய்யப்பட்ட இடத்திற்கு. அந்த முதல் அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் திருப்பலி குழப்பத்தை கட்டுப்படுத்தவில்லை, ஆனால் நாட்காட்டியில் தேதியை நிர்ணயிப்பது அதற்கு ஒரு நோக்கத்தையும் ஒரு வழிபாட்டையும் கொடுத்தது. 9 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் ஒரு முக்கிய மத விருந்து நாளாக மாறியது. அலங்கரிக்கப்பட்ட மரங்கள், அட்வென்ட் நாட்காட்டிகள் மற்றும் ஜிஞ்சர்பிரெட் வீடுகள் 1600 களின் முற்பகுதியில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டதால் அது தொடர்ந்து பரிணமித்தது. குடியேறியவர்கள் இவற்றை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தனர், மேலும் 1800 களில் கிறிஸ்துமஸ் இன்று நாம் அறிந்த விடுமுறையை ஒத்திருக்கத் தொடங்கியது. கிறிஸ்துமஸ் முழுமையாகக் கொண்டாடப்பட இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும் - நெருப்பிலிருந்து பிறந்த விடுமுறைக்கு இது பொருத்தமான பளபளப்பான பரிணாம வளர்ச்சி. |


