திருப்பரங்குன்றம் மலையும்

உண்மை நிலையும்!

திருப்பரங்குன்றம் மலையில் ஐந்து முக்கிய அமைப்புகள் உள்ளன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்:

1. மலை அடிவாரத்தில் முருகப்பெருமான் திருக்கோயில் (முதல் படை வீடு)

2. மலையின் நடுப்பகுதியில் தீபத்தூண் (Deepa Thoon / Fire Pillar) எனப்படும் பாரம்பரிய தீப கம்பம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குதான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.

3. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் இந்தியாவின் மாபெரும் நில அளவைப் பணி (Great Trigonometrical Survey of India) நடத்தப்பட்டபோது, மலையில் ஒரு குறியீட்டுக் கல்லை (Survey Stone / Marker Stone) நட்டு வைத்தார்கள்.

4. 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மலை உச்சியில் பிள்ளையார் கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர், முந்தைய தீபத்தூணைவிட உயரமான இடத்தில் இருப்பதால், கார்த்திகை தீபம் இங்கே ஏற்றப்பட்டு வருகிறது.

5. மலையில் தனியாக சிக்கந்தர் தர்கா (Sikkandar Dargah) உள்ளது. இது இஸ்லாமிய புனிதத் தலமாகும்.

இன்று இங்கு இந்து சகோதரர்கள் முருகன் கோயிலிலும் பிள்ளையார் கோயிலிலும் வழிபாடு நடத்துகிறார்கள், கார்த்திகை தீபம் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படுகிறது. முஸ்லிம் சகோதரர்கள் தர்காவில் தொழுகை நடத்துகிறார்கள். நடுத்தரத்தில் உள்ள பழமையான தீபத்தூண் இன்னமும் அப்படியே உள்ளது. பிரிட்டிஷ் அளவைக் கல் தனியாக உள்ளது.

இப்போது சர்ச்சை என்ன?

சங்க பரிவாரத்தைச் சேர்ந்த சிலர், “தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது” என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் காட்டுவது தீபத்தூண் அல்ல – பிரிட்டிஷார் வைத்த அளவைக் கல்லையே “தீபத்தூண்” என்று தவறாகக் காட்டுகிறார்கள். இந்த அளவைக் கல் தர்காவுக்கு மிக அருகில் உள்ளது. அதாவது, தர்கா பகுதியிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.


தீபத்தூணும் அளவைக் கல்லும் இரண்டு வேறு வேறு என்பதற்கு ஆதாரம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். தரப்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புத்தகத்திலேயே இந்த விவரம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தீபத்தூண் வேறு, பிரிட்டிஷார் வைத்த அளவைக் கல் வேறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்கெனவே அனுமதி உள்ளது. தீபம் தொடர்ந்து பல தசாப்தங்களாக இங்கு தான் ஏற்றப்பட்டு வருகிறது. 03.12.2025 அன்றும் இங்கு தான் ஏற்றப்பட்டது

- ஆனால் தர்கா பகுதியில் உள்ள அளவைக் கல்லில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை. அதை அரசு அனுமதிக்கவும் இல்லை.

மதக் கலவரம் தூண்டும் சங்கிகளின் பொய்கள் மற்றும் உண்மை

பொய் 1: “அரசு தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை”  

உண்மை: பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்கெனவே ஏற்றப்பட்டு வருகிறது. 03.12.2025 அன்றும் ஏற்றப்பட்டது

பொய் 2: “நாங்கள் தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற விரும்புகிறோம்”  

 உண்மையான தீபத்தூண் வேறு இடத்தில் உள்ளது. 

தர்காவுக்கு அருகில் உள்ள நில அளவைக் கல்லையே “தீபத்தூண்” என்று பொய்யாகக் காட்டுகிறார்கள்

இதற்கு ஆதாரமாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த புத்தகமே!


திருப்பரங்குன்றம் மலையில் அமைதியும் சகோதரத்துவமும் நிலவுகிறது. இதை சிலர் அரசியலுக்காக சீர்குலைக்க முயல்கிறார்கள். உண்மையை அறிந்து கொண்டால், யாரும் ஏமாற மாட்டார்கள்.



முந்தைய தீர்ப்புகளும்.

சுவாமிநாதன் நிலையும்!

2014 ஆம் ஆண்டு சுப்ரமணியன் என்பவர்,

  • திருப்பரங்குன்றம் மலையில் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றக்கூடாது; தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்; அதுதான் ஆகமப்படி சரியானது எனக் கோரிக்கை வைத்து, மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

  • அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபால், உச்சி பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது ஆகமத்துக்கு புறம்பானது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யக் கோரினார்.

  • ஆனால் உரிய ஆதார, ஆவணங்களை சுப்பிரமணியன் தாக்கல் செய்யாததால் W.P(MD)No.19422 of 2014 வழக்கு 04.12.2014 அன்று தள்ளுபடி ஆனது.

  • அதன்பின் சுப்பிரமணியன், தாக்கல் செய்த WA(MD)No.1524 of 2014 மேல்முறையீட்டு மனு மதுரை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது;

அப்போது,

  • கோயில் நிர்வாகமும், தர்கா நிர்வாகமும், முடிவெடுத்து பல பத்தாண்டுகளாக அமைதியான முறையில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள்.

  • தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகம ஆதாரம் எதுவும் இல்லை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கத் தேவையில்லை.

  • எனவே வழக்கமாக ஏற்றப்படும், உச்சிப் பிள்ளையார் கோவில் தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்றலாம் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மிகத் தீர்க்கமாக 07.12.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆனால் இவை எதுவுமே கவனத்தில் கொள்ளாத சங்கித்தன நிலைதான் இன்றைய கலவர நிலைக்கு காரணம்.
இதற்கு ஜி.ஆர்.சுவாமிநாதனே தீர்ப்பேமூலக் காரணம்.



கன்னிமாரா நூலகம்.!

(05, டிசம்பர் 1896).

சென்னையிலுள்ள கன்னிமரா பொது நூலகம் (Connemara Public Library) வாசகர்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

கன்னிமரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி ராபர்ட் போர்க் கன்னிமரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara) என்பவராவார்.

இது இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்.


இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்கு பெறப்படும்.

1890-ல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.

1948-ம் ஆண்டு மதராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன் முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிர்வகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று.

1981-ம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது. நாட்டில் மொத்தம் நான்கு களஞ்சிய நூலகங்கள் உள்ளன.

1973 ம் ஆண்டு இந்த நூலக வளாகத்தில் புதிய விரிவாக்க கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை