தேர்தல் ஊழலில் கில்லி

 வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவுகிறது.

 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 24, 25 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 26ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஊழலி்ல் கில்லி

எதிர்க் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிய நிதி பலம்: காங்கிரஸை விட 12 மடங்கு அதிகம்; பா.ஜ.கவின் வருவாய் சுமார் 50% உயர்வு


தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகும், 2024-25 நிதியாண்டில் பாஜகவின் நன்கொடை வருவாய் 53% உயர்ந்து ரூ.6,088 கோடியைத் எட்டியுள்ளது.


2024 பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் முறையை அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது. இருப்பினும், இது பா.ஜ.கவின் நிதி சேகரிப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


2024-25 நிதியாண்டில் பா.ஜ.க பெற்ற நன்கொடைகள் கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகரித்துள்ளன.

2024-25 நிதியாண்டில், பா.ஜ.க பெற்ற மொத்த நன்கொடை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.


இது 2023-24 நிதியாண்டில் பெறப்பட்ட ரூ.3,967 கோடியுடன் ஒப்பிடுகையில் 53% அதிகம் ஆகும். காங்கிரஸ் கட்சி அதே ஆண்டில் ரூ.522.13 கோடி மட்டுமே பெற்றுள்ளது.


காங்கிரஸை விட பா.ஜ.க சுமார் 12 மடங்கு அதிக நிதியைக் கொண்டுள்ளது.


12 முக்கிய எதிர்க்கட்சிகளின் மொத்த நன்கொடை ரூ.1,343 கோடி மட்டுமே. இது பா.ஜ.க பெற்ற தொகையில் வெறும் 4-ல் ஒரு பங்குதான். பா.ஜ.க தாக்கல் செய்த 162 பக்க அறிக்கையின்படி, நிதியின் பெரும்பகுதி பல்வேறு வழிகளில் கிடைத்துள்ளது.


சுமார் ரூ.3,744 கோடி (மொத்த நிதியில் 61%) தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் வந்துள்ளது. மீதமுள்ள ரூ.2,344 கோடி நேரடியாக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கிடைத்துள்ளது.


முக்கிய நன்கொடையாளர்கள் (2024-25) - பா.ஜ.கவிற்கு அதிக நிதி வழங்கிய முதல் 30 நிறுவனங்கள்

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா: ரூ.100 கோடி

ருங்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ.95 கோடி

வேதாந்தா லிமிடெட்: ரூ.67 கோடி

மேக்ரோடெக் டெவலப்பர்ஸ்: ரூ.65 கோடி

ஐ.டி.சி (ITC) குழுமம்: சுமார் ரூ.72.5 கோடி (இரு நிறுவனங்கள் மூலம்)


2017-18ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை, அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி வழங்க வழிவகை செய்தது. இதில் சுமார் ரூ.16,000 கோடிக்கும் அதிகமான நிதி கட்சிகளுக்குச் சென்றது, இதில் பெரும்பகுதி பாஜகவிற்கே கிடைத்தது.


தற்போது பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டாலும், காசோலைகள், டிமாண்ட் டிராஃப்ட் (DD) மற்றும் வங்கிப் பரிமாற்றங்கள் மூலம் நிறுவனங்கள் நிதி வழங்கலாம்.


ஆனால், ரூ.20,000-க்கு மேல் நிதி வழங்கும் அனைவரது விவரங்களையும் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதியாகும்.


கடந்த ஆறு ஆண்டுகளில் (2019-20 முதல் தற்போது வரை) பா.ஜ.க பெற்ற மிக உயர்ந்தபட்ச நிதி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது

வெளிநாட்டவருக்கும்

மருத்துவ காப்பீடு!

குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நாளை முதல் மருத்துவக் காப்பீடு கட்டாயமாக்கப்பட்ட

கவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு மருத்துவக் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை நாளை (டிச.23) முதல் அமலுக்கு வரவுள்ளது. அந்நாட்டின் அமைச்சர் டாக்டர் அகமது அல் அவதி இந்த விதிமுறையை வெளியிட்டுள்ளார்.


புதிய விதிமுறைகளின் கீழ் வசிப்பிடத்திற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்கள், வணிக அல்லது தொழில்துறை நடவடிக்கைகள், படிப்பு, வெளிநாட்டு முதலீடு, தற்காலிக ஒப்பந்தம், அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் எண்ணெய் துறையில் தற்காலிகமாக வேலை செய்பவர்கள் உட்பட எட்டு வகையான விசா வைத்திருப்பவர்கள் மருத்துவ காப்பீட்டிற்காக 5 தினார் செலுத்த வேண்டும். மேலும், அரசாங்க வருகைகள், வணிக வருகைகள், குடும்ப வருகைகள், தனியார் வருகைகள், மருத்துவ சிகிச்சை வருகைகள், சுற்றுலா வருகைகள் உள்ளிட்ட வருகை விசாவிற்கும் (Vist visa)  இந்த 5 தினார் கட்டணம் பொருந்தும். 


அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மாணவர்கள், சொத்து உரிமையாளர்கள், இமாம்கள் உட்பட பத்து பிரிவுகளுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை 100 தினார்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டம் 18-வது பிரிவின் கீழ் விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், ஒட்டகம் மற்றும் செம்மறி ஆடு மேய்ப்பவர்கள் மற்றும் பால் நிறுவனங்களின் ஊழியர்கள் 10 தினார் செலுத்துவார்கள்.


குவைத் குடிமக்களை மணர்ந்த வெளிநாட்டு பெண்கள், விதவை அல்லது விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள், குவைத் குடிமக்களின் வெளிநாட்டு குழந்தைகள், குவைத் குடிமக்களின் பெற்றோர் ஆகியோருக்கு மருத்துவ காப்பீட்டு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை