இந்திய நாணயம்.?
லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே உள்ள கவலைகளைத் தணிக்கும் வகையில், 8வது மத்திய ஊதியக் குழு ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை பரிந்துரைக்கும் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், ஒன்றிய அரசு உடனடியாக 50℅டிஏ-வை ஊதியத்துடன் இணைப்பதை அத்தகைய திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை என்று கூறியுள்ளது.
இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதம், 2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 8.2% ஆக இருந்தது என்று இந்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 ரூபாய் என்ற நிலையை அடையவுள்ளது.
திங்கள் கிழமை, டிசம்பர் 1, 2025 அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு லேசான சரிவுடன் ரூ. 89.63 என்ற நிலையில் இருந்தது.
கடந்த நிதியாண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் குறைந்தபட்ச மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.84.22 ஆக இருந்தது. அதே நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 2021இல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.72ஐ ஒட்டியிருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் திருப்திகரமானதாகவும், உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது 'சிறப்பாகவும்' இருந்தபோதிலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்தியா தனது மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறியபோது, சர்வதேச நாணய நிதியம் தனது சமீபத்திய அறிக்கையில் இந்தியாவின் ஜிடிபி மற்றும் தேசிய கணக்குகளின் தரவுகளுடைய தரத்திற்கு 'சி' தரவரிசையை வழங்கி, இந்திய தரவுகளின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியது.
சர்வதேச நாணய நிதியம் தரவுகளை நான்கு வகைகளாகப் பிரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 'சி' தரவரிசை என்பது, தரவுகளில் சில குறைபாடுகள் உள்ளன, அவை கண்காணிப்புச் செயல்முறையை ஓரளவு பாதிக்கின்றன என்பதைக் குறிக்கும்.
இதுகுறித்து ஐ.எம்.எஃப், நவம்பர் 26 அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கு 'சி' தரவரிசை வழங்கியது. 8.2% வளர்ச்சிக் கணக்கு வந்த பிறகும், எதிர்பார்க்கப்பட்ட உற்சாகம் பங்குச் சந்தையில் காணப்படவில்லை என்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அதேநேரம், ரூபாயின் பலவீனமும் தொடர்ந்தது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2025-26 நிதியாண்டில் 6.19% குறைந்துள்ளது. அதே நேரம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த வீழ்ச்சி 1.35% ஆக இருந்தது.
சமீபத்திய நாட்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிக வேகமாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக ரூபாய் ஆசியாவின் மிகவும் பலவீனமான நாணயமாக மாறியுள்ளது.
ரூபாயின் பலவீனம் சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை குறைந்து வருவதைக் காட்டுவதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார பேராசியர் அருண் குமார் கூறியுள்ளார்.
ரூபாயின் வீழ்ச்சி இந்தியாவின் சர்வதேச நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நிலைமையின் ஓர் அறிகுறி. இது ஏற்றுமதி-இறக்குமதி, மூலதன வரவு மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கைகளால் பாதிக்கப்படுகிறது. டிரம்பின் அதிகபட்ச வரிகள் நமது ஏற்றுமதியைப் பாதித்துள்ளன. இதனால் நடப்புக் கணக்கு மோசமடைந்து, அந்நிய நேரடி முதலீடு வெளியேறுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து ரூபாயை பலவீனமடையச் செய்துள்ளன..ரூபாயின் பலவீனம் இந்தியாவில் உள்நாட்டுச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் அருண் குமார் கூறுகிறார். "இது கவலைக்குரிய விஷயம். ஏனெனில் ரூபாய் வீழ்ச்சியடைந்தால் நமது ஏற்றுமதி அதிகரிக்கும், ஆனால் இறக்குமதி விலை உயரும், இதனால் பணவீக்கம் உயரலாம்."
"இந்தியாவின் மூலதனம், அந்நிய நேரடி முதலீடு அல்லது அந்நிய நிறுவன முதலீடு போன்றவற்றில் இருந்தால், அதன் தாக்கம் நமது பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையில் இருக்கும்.
உற்பத்தி மற்றும் செலவு முறைகளில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் உள்ளன. மேலும், மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒட்டுமொத்த தரவு 2019க்குப் பிறகு கிடைக்கவில்லை. இந்தக் காரணங்களால் நமது ஜிடிபி புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை பலவீனமாக உள்ளது. எனவே, 8.2% வளர்ச்சியை பலர் உலக நாணய நிதியமும் ஏற்கவில்லை..





