முறியடிக்கப் பட்டது!
திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் கடும் அமளி: திமுக - பாஜ எம்.பி.க்கள் காரசார வாக்குவாதம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
தண்டவாளத்தின் நடுவில் ஆட்டுக்கல் கிடந்ததால் பரபரப்பு; கேரளாவில் ரயிலை கவிழ்க்க சதியா?: போலீசார் விசாரணை.
டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்களை இன்று அனுப்பி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 3 ஆம் தேதியன்று மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
‘2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது, இலட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன் தரிசனம்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது ‘தினத்தந்தி’.
‘திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்’ என்று படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது ‘தினமணி’. 1,024 கண்காணிப்பு கேமராக்கள் இருந்ததாகவும், 5 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் அந்த நாளிதழ் சொல்கிறது.
‘திருவண்ணாமலையில் மஹா தீபம் – விண்ணதிர பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம்’ என்று தலைப்பு போட்டுள்ளது ‘தினமலர்’. 15 ஆயிரம் காவலர்கள் இருந்ததாகவும், முதல் முறையாக 500ஏஐ கேமராக்களும், 560 சாதாரண கேமராக்களுக்கும் வைக்கப்பட்டு இருந்ததாகவும், 26 பெரிய திரைகள் நகருக்குள் வைக்கப்பட்டதாகவும் சொல்கிறது ‘தினமலர்’.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் தலைப்புச் செய்தியே திருவண்ணாமலைதான். ‘மலை உச்சியில் மகா தீபம் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம், விடிய விடிய மழையில் கிரிவலம்’ என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். 3,500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டதாகவும், மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் என்றும் சொல்கிறது ‘இந்து தமிழ் திசை’.
இன்னொரு திசையில் இருக்கிறது, ‘திருப்பரங்குன்றம்’. அங்கே திட்டமிட்டுக் கலவரத்தை உருவாக்கி இருக்கிறது பா.ஜ.க. ஆதரவுக் கும்பல்.
திருப்பரங்குன்றத்திலும் அமைதியாக கார்த்திகைத் திருவிழா நடைபெற்றது. மலை அடிவாரத்தில் முருகப் பெருமான் கோவில் இருக்கிறது. மலையின் நடுப்பகுதியில் பாரம்பர்ய தீபக் கம்பம் இருக்கிறது. அங்குதான் பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
19ஆம் நூற்றாண்டில் மலை உச்சியில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முந்தைய தூணை விட இது பெரிதாக இருப்பதால் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு விட்டது.

கோவில்களைக் கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.க. கும்பலுக்கு இது போல் அமைதியாக விழாக்கள் நடப்பதில் விருப்பம் இல்லை. கோபமாக இருக்கிறது. கோவில்களைத் தங்களது விருப்பத்துக்கு சூறையாட நினைக்கிறார்கள். அதனைத்தான் பல இடங்களில் நடத்த நினைக்கிறார்கள்.
‘தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது’ என்ற வதந்தியை பல காலமாகப் பரப்பி வருகிறார்கள். உண்மையில் இவர்கள் சொல்வது தீபத் தூண் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நில அளவைக்காக வைத்த தூணைத்தான் ‘தீபத் தூண்’ என்கிறார்கள்.
மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்க்காவுக்கும் முருகர் கோவிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த தர்க்காவுக்கு அருகில்தான் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து நில அளவைத் தூண் இருக்கிறது.
தர்க்காவுக்கு அருகில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும், அதனால் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்.
பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் கடந்த 3ஆம் தேதியன்று ஏற்றப்பட்டு விட்டது. ‘அரசு, தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை’ என்பது மிகப்பெரிய பொய்யாகும். தீபம் ஏற்றப்பட்டு விட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்க்கா உள்ளதால் மட்டுமே கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கும்பல் பயன்படுத்துகிறது. இந்தப் பிரச்சினை பல காலமாக நடக்கிறது. குறிப்பாகச் சொன்னால் 1994 முதல் இதனை ஒரு பிரச்சினை ஆக்கி வருகிறது வகுப்புவாத அமைப்புகள்.
கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. பல்லாண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் என்று கேட்பதுதான் பிரச்சினையாக உள்ளது.

1996ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘’உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் இடம்தான் பாரம்பர்யமானது’’ என்று சொல்லப்பட்டு உள்ளது. 2014 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற அமர்விடம் கேட்ட ஆதாரங்களைத் தராததால் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
7.12.2017 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டதோ, அதன்படிதான் அரசு செயல்பட்டு வருகிறது. ‘தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகம ஆதாரம் ஏதும் இல்லை. அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கத் தேவையில்லை’ என்று தீர்ப்பு வந்தது. முந்தைய அமர்வு நீதிபதிகளின் தீர்ப்பை நீதிபதியே மதிக்காததை எதன் சீர்குலைவு என்று சொல்வது?
திருவண்ணாமலையில் இலட்சக்கணக்கானவர் அமைதியாக கார்த்திகை தீபம் கண்டு வணங்கினார்கள். அதேநேரத்தில் திருப்பரங்குன்றத்தின் அமைதியைக் கெடுத்ததற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?
அது யார் செய்த குற்றம் என்பதை பக்தர்கள் அறிய மாட்டார்களா?
கார்த்திகை தீபத் திருவிழாவை திருவண்ணாமலையில் அமைதியாக நடத்தியது தி.மு.க. அரசு. திருப்பரங்குன்றத்தைக் கலவரப் பூமியாக மாற்றியது பா.ஜ.க. கும்பல். திருவண்ணாமலையில் இந்தளவுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தவர்கள், திருப்பரங்குன்றத்தில் எதற்காகத் தடுக்கப் போகிறார்கள் என்பதை பக்தர்கள் சீர்தூக்கிப் பார்க்க மாட்டார்களா?
பக்தர்களுக்கு இந்த இரண்டு காட்சிகளும் உண்மையை உணர்த்தும்.
மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ கட்டவில்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் கிடையாது என்று சொல்லி விட்டார்கள். அதை எல்லாம் மறைக்கப் போடும் நாடகங்கள்தான் இவை என்பதை உண்மையான பக்தர்கள் அறிவார்கள்.













