மனச் சோர்வா....?

உங்கள் மூளை சோர்வாக காரணங்களைக் கண்டறியும் அறிவியல்!

மனச் சோர்வு(Mental Fatigue) என்பது நம் மூளை நீண்ட நேரம் கவனத்தை செலுத்திய பின் அல்லது அதிகமான சிந்தனைப் பணிகளை செய்த பின் ஏற்படும் ஆழமான சோர்வு உணர்வு.


இது சாதாரணமாகவே யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பள்ளியில் படித்து முடிந்த பிறகு, அலுவலகத்தில் எண்கள் அல்லது தகவல்களை நீண்ட நேரம் பார்த்த பிறகு, அல்லது ஒரு முழு நாளும் முடிவுகள் எடுக்கும் பொழுது

சோர்வடைந்த மூளை கவனத்தைப் பிடிக்க முடியாததால், நினைவாற்றல் குறைகிறது, எளிய விஷயங்களுக்கே மனதில் குழப்பம் ஏற்படும். தவறுகள் அதிகம் நேரிடலாம். இது உடல் சோர்வு போலத்தான், ஆனால் மனம் மற்றும் மூளை சார்ந்தது.

மனச் சோர்வு சாதாரணமான மனிதர்களுக்கே ஏற்படும் பிரச்சனை அல்ல; இது பல நோய்களோடும் இணைக்கப்படுகிறது.


குறிப்பாக நீண்டகால COVID, ME/CFS, மனச்சோர்வு நோய்கள், Multiple Sclerosis, PTSD போன்ற நிலைகளில் இது மிகவும் ஆழமாகவும் நீடித்ததாகவும் இருக்கும்.


மூளை எப்போது அதிகமான கவனம், கணக்கீடு, உணர்ச்சி கட்டுப்பாடு, முடிவெடுக்கும் பணிகளை செய்கிறதோ அப்போது அதிக எரிசக்தி பயன்படுத்தும்.


இந்த அதிக நுண்ணறிவு (cognitive load) காரணமாக மூளையின் சில பகுதிகள் சக்தியை விரைவாக சிதைக்கும். இதனால் சோர்வு ஏற்படுகிறது.


மனச் சோர்வின் முக்கிய காரணிகளில் ஒன்று மூளையின் செயல்பாட்டு மாற்றம். குறிப்பிட்ட நியூரோ ரசாயனங்கள், உதாரணம்: குளூட்டமேட், அடெனோசின், BDNF போன்றவை, அதிகமாகி அல்லது குறைந்து, மூளையின் சீரான செயல்பாட்டை பாதிக்கின்றன.


இந்த மாற்றங்கள்:

நினைவுத்திறன் குறைவு,

கவனம் சிதறல்,

முடிவெடுக்கும் திறன் குறைவு,

மன உளைச்சல் போன்ற பிரச்சனைகளைத் தூண்டுகின்றன.


மூளை நீண்ட நேரம் வேலை செய்தால், செயற்கை கழிவு பொருட்கள் அதிகரிக்கின்றன. அவை உடனே நீங்கவில்லை என்றால், மூளையின் பகுதிகளை சிதைக்கும் அபாயம் உள்ளது. இது தசை சோர்வுக்கு ஒப்பானது.


உடல் ஓய்வு கேட்கும் போல, மூளை “இங்கே கொஞ்சம் நிறுத்து” என்று நமக்கு Signal தருகிறது.


மனச் சோர்வு அதிகமானபோது, மூளை எப்போதும் எளிதான வேலைதான் தேர்வு செய்ய முயலும். இதன் காரணம் மூளை முயற்சியின் “செலவு” அதிகமானது என்று உணர்வது. சற்றே ஓய்வு விரும்பும் மனநிலை மேலோங்குகிறது.

சமீபத்திய ஆராய்ச்சிகள் மனச் சோர்வை ஏற்படுத்தும் முக்கிய மூளை பகுதிகளை கண்டறிந்துள்ளன.


Right Insula — உணர்வு, உடல்நிலை உணர்வு, சோர்வு உணர்வுகளை கட்டுப்படுத்தும் பகுதி

Dorsolateral Prefrontal Cortex — நினைவாற்றல், ஆராய்ச்சி திறன், முடிவெடுக்கும் திறன்

இந்த இரண்டு பகுதிகளின் செயல்பாடு அதிகமானால், நபர் சோர்வு அதிகம் உணர்கிறார்.


மேலும், சோர்வு அதிகமாகும்போது, ஊக்கமில்லாத சூழலிலும் முயற்சி செய்ய விருப்பம் குறைகிறது.



Long COVID உடைய மக்கள் பெரும்பாலும் “brain fog” என்ற பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். இது ஒரு வகையான ஆழமான மன மந்தமான நிலை.


அதில் காணப்படும் பிரச்சனைகள்:

கவனம் பறந்து போதல்

எளிய விஷயங்களைக் கூட நினைவில் வைக்க சிரமம்

புத்தகம் படித்தால் உடனே சோர்வு

மொழியை சரியாகப் பயன்படுத்த சிரமம்

குழப்பம், மெதுவான சிந்தனை

நோயிலிருந்து மீண்ட ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அறிகுறிகள் தொடரக்கூடும். இது வெறும் “நினைவு குறைவு” அல்ல; உண்மையில் மூளையின் செயல்பாடு மாறுகிறது.


ஆய்வுகள் சொல்லுவது:

நினைவுத் திறனை நிர்வகிக்கும் பகுதிகளில் செயல்பாடு குறைவு

மூளையின் பல பகுதிகளுக்கிடையேயான தகவல் தொடர்பு குறைவு

சதைபோல் இருக்கும் மூளைப் பகுதி (cortex) மெல்லியதாகும்


கவன கட்டுப்பாட்டு பகுதிகள் சரளமாக வேலை செய்யாது

இதனால், சிறிய வேலைகளும் பெரிய சவாலாக உணரப்படும்; உடல் சோர்வும் மனச் சோர்வும் ஒன்றுக்கொன்று சேர்த்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Long COVID அனுபவிக்கும் பலர், கவலை, திடீர் பயம், தளர்ச்சி, மனச்சோர்வு

போன்ற உணர்வுகளுடன் cognitive fatigue அனுபவிக்கிறார்கள். அதனால், மனநிலை மற்றும் மூளை செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று ஆழமாக இணைந்துள்ளன என்பது தெரிகிறது. உடல் மற்றும் மனச் சோர்வும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று அதிகரிக்கும். உடல் சோர்வானால் மனமும் சோரும்; மனம் சோர்வானால் உடலும் DOWN ஆகும்.


மனச் சோர்வு பொதுவாக இரண்டு முறைகளில் அளக்கப்பட்டது:


நபர் தானாகச் சொல்வது.
இது எப்போதும் நம்பகமானதல்ல, ஏனென்றால் சிலர் சோர்வை உணராமல் வேலை தொடரலாம்; சிலர் சிறிய சோர்வையே பெரிதாக உணரலாம்.


நினைவுத்திறன் சோதனை, கவன சோதனை போன்றவை.
ஆனால், செய்ய வேண்டும் என்ற motivation இல்லை என்றால் செயல்திறன் குறையும் , இது உண்மையான சோர்வு அல்ல.

இப்போது மூளை ஸ்கான், functional MRI போன்ற உயிரியல் அளவீடுகள் mental fatigue-ஐ சரியாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன.


அறிவியலாளர்கள் தற்போது முயற்சி செய்து வருவது:

மனச் சோர்வின் நியூரோ செயல்முறை முழுவதும் கண்டறிதல்

Long COVID மற்றும் ME/CFS போன்ற நோய்களில் சோர்வு ஏன் அதிகம் என்பதைப் புரிதல்

சிகிச்சையாக மருந்துகள், மூளை ஊக்கமூட்டும் தொழில்நுட்பங்கள், நுண்ணறிவு பயிற்சி ஆகியவற்றை உருவாக்குதல்


தனிநபர் யாருக்கு அதிக சோர்வு வரும், யாருக்கு குறைவு என்பதையும் முன்கூட்டியே கணிக்க முடியும் பயோமார்க்கர்கள் கண்டுபிடித்தல்.


பலருக்கு மனச் சோர்வு காலப்போக்கில் குறையலாம். ஆனால் சிலருக்கு இது நீண்டகால பிரச்சனையாக மாறும்.

மனச் சோர்வு என்பது ஒரு சாதாரண உணர்ச்சி அல்ல; இது மூளையின் செயல் மாற்றத்தால் உருவாகும் உடலியல் நிலை. தற்போதைய ஆய்வுகள் இதன் காரணிகளையும் செயன்முறைகளையும் தெளிவாக விளக்கத் தொடங்கி உள்ளன.


Long COVID மற்றும் ME/CFS போன்ற நோய்களுக்கு இது மிக முக்கியமான அறிகுறி. எதிர்காலத்தில் சிறந்த சிகிச்சைகள், துல்லியமான பரிசோதனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.


இதை புரிந்துகொள்வது நம் தினசரி வாழ்க்கையிலும், பொதுவாக உலகளாவிய ஆரோக்கியத்திலும் மிக அவசியமானது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை