“உலகம் அழியப்போகிறது
சங்கிகள் கையில்
சாகித்ய அகாடமி வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக, இந்த ஆண்டு எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்ட விருது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால், இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட வேண்டிய விருது இறுதி செய்யப்பட்டு, டிசம்பர் 18-ல் அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஒன்றிய அரசு அதனை தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது போல, தற்போது சாகித்ய அகாடமி போன்ற சுதந்திரமான கலாசார அமைப்பிலும் மோடியின் ஒன்றிய அரசு தலையிடுவதாக விமர்சிக்கப்படுகிறது.
கலாசார அமைச்சகத்துடன் ஆலோசிக்காமல் விருதுகளை அறிவிக்கக்கூடாது என்ற புதிய நிபந்தனை, படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் என எழுத்தாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இச்சூழலில், கேரளா அரசு பின்பற்றுவது போல, தமிழ்நாடு அரசும் "தமிழ் சாகித்ய அகாடமி" என்ற பெயரில் சுதந்திரமான அமைப்பை உருவாக்கி, தகுதியான படைப்பாளிகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஷங்கர் ராம சுப்பிரமணியன், கவின் மலர் போன்ற பலபடைப்பாளிகள் உள்ளிட்டோர் முன்வைத்துள்ளனர்.
படைப்புகளையே பார்க்கவேண்டும் அரசியலில் இடதுவலது என்று பார்ப்பது தவறு,
மேலும் இடதுசாரிகளா்தான் மக்களுக்கான இலக்கீயம் உருவாகும் என்றும் குறிப்பிட்.டனர்.
பாஜக மாஜி எம்எல்ஏவின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை : பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிபிஐயிடம் நேரில் புகார் மனு
தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம்
இம்ரான் கானின் ஆதரவாளரால் பாக். ராணுவ தளபதிக்கு கொலை மிரட்டல்: இங்கிலாந்து தூதருக்கு சம்மன் அனுப்பி கண்டனம்.
மூத்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா(80) மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவிருந்த சிஏ (CA) தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ஆதவன்(55). இவர் விவசாயம் செய்து வரும் நிலையில், அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் அதிக அளவு கருங்கற்கள் இருந்துள்ளன.
இதனை சுத்தம் செய்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் கடந்த (டிச 22) ஆம் தேதி கருங்கற்களை அப்புறப்படுத்தியுள்ளார்.
அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது திடீரென அந்த நிலத்தில் பழங்காலத்து சிறிய அளவிலான குடுவை ஒன்று கிடைத்துள்ளது.
அதனைப் பார்த்த நிலத்தின் உரிமையாளர் ஆதவன் குடுவையை வியப்புடன் பார்த்துள்ளார். அதில் சிறிய அளவிலான பழங்காலத்து தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் நேற்று (டிச27) கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கந்திலி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்...
“உலகம்
அழியப்போகிறது
கடந்த 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லப்பட்ட கதையை தொடர்ந்து உலகில் உள்ள பல்வேறு தீர்க்கதரிசிகள் என சொல்லப்படும் நபர்கள், ஒவ்வொரு முறையும் உலகம் அழியப்போகிறது என்ற கதையை ஒவ்வொரு வருடமும் சொல்லிக்கொண்டுதான் வருகின்றனர்.
எபோ நோவா யார்?
அந்த வகையில், கானாவைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Nova) என்ற நபர், சமீப காலமாக தன்னை ஒரு “தீர்க்கதரிசி” (Prophet) என அறிவித்துக் கொண்டு பல்வேறு பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து, சமூக ஊடகங்கள், ஆன்மீக கூட்டங்கள் மற்றும் நேரலை உரைகளின் மூலம் அவர் பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைந்தார்.
குறிப்பாக, அவரது பேச்சுகள் பெரும்பாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையிலும், உலக அழிவை முன்னறிவிப்பதாகவும் அமைந்திருந்தன.”
தொடர்ந்து, எபோ நோவாவின் முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய கூற்று, “உலகம் முழுவதும் விரைவில் பெரும் வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கும்” என்பதாகும். இது கடவுளிடமிருந்து தனக்கு நேரடியாக கிடைத்த செய்தி எனவும், அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கூற்று, உலக மக்களிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

பண வசூல்
மேலும் அவர், உலகம் நீருக்குள் மூழ்கியதும் தான் கட்டப்போகும் கப்பலில் என்னுடன் வருபவர்கள் மட்டும் தப்பி உயிர் பிழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு நம்பிய பலரும் தங்கள் சொத்துகளை விற்று அவருக்கு கப்பல் கட்ட பணத்தை அனுப்பி வந்துள்ளனர். மேலும், நைஜீரியா (Nigeria), கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு, கானாவில் உள்ள அந்தப் பேழை பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.
ஆனால் டிசம்பர் 25 அன்று அவர் கணித்தபடி வெள்ளம் ஏற்படாததைத் தொடர்ந்து, உலகம் அழிவதை முன்னிட்டு தீக்கத்தரிசி எபோ நோவா கடவுளிடம் தொடர்ந்து பிராத்தனை செய்ததாகவும், அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட கடவுள், தற்போது உலகம் அழிவதை தள்ளிப்போட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பிற்காகத் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு வந்த அந்த மக்கள், தற்போது எபோ நோவாவின் பேழை அமைந்துள்ள இடத்திலேயே தங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களை எபோ நோவா ஏமாற்றுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தனது ஆதரவாளர்கள் கொடுத்த பணத்தில் அவர் விலையுயர்ந்த பென்ஸ் வாங்கியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.தற்போது அந்தப் பேழை அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியுள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் நிபுணர்கள், “உலகம் முழுவதும் திடீரென தண்ணீரில் மூழ்கும்” என்ற கூற்றிற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
இயற்கை பேரழிவுகள் பற்றிய தகவல்களை அறிவியல் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், பொய்யான தீர்க்கதரிசனங்களை நம்பக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மேலும் எபோ நோவா விவகாரம், ஆன்மீகம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம் என்பதையும், பயத்தையும் நம்பிக்கையையும் பயன்படுத்தி எவ்வாறு மக்களை ஏமாற்ற முடியும் என்பதற்கான ஒரு எச்சரிக்கை உதாரணமாக உள்ளது.
மேலும், பொதுமக்கள் எந்தவொரு அச்சமூட்டும் தகவலையும் உடனே நம்பாமல், சிந்தித்து, ஆதாரங்களை சரிபார்த்து செயல்பட வேண்டியது மிக அவசியம் என்பதை இவை உணர்த்துகிறது.




