150 ஆவது பொய்!

பழனிசாமியின் 150 ஆவது பொய்!

நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 ஆவது நாள் ஆக்குவோம் என்று சொல்லி இருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி. அவர் சொல்லும் 158 ஆவது பொய்யாக இதைச் சொல்லலாம்.

‘“நூறு நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தவறான தகவலை முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார். 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு 125 நாளாக உயர்த்தி இருக்கிறது. 

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். ஊதியம் உயர்த்தப்பட்டு தடையில்லாமல் பணிகள் வழங்கப்படும்” என்று சொல்லி இருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

குடியுரிமைச் சட்டத்தால் எந்தச் சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள், மூன்று வேளாண் சட்டங்களால் எந்த விவசாயியும் பாதிக்கப்பட மாட்டார் என்று பா.ஜ.க.வின் அனைத்து சதித்திட்டங்களுக்கும் முட்டுக் கொடுத்த பழனிசாமி, இப்போது நூறு நாள் வேலைத் திட்டத்துக்கும் முட்டுக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்.

அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கியது மட்டும்தான் தவறு என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுக் கழன்று கொண்ட பழனிசாமி, இப்போது ஒட்டு மொத்தமாக ஒன்றிய அரசின் திட்டத்தை ஆதரிக்கத் தொடங்கி விட்டார். 

ரெய்டுகளுக்குப் பயந்தும், தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ளவும் பழனிசாமி படும் பாடு பரிதாபமாக இருக்கிறது. அவரது அசிங்க அரசியல் ஒவ்வொரு விவகாரத்திலும் அம்பலப்பட்டு நிற்கிறது.

2021 நவம்பர் மாதம், பிரதமர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில், ‘2021-2022 ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15.09.2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

 அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்கப்படாத காரணத்தால், 1-11-2021 அன்றுள்ளவாறு 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது” என்பதை அப்போது சொல்லி இருந்தார் முதலமைச்சர். அதன் பிறகுதான் நிதியை விடுவித்தார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 4,034 கோடி ரூபாயை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுக்காததைக் கண்டித்து தமிழ்நாடு முழுக்க மக்கள்திரள் ஆர்ப்பாட்டங்களை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தி.மு.க. நடத்தியது பழனிசாமிக்குத் தெரியுமா? 100 நாள்களுக்கான பணத்தையே பா.ஜ.க. தரவில்லை. அந்த பா.ஜ.க. 125 நாள் வேலை தரப் போகிறதாம். பழனிசாமி, 150 நாள் வேலை தரப்போகிறாராம். 'கேட்பவன் கேனை என்றால் கேரளாவில் எருமை ஏரோப்ளேன் ஓட்டுதாம்' என்று ஒரு பழமொழி உண்டு. அப்படித்தான் இருக்கிறது பழனிசாமியார் பேச்சும்.

ஒன்றிய அரசு 60 விழுக்காடு மாநிலங்கள் 40 விழுக்காடு என நிதிப் பகிர்வு முறை என்று மாற்றப்பட்டு இருப்பது பழனிசாமிக்குத் தெரியுமா? ஒன்றிய அரசின் திட்டமானது மாநில அரசின் தலையில் 48 விழுக்காடு கட்டப்பட்டுள்ளது அவரது கண்ணுக்குத் தெரிகிறதா இல்லையா?

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலைத் திட்டத்தில் 30 முதல் 48நாட்கள் வேலைகள் தரப்பட்டது என்பது ‘நானும் ஒரு விவசாயி' என்று சொல்லிக்கொள்ளும் பழனிசாமிக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் ஏதாவது கிராமத்துக்குச் சென்று அவரே கேட்கட்டும்! அவர்களிடம் போய் 158 நாள் வேலை தரப் போகிறேன் என்று சொல்லட்டும். அப்போது மக்கள் சொல்லும் பதில், அவர் இதுவரை வாழ்நாளில் கேட்காத பதிலாக இருக்கும்.

2021-ஆம் ஆண்டு முதல் 7.6 கோடி தொழிலாளர்களின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப்பணி அட்டைகள் நீக்கப்பட்டன. இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது. இதனை பழனிசாமியால் தடுக்க முடியுமா? தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும், அனைவர் உரிமைகளையும் காவு கொடுத்த முதுகெலும்பு இல்லாத பழனிசாமியால் இது முடியுமா?

150 ஆவது பொய் - முதுகெலும்பு இல்லாத பழனிசாமியால் இது முடியுமா? : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

எந்த மாநிலத்துக்கு எவ்வளவு தொகை என்பதை ஒன்றிய அரசு தான் இனி நிர்ணயம் செய்யும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைக்கும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு குறைவான நிதி கிடைக்கும் என்பதை நாடு அறியும்.

ஏன் ஒழுங்காகப் பணம் கொடுக்கவில்லை என்று மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான் மாநில ஆளுநர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது பழனிசாமிக்குத் தெரியுமா?

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் இந்தத் திட்டத்தை எந்த வகையில் எல்லாம் சிதைக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் சிதைத்தார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் முறையாக, முழுமையாகப் பணம் தரவில்லை.

இந்தியா முழுமைக்கும் 2021-22 இல் 98, 468 கோடி ரூபாய் ஒதுக்கியது ஒன்றிய அரசு. 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதன் மூலமாக 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊதியம் குறைக்கப்பட்டதை உணரலாம்.

எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூபாய் 73 ஆயிரம் கோடியை விட 18 சதவிகிதம் குறைவாகவும், 2022-23 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூபாய் 89 ஆயிரம் கோடி விட 33 சதவிகிதம் குறைவாகவும் இருந்ததை ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிபரங்களே சொல்கின்றன.

100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் 2.72 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதை எந்த ஆண்டும் பா.ஜ.க. அரசு செய்யவில்லை.

2.72 லட்சம் கோடி தர வேண்டிய இடத்தில் 60 ஆயிரம் கோடி கொடுத்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. எந்த நோக்கத்திற்காக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்பட்டதோ, அத்திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு படுகொலை செய்து விட்டது. இப்போது அதற்கு பவுடர் போட்டுக் கொண்டு வருகிறார்கள். சோளக்காட்டு பொம்மைக்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறார் உளறல் பழனிசாமி.








*A.B. பர்தன்*

அர்தேந்து பூழ்சன் பர்தன் (Ardhendu Bhushan Bardhan)  (25 செப்டம்பர் 1924 – 2 ஜனவரி 2016) ஏ. பி. பர்தன் 

 இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மேனாள் பொதுச் செயலாளர் ஆவார்.

பர்தன் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற உறுப்பினராக இந்திய விடுதலை இயக்கத்தில் கலந்துகொண்டார்.


பிறகு இவர் நாக்பூரில் இருந்து தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபடலானார். பின்னர் அனைத்திந்திய தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளரானார்.

இவர் 1957 இல் மகாராட்டிரா மாநிலச் சட்டமன்றத்துக்குத் தனிவேட்பாளராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தில்லியடைந்து 1990களில் தேசிய அரசியலில் ஈடுபடலானார். பின்னர் இந்திரஜித் குப்தா இந்திய உள்துறை அமைச்சராக பதவியேற்று இந்தியப் பொதுவுடைமக் கட்சிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியதும் அப்பதவிக்கு பர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார் .


பர்தன் பிரித்தானிய இந்தியாவில் இருந்த வங்க மாகாணம் (இன்றைய வங்காள தேசம்) சார்ந்த பர்சாலில் 1924 செப்டம்பர் 25 இல் பிறந்தார்.

இவர் 15 ஆம் அகவையிலேயே நாக்பூர் சென்றதும் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டார்.

இவர் 1940 இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் சேர்ந்தார்.  

அதே ஆண்டில் இவர் அப்போது தடைவிதிக்கப்பட்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.

இவர் நாக்பூர் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார். கல்விகற்றவாறே இவர் மாணவர் இயக்கத்தை உருவாக்கி அணிதிரளச் செய்தார்.

இவர் 1945 இல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் செயலாளரானார். இவர் சட்ட்த்தில் இளவல் பட்டமும் பொருளியலில் முதுவர் பட்டமும் பெற்றார்.

பர்தன் துகிலியல், மின்சாரம், தொடர்வண்டி, பாதுகாப்பு என பலதுறைத் தொழிலாளர்களோடு நெருங்கிப் பழகினார்.

இவர் பலமுறை நாக்பூரில் இருந்து தேர்தலில் நின்றுள்ளர். இவற்றில் ஒரேஒரு முறை மகாராட்டிரா சட்டமன்றத்துக்குத் 1957 இல் தனிவேட்பாளராகத் தேர்வு செயப்பட்டார்.

இவர் மகாராட்டிர மாநில மக்களை அணிதிரட்டி, அது 1960 மே 1 இல் உருவாக வழிவகுத்தார்.

பர்தன் தில்லி சென்று தேசிய் அரசியலில் ஈடுபடலானர்.  இவர் 1994 இல் அனைத்திந்திய தொழில்சங்கத்தின் பொதுச் செயலாளரானார். மேலும் 1995 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் துணைச் செயலாளர் ஆனார்.

இந்திரஜித் குப்தா தேசிய முற்போக்குக் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சர் பதவியேற்றதும், பர்தன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரானார் இவர் இப்பதவியில் 1996 முதல் 2002 வரை இருந்தார்.

இவர் இலால் கிறிழ்சிண அத்வானியின் ’’இரத யாத்திரை’’யை எதிர்த்து நடத்திய பரப்புரைக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவர்.  பர்தன் எப்போதும் சமய சார்பற்ற இந்தியாவையே போற்றினார்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஆதரித்த, தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவாக்கத்தில் பர்தன் முதன்மையான பாத்திரம் வகித்தார்.

அன்றைய இராஜத்தானின் ஆளுநராகவிருந்த பிரதீபா பட்டேலை இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வதில் முனைவோடு பாடுபட்டார்.

வரதராஜன் முதலியார்*

01 மார்ச் 1926* - 02 ஜனவரி 1988

தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார்.

1970-களில் மிகப்பிரபலமான மாபியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.

மாத்தூங்கா மற்றும் தாராவி பகுதிகளில் அதிகமான ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

1987-ம் ஆண்டு, மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் திரைப்படம், வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை