"இந்த" 2 காரணங்களால்

தங்கம் விலை நிச்சயம் எகிறும்- - -ஆனந்த் சீனிவாசன்

 தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் ஏறுமுகத்திற்குத் திரும்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதற்கிடையே தங்கம் விலை மீண்டும் ஏற என்ன காரணம்.. இந்தாண்டு ஏறுமுகத்திலேயே தான் இருக்குமா.. அல்லது குறைய எதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அலசுகிறார்.

தங்கம் விலை நடுவில் சில நாட்கள் பெரியளவில் சரிந்த நிலையில், மீண்டும் அது விலை ஏற ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாகக் கடந்த பல நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்தே வருகிறது.


இந்தாண்டாவது தங்கம் விலை ஓரளவுக்குக் குறையும் என்ற நம்பிய பொதுமக்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கிறது. தங்கம் விலை இப்படி மீண்டும் அதிகரிக்க இரு முக்கிய காரணங்கள் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகிறார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், "இப்போது தங்கம் விலை கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ. 12,900ஆக இருக்கிறது.


கடந்த சில வாரங்களுக்கு முன்பே அது ரூ.13,000ஐ தொட்ட நிலையில், நடுவில் சரிந்து மீண்டும் விலை ஏறி இருக்கிறது. கிட்டத்தட்ட மீண்டும் ரூ.13,000ஐ நெருங்கி வருகிறது.


இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில் ஜூன் மாதம் அமெரிக்க பெட்ரல் ரிசர்வ் கவர்னராக உள்ள பவெல் மாற்றப்படுவார். அவரது பதவிக்காலம் முடிவதால் வேறு ஒருவரை டிரம்ப் நியமிப்பார்.

அவருக்கு அழுத்தம் கொடுத்து நிச்சயம் இந்தாண்டு இரண்டு முறை வட்டியைக் குறைக்க வைப்பார்கள் . இது முதல் காரணம்.


அடுத்து புவிசார் அரசியல் சூழல். கியூபா, ஈரான், கொலம்பியா மீது எல்லாம் கை வைப்பேன் என டிரம்ப் சொல்லி இருக்கிறார். வெனிசுலா மாடலை காட்டுவேனென்று சொல்லிருக்கிறார். ரஷ்யாவும் சீனாவும் நாங்களும் பதில் தர வேண்டி இருக்கும் என சொல்லி இருக்கிறார்கள்.


பெரிய ஏவுகணையை வைத்து உக்ரைனை அடித்துள்ளனர். உக்ரைன் பிரச்சினை முடியவில்லை. தைவான்- சீனா கூட உருவாகும் என தெரிகிறது.


அதே சமயத்தில் ஈரானிலும் போராட்டங்கள் பெரிதாக வெடித்துள்ளன. மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். டிரம்ப் சொல்வதைக் கேட்டே சிலர் இதுபோல ஆடுவதாக அந்நாட்டின் தலைவர் சொல்லி இருக்கிறார்.


எனவே, அங்கும் கூட டிரம்ப் தலையிட வாய்ப்பு இருக்கிறது. அமீரகத்திற்கும் சவுதிக்கும் இடையேயும் பிரச்சினை இருக்கிறது.

எனவே, உலகம் முழுக்க நிலைமை இப்படித் தான் இருக்கிறது. சவுதி- அமீரகம் டென்ஷன், ஈரான் டென்ஷன், சீனா தைவான் டென்ஷன், ரஷ்யா உக்ரைன் டென்ஷன் அமெரிக்கா வெனிசுலா என இப்படி ஏகப்பட்ட புவிசார் பதற்றங்கள் இருக்கிறது.


உலக அரசியல் இப்படி மோசமாக இருப்பதால் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் தங்கத்தை வாங்குவார்கள். ஏற்கனவே, தங்க ரிசர்வ் என்பது டாலருக்கு இணையாக வந்துவிட்டதாக ரிப்போர்ட் வந்துள்ளது. தங்கத்தின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது.


எனவே, இங்கிருந்து தங்கம் விலை ஏறவே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது" என்றார்.

சமீபத்தில் டெலாய்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் 86% இந்தியர்கள் தங்கத்தைச் செல்வம் சேகரிக்கும் ஒரு முதலீடாகவே பார்ப்பதாகக் கூறியிருந்தனர்.


இது குறித்த கேள்விக்கு, "தங்கத்தை தான் எளிதாகப் பணமாக மாற்ற முடியும் என்பதால் மக்கள் இப்படிச் செய்கிறார்கள். உண்மையான பணக்காரர்கள் பங்குச்சந்தையில் தான் பணம் பண்ணியுள்ளனர்.


ஆனால், நமக்குப் பாதுகாப்புக்குத் தங்கம் தேவை.. எனவே, பாதுகாப்பிற்காக அனைவரிடமும் 400 கிராம் தங்கம் இருக்க வேண்டும்" என்றார்.

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு பொங்கலுக்கு அரசு விடுமுறை








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை