A.I.யால் பேரழிவு?

 பேரழிவு நெருங்குது.. AI நிறுத்த வழி இல்லை..

 ஏஐ வளர்ச்சி மனித குலத்திற்கு மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் அதேநேரம் இதனால் ஏகப்பட்ட சிக்கல்களும் இருக்கவே செய்கிறது.


இதற்கிடையே ஏஐ கையை மீறிச் செல்லும்போது அதை ஆஃப் செய்யும் சுவிட்ச் மனிதர்களிடம் இருக்கும் என நம்பிக்கொண்டு இருப்பது மாயை எனச் செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப் போற்றப்படும் ஜெஃப்ரி ஹின்டன் எச்சரித்துள்ளார்.

ஏஐ படுவேகமாக வளர்ந்து வரும் நிலையில் செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப் போற்றப்படும் ஜெஃப்ரி ஹின்டன் மீண்டும் ஏஐ குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.


தான் உருவாக்க உதவிய இந்த ஏஐ தொழில்நுட்பம் குறித்து வருத்தம் கொள்வதாக ஹின்டன் கூறியுள்ளார்.


செயற்கை நுண்ணறிவு மேலும் மேலும் சக்திவாய்ந்ததாக வளர்ந்து வரும் நிலையில், அதன் ஆபத்துகளை உலகம் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதது மிகவும் வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.


அவரது பணியே இன்றைய AI அமைப்புகளுக்கு அடித்தளமிட்டாலும், அதே அமைப்புகள் இப்போது மனித குலத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக எச்சரித்தார்.


இப்போது ஏஐ நெட்வொர்க்குகள் அனைத்தும் செயல்பட ஆற்றல் தரும் நியூரோ நெட்வொர்க்குகளை உருவாக்க உதவியவர்களில் ஒருவர் தான் ஹின்டன்.


ஏஐ வேகமாக வளர்ந்தாலும் அதில் பல ஆபத்துகள் இருப்பதாக அவர் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்.


செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மிஞ்சிவிட்டதாக அவர் கூறினார்.


இனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது.. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் குறிவைத்து தூக்கும் AI


மனித குலத்தில் இல்லாத ஒரு இடத்திற்கு ஏஐ இப்போது நம்மை கூட்டி சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும், "நாமே நம்மை விடப் புத்திசாலித்தனமான அமைப்பை இதுவரை உருவாக்கியதே இல்லை..


அடுத்த 20 ஆண்டுகளுக்குள், செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவை மிஞ்சிவிடும் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.. சில துறைகளில் இது ஏற்கெனவே நடந்து வருகிறது.

இது ஒரு நிலையைத் தாண்டும்போது மனிதர்களிடம் இருந்து கட்டுப்பாடு கையைவிட்டு நழுவிவிடும். இயந்திரங்கள் அதை உருவாக்கியவர்களை விட அதிகப் புத்திசாலியாக மாறும்போது, அவை மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும்.


ஏஐ கையை மீறிவிட்டால் ஒரு ஆஃப் சுவிட்ச் மூலம் அதை அணைத்துவிடலாம் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது வேலை செய்யும் என நான் கிடைக்கவில்லை.


மேம்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு, மனிதர்களை ஏமாற்றும்.. மனிதர்கள் அந்த ஆஃப் சுவிட்ச்சை நோக்கிச் செல்ல விடாமல் தடுக்கும். எனவே, இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்கிறது என்ற கண்ணோட்டமே தவறானது.


மனிதர்கள் முடிவெடுக்கும் திறனை எப்படி மாற்றி அமைக்கலாம் என்பதை ஏஐ டூல்கள் கண்டுபிடித்துவிட்டால் ஆஃப் சுவிட்ச் வேலை செய்யாது.


செயற்கை நுண்ணறிவு எப்படி டிரைன் செய்யப்படுகிறது என்பதில்தான் உண்மையான ஆபத்து உள்ளது.

இந்த ஏஐ மெஷின்களை எப்படிப் பாதுகாப்பாக வைப்பது என்ற ஆய்வில் நாம் கவனம் செலுத்துவதில்லை.


இதைப் புறக்கணிப்பதே மனித குலம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு!


மனிதர்கள் மீது அக்கறையில்லாத வகையில் ஏஐ டூலை நாம் உருவாக்கினால், அவை நம்மை அழித்துவிடக்கூடும்


அதேநேரம் இந்தப் பேரழிவுகள் தவிர்க்க முடியாதவை அல்ல..

செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் இன்று எப்படி டிசைன் செய்யப்படுகிறது.. எப்படி டிரைன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் ஆபத்துகள் அமையும்..


மனிதர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அவை மிக வேகமாகச் சுருங்கி வருகிறது. எனவே, உரிய நேரத்தில் சரியான முடிவை நாம் எடுத்தே தீர வேண்டும்" என்றார்.

 

இனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது.. எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் குறிவைத்து தூக்கும் AI.எலான மஸ்க் போன்றோர் ஏ.ஜ யை வைத்து பணம் பார்க்க திட்டமிடுவது ஆபத்தை விரைவாக்கிவிடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை